Know the word SQUANDER...

Word of the day is SQUANDER...
Pronunciation
/ˈskwɒn.dər/

Function
The word SQUANDER is a verb.

Meaning
It means to waste something in a careless and foolish manner என்று சொல்லலாம் அதாவது பொறுப்பற்ற மற்றும் முட்டாள்தனமான முறையில் ஏதாவதொன்றை வீணாக்குதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! SQUANDER என்ற இந்த வார்த்தையானது பெருமளவு ஒருவர் தனது நேரத்தை அல்லது பணத்தை பொறுப்பற்ற முறையில் அல்லது முட்டாள்தனமான முறையில் வீணாக செலவு செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் தேர்வுக்கு தயார் செய்வதற்கு மிக குறைந்த காலமே இருக்கும் பொழுது அவனுக்கு கிடைத்த கொஞ்ச காலத்தையும் அவன் டிவி பார்த்து அல்லது மொபைல் பார்த்து அல்லது விளையாடிய அந்த கொஞ்ச நேரத்தையும் விரயம் செய்யமிடத்தில் பயன்படுத்தலாம்.

அதைப் போலவே ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்யாமல் வீணாக செலவு செய்து தேவையில்லாத காரியங்களுக்கு செலவு செய்து அந்த பணத்தை விரயம் செய்யும் இடத்தில் பயன்படுத்தலாம்.

மேலும் நண்பர்களே! இந்த SQUANDER என்ற வார்த்தையை ஒருவர் தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்தாமல் அந்த வாய்ப்பை வீணாக்கும் பொழுது அந்த இடத்திலும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு கால்பந்து வீரர் தனக்கு கோல் போடுவதற்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பை வீணடிக்கும் பொழுது அந்த இடத்தில் பயன்படுத்தலாம்.

இவ்வாறாக ஒரு நபர் தனக்கு கிடைத்த நேரத்தை, பணத்தை அல்லது நல்லதொரு வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தாமல் அதனை விரயம் செய்யும் போது அந்த இடத்திலே SQUANDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் விரயம் செய்தல் அல்லது வீணாக விரயம் செய்தல்  அல்லது வீணாக செலவு செய்தல் அல்லது வீணடித்தல் போன்ற அர்த்தங்களில் SQUANDER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
He failed in the exams because he squandered all his time.
அவன் தனது நேரத்தையெல்லாம் விரயம் செய்ததால் தேர்வில் தோல்வியடைந்தான்.

They squandered all their opportunities to win the match.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் வீணடித்தனர்.

Practice it
எனவே நண்பர்களே! SQUANDER என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...