Know the word TUMBLEDOWN...
Word of the day is TUMBLEDOWN...
/ˈtʊm.bəl.daʊn/
Function
The word TUMBLEDOWN is an adjective.
Meaning
It means in a very bad condition, especially in a state of decay என்று சொல்லலாம் அதாவது மிகவும் மோசமான குறிப்பாக மட்கிப்போன நிலையில் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இந்த TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை ஒரு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பழையதாகி கட்டிடத்தில் உள்ள பொருட்கள் மட்கி பாழடைந்து இடிந்து போகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்தை குறிக்க பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை ஆகும்.
மிகச் சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டிடத்தை பார்க்கும் பொழுது அந்த கட்டிடமானது இடிந்து விழுகின்ற நிலையில் இருப்பது போல் தெரியும் பொழுது அந்த இடத்திலே இந்த TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை தனியாக பயன்படுத்தக் கூடாது இதனை தொடர்ந்து ஒரு NOUN வர வேண்டும். எடுத்துக்காட்டாக a tumbledown farmhouse, a tumbledown building, a tumbledown hut, a tumbledown cottage etc
மாறாக The building is tumbledown என்று தனியாக பயன்படுத்தக் கூடாது.
எனவே தமிழில் இடிந்து விழுகின்ற நிலையில் உள்ள என்ற அர்த்தத்தில் இந்த TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He lives in a tumbledown farmhouse.
அவர் ஒரு இடிந்து விழுகின்ற நிலையில் உள்ள பண்ணை வீட்டில் வசிக்கிறார்.
I saw someone inside that tumbledown building.
நான் அந்த இடிந்து விழுகின்ற நிலையில் உள்ள கட்டிடத்திற்குள் யாரோ ஒருவர் இருப்பதைக் கண்டேன்.
Practice it
எனவே நண்பர்களே! TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக