Know the idiom BITE THE BULLET...

Know the Idiom is BITE THE BULLET.
Function
The idiom BITE THE BULLET is used in a sentence keeping the word BITE as a verb.

Meaning
It means to be brave in a difficult situation என்று சொல்லலாம் அதாவது ஒரு கடினமான சூழ்நிலையில் தைரியமாக இருத்தல் என்று அர்த்தம்.
 
அதாவது நண்பர்களே! ஒரு மனிதன், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் ஒரு தைரியமான முடிவை எடுக்கும் பொழுது அந்த இடத்திலே BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக உடனடியாக ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஆனால் அதே நேரத்தில் அவருக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என்று வரும் பொழுது அந்த நபர் அந்த வலியை மயக்க மருந்து இல்லாமல் தைரியமாக எதிர்கொள்ள ஒப்புக்கொள்ளும் பொழுது அந்த முடிவை இந்த BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி கூறலாம்.

இவ்வாறாக ஒரு மனிதர், ஒரு கடினமான சூழ்நிலையில், துணிகரமான ஒரு முடிவை எடுத்து அதனை செயல்படுத்தும் போது அந்த இடத்திலே BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

தமிழில் துணிகர முடிவு அல்லது தைரியமான முடிவு என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும்.

In a sentence
Though nobody dared to question the manager, he bit the bullet and questioned the manager.
மேலாளரை யாரும் கேள்வி கேட்கத் துணியாத போதிலும், அவர் துணிகர முடிவெடுத்து மேலாளரை கேள்வி கேட்டார்.

You have to bite the bullet to undergo this major surgery.
இந்த அறுவை சிகிச்சையை செய்ய நீ ஒரு தைரியமான முடிவை எடுக்க வேண்டும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த BITE THE BULLET என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...