Know the idiom BREATHE A WORD...
Know the idiom BREATHE A WORD...
The idiom BREATHE A WORD is used in a sentence keeping the word BREATHE as a verb.
Meaning
It means to tell a secret என்று அர்த்தம் அதாவது ஒரு இரகசியத்தை சொல்லுதல் என்று அர்த்தம்.
நண்பர்களே! BREATHE A WORD என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தி ஒருவர் ஆங்கிலத்தில் பேசும் பொழுது அந்த வாக்கியமானது 99 சதவீதம் NEGATIVE வாக்கியமாகவே பேசப்படுகிறது. அதாவது இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அந்த வாக்கியத்தில் NOT அல்லது NEVER போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியே பேசப்படுகிறது.
எடுத்துக்காட்டாக இரண்டு பேர் அல்லது மூன்று பேருக்கே தெரிந்த அல்லது தெரிவிக்கப்பட்ட ஒரு இரகசியத்தை மற்றவருக்கு சொல்லாதே அல்லது சொல்லிவிடாதே என்ற அர்த்தத்திலேயே 99 சதவீதம் இந்த IDIOM ஆனது பயன்படுத்தப்படுகிறது. மீதி இருக்கின்ற ஒரு சதவீதம் POSITIVE வாக்கியமாக பயன்படுத்தப்படுகிறது எனவே POSITIVE வாக்கியமாகவும் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
BREATHE A WORD என்ற இந்த IDIOM ஐ SAY A WORD என்ற PHRASE ஆகவும் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தலாம். இரண்டிற்குமே ஒரே அர்த்தம்தான்.
தமிழில் ஒரு வார்த்தை கூட சொல்லாதே அல்லது ஒரு வார்த்தை கூட பேசாதே என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும்.
In a sentence
Do not breathe a word about this to anyone.
யாரிடமும் இதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாதே.
If you breathe a word about this to anyone, you will regret it.
யாரிடமாவது இதைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னால் கூட, நீ அதற்காக வருத்தப்படுவாய்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த BREATHE A WORD என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக