Know the idiom CRY OVER SPILLED MILK...
Know the idiom CRY OVER SPILLED MILK
Function
The idiom CRY OVER SPILLED MILK is used in a sentence keeping the word CRY as a verb.
Meaning
It means to feel sorry or sad about something that has already happened என்று சொல்லலாம் அதாவது ஏற்கனவே நடந்த ஒன்றை நினைத்து வருந்துவது அல்லது வருத்தப்படுவது என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! நாம் பேசும் பொழுது சில நேரங்களில் சொல்லுவோம். அதாவது நடந்தது நடந்திருச்சு, PAST IS PAST இனிமேல் அதை பற்றி பேசுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று சொல்லுவோம் அந்த இடத்திலே CRY OVER SPILLED MILK என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.
இந்த IDIOM ஆனது கடந்த காலத்தை குறித்து பேசுவதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை என்று எதிர்மறை வாக்கியமாக பேசும் பொழுது அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால் இந்த IDIOM ஐ பயன்படுத்தி ஒரு வாக்கியம் அமைக்கும் பொழுது, அந்த வாக்கியத்தில் NO, NOT, NEVER போன்ற வார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டாக
It is no use crying over spilled milk என்று வாக்கியத்தை ஆரம்பிக்கலாம் அதாவது கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை என்று அர்த்தம்.
It is waste of time crying over spilled milk என்று வாக்கியத்தை ஆரம்பிக்கலாம் அதாவது கடந்த காலத்தைப் பற்றி பேசுவது நேரத்தை வீணடிக்கும் என்று அர்த்தம்.
There is no point in crying over spilled milk என்று வாக்கியத்தை ஆரம்பிக்கலாம் அதாவது கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் அர்த்தம் இல்லை என்று அர்த்தம்.
But crying over spilled milk will not help என்று வாக்கியத்தில் பயன்படுத்தலாம் அதாவது கடந்த காலத்தைப் பற்றி பேசுவது உதவாது என்று அர்த்தம்.
In a sentence
There is no use crying over spilled milk. Let's discuss about the future.
கடந்த காலத்தைப் பற்றி பேசுவதில் எந்தவித பயனும் இல்லை. எதிர்காலத்தைப் பற்றி விவாதிப்போம்.
Practice it
எனவே நண்பர்களே! இந்த CRY OVER SPILLED MILK என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக