Know the idiom FINAL NAIL IN THE COFFIN...

Know the Idiom FINAL NAIL IN THE COFFIN...
Function
The idiom FINAL NAIL IN THE COFFIN is a noun.

Meaning
It refers to the final event or action that leads to the complete and irreversible downfall என்று சொல்லலாம் அதாவது முழுமையான மற்றும் மீளமுடியாத வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் இறுதி நிகழ்வு அல்லது செயல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! எவ்வாறாக ஒரு சவப்பெட்டியில் இறந்த மனிதனை வைத்து சவப்பெட்டியை இறுதி ஆணியால் அடித்து மூடும் பொழுது அந்த மனிதனுக்கான எல்லாமே நிறைவுக்கு வருகிறதோ அதைப்போல தொடர்ந்து பல தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த ஒரு நிறுவனமோ அல்லது ஒரு மனிதனோ இறுதியாக சந்திக்கின்ற ஒரு தோல்வியோடு அந்த நிறுவனத்தின் அல்லது அந்த மனிதனின் நல்ல பெயருக்கு அல்லது வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும் பொழுது அந்த இடத்திலே அந்த நிறுவனம் அல்லது அந்த மனிதன் சந்தித்த அந்த இறுதியான தோல்வியை FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ கொண்டு குறிக்கலாம்.

FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ LAST NAIL IN THE COFFIN என்றும் பயன்படுத்தலாம். இரண்டிற்குமே ஒரே அர்த்தம்தான்.

எனவே தமிழில் இறுதி ஆணி அடித்தல் என்ற அர்த்தத்தில் FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
Her arrest for embezzlement was the final nail in the coffin for her company's closure.
மோசடி செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டதே அவரது நிறுவனத்தை மூடுவதற்கான இறுதி ஆணி அடித்ததாகும்.

The politician's scandal was the last nail in the coffin for his career as a politician.
அரசியல்வாதி செய்த ஊழல் அவரது அரசியல் வாழ்க்கைக்கு அவர் அடித்த இறுதி ஆணியாகும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த FINAL NAIL IN THE COFFIN என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...