Know the phrasal verb PUT DOWN...

Word of the day is PUT DOWN...
Pronunciation
/pʊt daʊn/

Function
The word PUT DOWN is a phrasal verb and it is used as a verb in a sentence.

Note
PUT DOWN என்ற இந்த phrasal verb ஐ PUT SOMETHING DOWN அல்லது PUT SOMEONE DOWN என்று இரண்டு அர்த்தங்களில் ஆறு விதமாக பயன்படுத்தலாம்.

Meaning
முதலாவதாக to keep something down என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது மேலே உள்ள ஒரு நிலையிலிருக்கும் ஒரு பொருளையோ அல்லது ஒரு மனிதனையோ அதற்கு கீழே உள்ள ஒரு நிலையில் மெதுவாக வைத்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக
Kindly put the mobile down on the table.
தயவுசெய்து மொபைலை மேசையில் மேலே வைக்கவும்.

Kindly put the baby down on the floor 
தயவுசெய்து குழந்தையை கீழே தரையின் மேல் வைக்கவும்.

இரண்டாவதாக to write or record something என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது எதையாவதொன்றை டைரியில் அல்லது நோட்டில் எழுதுதல் அல்லது பதிவு செய்தல் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக
You can put down your thoughts in a paper and then give it to me.
உங்களது எண்ணங்களை ஒரு காகிதத்தில் எழுதி அதனை என்னிடம் கொடுக்கவும்.

மூன்றாவதாக to deposit some money என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு பொருளை வாங்கும்போது வைப்புத் தொகையாக பணத்தை செலுத்தும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக 
You should put down some money if you want to book the order.
நீங்கள் ஆர்டரை முன்பதிவு செய்ய விரும்பினால் கொஞ்சம் பணத்தை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும்.

நான்காவதாக to insult someone என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒருவரை அவமதித்து தரம் தாழ்த்தி பேசும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக
He always puts down others in order to show him better.
அவர் தன்னை சிறப்பாகக் காட்டுவதற்காக மற்றவர்களை எப்போதும் தாழ்த்தி பேசுகிறார்.

ஐந்தாவதாக to kill என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது mercy killing என்று சொல்லுவோம் அதாவது ஒரு விலங்கை வயதானதின் காரணமாகவோ அல்லது நோயின் காரணமாகவோ அல்லது உடலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவோ அது தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது கருணை கொலை செய்யும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக
It is better to put down the horse as it has been suffering a lot.
குதிரை மிகவும் கஷ்டப்படுவதால் அதனை கருணை கொலை செய்வது நல்லது.

ஆறாவதாக to reduce என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் அதாவது ஒரு பொருளின் விலையை அல்லது ஏதாவதொன்றின் கட்டணத்தை குறைக்கும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக
The Electricity Board has a plan to put down the electricity charges.
மின் கட்டணத்தை குறைக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது.

Practice it
எனவே நண்பர்களே! PUT DOWN என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...