Know the phrase NO LONGER...

Know the phrase NO LONGER...
Function
The phrase NO LONGER is an adverb.

Meaning
It is used to indicate that something that was valid in the past is not valid anymore என்று சொல்லலாம் அதாவது கடந்த காலத்தில் செல்லுபடியாகிய ஒன்று இனி செல்லுபடியாகாது என்பதைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

மேலும் NO LONGER என்ற இந்த PHRASE ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது அதனை எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியமாகும்.

எனவே கீழ்காணும் வாக்கியங்களை கற்றுக் கொள்வதன் மூலமாக இதனை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

1) DO VERB or ACTION VERB ஐ கொண்ட ஒரு வாக்கியத்தில் NO LONGER என்ற இந்த PHRASE ஐ SUBJECT க்கும் VERB க்கும் இடையில் அமைக்க வேண்டும்.

FOR EXAMPLE
Raja no longer plays football என்ற வாக்கியத்தில் DO VERB ஆக PLAY என்ற VERB வந்துள்ளது ஆதலால் NO LONGER என்ற இந்த PHRASE ஆனது SUBJECTக்கும் VERB க்கும் இடையில் அமைந்துள்ளது மேலும் இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ராஜா இனி ஒரு போதும் கால்பந்து விளையாட மாட்டார் என்பதாகும்  மேலும் இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் இதற்கு முன்பு வரை கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த ராஜா இனி ஒரு போதும் கால்பந்து விளையாட மாட்டார் என்பதாகும்.


2) BE VERB or AUXILIARY VERB ஐ கொண்ட ஒரு வாக்கியத்தில் NO LONGER என்ற இந்த PHRASE ஐ BE VERB க்கு அடுத்ததாக அமைக்க வேண்டும்.

FOR EXAMPLE
Raja is no longer interested in playing football என்ற வாக்கியத்தில் BE VERB ஆக IS என்ற VERB வந்துள்ளது ஆதலால் NO LONGER என்ற இந்த PHRASE ஆனது VERB க்கு அடுத்ததாக அமைந்துள்ளது மேலும் இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ராஜாவுக்கு கால்பந்து விளையாடுவதில் இனி ஒருபோதும் விருப்பமில்லை என்பதாகும் மேலும் இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் இதற்கு முன்பு வரை கால்பந்து விளையாடுவதை விரும்பிய ராஜா இனி ஒரு போதும் கால்பந்து விளையாடுவதை விரும்பவில்லை என்பதாகும்.

3) MODAL AUXILIARY VERB ஐ கொண்ட ஒரு வாக்கியத்தில் NO LONGER என்ற இந்த PHRASE ஐ MODAL AUXILIARY VERB க்கு அடுத்ததாக அமைக்க வேண்டும்.

FOR EXAMPLE
Raja can no longer play football here என்ற வாக்கியத்தில் MODAL VERB ஆக CAN என்ற VERB வந்துள்ளது ஆதலால் NO LONGER என்ற இந்த PHRASE ஆனது MODAL VERB க்கு அடுத்ததாக அமைந்துள்ளது மேலும் இதனுடைய அர்த்தம் என்னவென்றால் ராஜா இனி ஒருபோதும் இங்கே கால்பந்து விளையாட முடியாது என்பதாகும் மேலும் இதனுடைய உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்றால் இதற்கு முன்பு வரை இங்கு கால்பந்து விளையாடிய ராஜா இனி ஒருபோதும் இங்கு விளையாட முடியாது என்பதாகும்.

4) NO LONGER என்ற இந்த PHRASE ஐ பயன்படுத்தி ஒரு விஷயத்தை வலியுறுத்தி பேசும்பொழுது NO LONGER என்ற இந்த PHRASE ஐ வாக்கியத்தின் முதலில் அல்லது இறுதியில் பயன்படுத்த வேண்டும்.

FOR EXAMPLE
No longer will I tolerate this behaviour.
(OR)
I will tolerate this behaviour no longer.

இந்த நடத்தையை நான் இனி ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

More sentences

She no longer eats gluten because she discovered she has celiac disease.

The company no longer uses plastic bags because of their negative impact on the environment.

He no longer enjoys watching horror movies because they give him nightmares.

They no longer speak to each other after their big argument last week.

I am no longer interested in pursuing a career in law; I have decided to study medicine instead.

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் இனி ஒருபோதும் இல்லை என்ற அர்த்தத்தில் NO LONGER என்ற இந்த PHRASE ஐ பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...