Know the word ARSONIST...

Word of the day is ARSONIST
Pronunciation
/ˈɑːr.sən.ɪst/

Function
The word ARSONIST is a noun.

Meaning 
It refers to a criminal who illegally sets fire to property என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமாக சொத்துக்களுக்கு தீ வைக்கும் குற்றவாளி என்று அர்த்தம்.

நண்பர்களே! இந்த ARSONIST ஐ தீ வைப்பதில் ஸ்பெஷலிஸ்ட் என்று சொல்லலாம். ஏனெனில் இவர்கள் தங்களுடைய கோபத்தை தீ வைப்பதன் மூலமாகதான் காட்டுவார்கள்.

ஒருவர் தன்னுடைய வீட்டையோ அல்லது நிலத்தையோ அல்லது காரையோ அல்லது ஏதாவதொன்றையோ தீ வைத்து அதன் மூலமாக காசு சம்பாதிக்க திட்டமிடும்போது அவர்களை இந்த ARSONIST என்று இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். மேலும் ஒருவர் தனது கோபத்தை காட்டும் விதமாக அல்லது பழிக்கு பழி வாங்கும் விதமாக பிறரின் சொத்தை எரித்து சேதப்படுத்தும் போது, நாசம் செய்யும் போது அவரையும் இந்த ARSONIST என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

மொத்தத்தில் சட்டத்திற்கு விரோதமாக ஒருவர் தன்னுடைய சொத்தையோ அல்லது பிறரது சொத்தையோ தீ வைத்து அழிக்கும் பொழுது அந்த நபரை ARSONIST என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே தமிழில் சட்ட விரோதமாக தீவைப்பவர் அல்லது சட்ட விரோதமாக தீவைத்து நாசம் செய்பவர் அல்லது தீவைத்து நாசம் செய்பவர் என்ற அர்த்தத்தில் ARSONIST என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The police said that the suspect might be an arsonist.
குற்றவாளி தீவைத்து நாசம் செய்பவராக இருக்கலாம் என போலிஸார் தெரிவித்தனர்.

The arsonist who burned his company was caught red-handed.
சட்ட விரோதமாக தனது நிறுவனத்தை தீவைத்து எரித்தவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

Practice it
எனவே நண்பர்களே! ARSONIST என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...