Know the word AVALANCHE...

Word of the day is AVALANCHE...
Pronunciation
/ˈæv.əl.æntʃ/

Function
The word AVALANCHE can be used as verb and noun.

Meaning
It means a large amount of ice, snow, and rock falling quickly down the side of a mountain என்று சொல்லலாம் அதாவது ஒரு பெரிய அளவில் பனிக்கட்டி, பனி மற்றும் பாறை போன்றவை மலையின் ஒரு பகுதியில் விரைவாக சரிந்து விழுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பனிச்சரிவு ஏற்படும் பொழுது அந்தச் சரிவில் பனி, பனிக்கட்டி, பனிப்பாறை என எல்லாமே சேர்ந்து ஒன்றாக மிகவும் வேகமாக கீழ்நோக்கி சரிந்து விழும் பொழுது அதனை இந்த AVALANCHE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

இவ்வாறாக பனிச்சரிவு ஏற்படும் போது அந்த பனிச்சரிவானது மிகவும் வேகமாக தொலைதூரம் வரை பயணிக்க கூடியது இவ்வாறாக பயணிக்கும் பொழுது உயிரினங்கள் அதனூடே சிக்கி மரணமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

இதே அர்த்தத்தில் இந்த வார்த்தையை உருவகமாகவும் பயன்படுத்தலாம் அதாவது ஒரே நேரத்தில் பல வேலைகள் ஒன்றாக வந்து, சூழ்நிலை சமாளிக்க முடியாத அளவிற்கு போகும்பொழுது அந்த இடத்திலே AVALANCHE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

தமிழில் பனிச்சரிவு அல்லது பனிச்சரிதல் அல்லது எக்கச்சக்கமாக அல்லது ஏராளமாக போன்ற அர்த்தத்தங்களில் இந்த AVALANCHE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Luckily, no skier was caught in the avalanche.
அதிர்ஷ்டவசமாக பனிச்சறுக்கு வீரர் யாரும் பனிச்சரிவில் சிக்கவில்லை.

Though she received avalanche of orders, she managed it by herself.
அவளுக்கு ஆர்டர்கள் ஏராளமாக வந்த போதிலும், அவளே அதனை சமாளித்தாள்.

Practice it
எனவே நண்பர்களே! AVALANCHE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...