Know the word BIG-TICKET...
Word of the day is BIG-TICKET...
/ˈbɪɡˌtɪkɪt/
Function
The word BIG-TICKET is an adjective.
Meaning
The word BIG-TICKET is used to describe things that cost a lot of money to buy என்று சொல்லலாம் அதாவது வாங்குவதற்கு நிறைய பணம் செலவாகும் பொருட்களை விவரிக்க பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.
அதாவது ஒரு மனிதன் பல நாட்களாக மெனக்கெடுத்து காசு சேமித்து வாங்கும் அளவிற்கு மிகவும் விலையுயர்ந்த பொருட்களை இந்த BIG-TICKET என்ற இந்த வார்த்தையை கொண்டு குறிப்பிடலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு நிலம் வாங்குவது அல்லது ஒரு வீடு வாங்குவது அல்லது ஒரு கார் வாங்குவது அல்லது விலை உயர்ந்த மின்சாதன பொருட்கள் வாங்குவது அல்லது தங்க நகைகள் வாங்குவது போன்றவற்றை சொல்லலாம்.
எனவே தமிழில் விலை உயர்ந்த பொருள் அல்லது விலை மிகுந்த பொருள் என்ற அர்த்தத்தில் இந்த BIG-TICKET என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
மேலும் இந்த வார்த்தையை ஒரு வாக்கியதில் பயன்படுத்தும் பொழுது இடையில் இருக்கும் HYPHEN SYMBOL ஐ யும் சேர்த்தே எழுத வேண்டும்.
In a sentence
It seems that you are saving some money for some big-ticket items.
சில விலை உயர்ந்த பொருள் வாங்குவதற்காக நீ கொஞ்சம் பணத்தைச் சேமித்து வருவதாகத் தெரிகிறது.
He has lot of money because he has been buying lot of big-ticket items.
அவனிடத்தில் நிறைய பணம் இருக்கிறது ஏனெனில் அவன் நிறைய விலை உயர்ந்த பொருட்களை வாங்குகிறான்.
Practice it
எனவே நண்பர்களே! BIG-TICKET என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக