Know the word CRANKY...

Word of the day is CRANKY...

Pronunciation

/ˈkræŋ.ki/

Function
The word CRANKY is an adjective.

Note
The word CRANKY has two meanings.

Meaning
முதலாவதாக It means easily annoyed என்று சொல்லலாம் அதாவது எளிதில் எரிச்சல் அடைதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதனுக்கு சகிப்புத்தன்மை என்ற ஒன்று குறைவாக இருக்கிற பொழுது அவன் எல்லா விஷயத்திற்கும் எரிச்சல் அடைவான். அவன் எதை பார்த்தாலும் எரிச்சல் அடைவான், எதைக் கேட்டாலும் எரிச்சல் அடைவான். இவ்வாறாக ஒரு மனிதன் மிகவும் எளிதாக எரிச்சல் அடையக் கூடியவனாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே தமிழில் எளிதாக எரிச்சலடைகின்ற அல்லது எல்லாவற்றிற்கும் எரிச்சலடைகின்ற அல்லது எதற்கெடுத்தாலும் எரிச்சலடைகின்ற போன்ற அர்த்தங்களில் இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

Meaning
இரண்டாவதாக It means strange and unusual என்று சொல்லலாம் அதாவது விசித்திரமான மற்றும் வழக்கத்திற்கு மாறான என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு மனிதனின் எண்ணங்களும் செயல்களும் வித்தியாசமாக இருக்கும் பொழுது, வழக்கத்திற்கு மாறான முறையில் இருக்கும் பொழுது அந்த மனிதனையும் இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்..

எனவே தமிழில் வித்தியாசமான அல்லது விசித்திரமான அல்லது வழக்கத்திற்கு மாறான போன்ற அர்த்தங்களில் இந்த CRANKY என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

In a sentence
As she is cranky, nobody likes to speak with her.
அவள் எல்லாவற்றிற்கும் எரிச்சலடைகின்றவளாக இருப்பதால், யாரும் அவளுடன் பேச விரும்புகிறதில்லை.

Usually we laugh at his cranky ideas.
பொதுவாக நாங்கள் அவனுடைய அற்பத்தனமான கருத்துக்களைப் பார்த்து சிரிப்போம்.

Practice it
எனவே நண்பர்களே! CRANKY என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...