Know the word DUBIOUSLY...

Word of the day is DUBIOUSLY...

Pronunciation

/ˈduː.bi.əs.li/

Function
The word DUBIOUSLY is an adverb.

Meaning
It means in a way that is probably not true or fair, or that is probably not honest என்று சொல்லலாம் அதாவது ஒருவேளை ஒரு விஷயம் உண்மையாகவோ அல்லது நியாயமாகவோ அல்லது நேர்மையாகவோ இல்லாத வகையில் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! நாம் நம் கண்களால் பார்க்கிற ஒரு விஷயமோ அல்லது காதால் கேட்கிற ஒரு விஷயமோ நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிற பொழுது அல்லது அதனுடைய உண்மைத்தன்மை நமக்கு கேள்விக்குறியதாக தெரியும் பொழுது அந்த இடத்திலே DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக உங்களுடைய ஆதார் அட்டையை ஒருவர் சரி பார்க்கும் பொழுது அந்த ஆதார் அட்டையில் உள்ள உங்களது புகைப்படத்தையும் உங்களையும் ரொம்ப நேரமாக சந்தேகத்தோடு ஒருவர் பார்க்கும் பொழுது அந்த இடத்திலே இந்த DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு தேர்தல் முடிவைக் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது அல்லது பார்த்து கொண்டிருக்கும் பொழுது அங்கே சொல்லப்படும் முடிவுகள் உங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் பொழுது இந்த DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் சந்தேகத்திற்குரிய வகையில் என்ற அர்த்தத்தில் இந்த DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
Business men around the world have started to look at Indian stock market dubiously.
உலகெங்கிலும் உள்ள வர்த்தகர்கள் இந்திய பங்குச்சந்தையை சந்தேகத்திற்குரிய வகையில் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.

I was dubiously looking at my photo in the Aadhar card.
நான் ஆதார் அட்டையில் எனது புகைப்படத்தை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Practice it
எனவே நண்பர்களே! DUBIOUSLY என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...