Know the word PENETRALIA...
Word of the day is PENETRALIA...
Pronunciation
/ˌpɛ.nəˈtɹeɪ.li.ə/
Function
The word is a noun.
Meaning
It refers to a secret or hidden place of a building என்று சொல்லலாம் அதாவது ஒரு கட்டிடத்தினுள் இரகசியமாக அல்லது மறைவாக இருக்கும் ஒரு பகுதி என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்தின் உரிமையாளர்கள் அல்லது அந்த இடத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்பட்ட அறை என்று ஒன்று இருக்கும். அது வீடாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி அல்லது ஒரு அலுவலகமாக இருந்தாலும் சரி.
பொதுவாக அந்த அறைக்குள் அந்த இடத்தின் உரிமையாளர்கள் உள்ளே செல்வார்கள் அல்லது அந்த இடத்தில் வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மட்டுமே உள்ளே செல்வார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே செல்வதற்கு அனுமதிக்க படமாட்டார்கள். ஏனெனில் அந்த அறையினுள் வீட்டின் மிகவும் முக்கியமான பொருட்களை வைத்திருப்பார்கள் அல்லது ஒரு அலுவலகமாக இருந்தால் அந்த அலுவலகம் சார்ந்த மிகவும் முக்கியமான கோப்புகளை அந்த இடத்தில் வைத்து பராமரிப்பார்கள்.
இவ்வாறாக ஒரு வீட்டிலோ அல்லது ஒரு அலுவலகத்திலோ அல்லது கோவிலிலோ தனிமைப்படுத்தப்பட்ட அறை என்று ஒன்று இருக்கும் பொழுது அந்த அறையை இந்த PENETRALIA என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.
எனவே தமிழில் இரகசிய அறை அல்லது உள்ளறை அல்லது கருவூலம் போன்ற அர்த்தங்களில் இந்த PENETRALIA என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The penetralia of the building is in the basement.
கட்டிடத்தின் இரகசிய அறை அடித்தளத்தில் உள்ளது.
She took me to the penetralia of her house where She had stored all the valuable goods.
மதிப்புமிக்க பொருட்களை சேமித்து வைத்திருந்த உள்ளறைக்கு அவள் என்னை அழைத்துச் சென்றாள்.
Practice it
எனவே நண்பர்களே! PENETRALIA என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக