Know the word PICK-ME-UP...

Word of the day is PICK-ME-UP...
Pronunciation
/ˈpɪk·miˌʌp/

Function
The word is a noun.

Meaning
It refers to something, often food or drink, that gives you more energy or makes you feel better என்று சொல்லலாம் அதாவது ஒருவரை நன்றாக உணர வைக்கிற அல்லது ஆற்றலை அதிகரிக்கிற ஏதாவதொன்று பொதுவாக உணவு அல்லது பானம் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! உடல் சோர்விலோ அல்லது மனசோர்விலோ இருக்கும் ஒரு மனிதன் தற்காலிகமாக ஊக்கம் பெறும் விதமாக உண்ணும் உணவையோ அல்லது குடிக்கும் பானத்தையோ அல்லது செய்யும் ஏதாவதொரு செயல்பாட்டையோ இந்த PICK-ME-UP என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எடுத்துக்காட்டாக உணவு வகைகளில்  பழங்கள் அல்லது சாக்லேட் போன்ற இனிப்பு வகைகளை சாப்பிடுதலை சொல்லலாம். பானமாக சொல்லும் பொழுது டீ குடித்தல் அல்லது காபி குடித்தல் போன்றவற்றை சொல்லலாம். செயல்பாடு என்று சொல்லும் பொழுது ஏதாவதொரு சின்ன நடை பயிற்சி அல்லது ஒரு சின்ன உடற்பயிற்சி போன்றவற்றை சொல்லலாம்.

தமிழில் ஊக்கமளிக்கும் உணவு அல்லது உற்சாக பானம் அல்லது உற்சாகமளிக்கும் செயல்பாடு  போன்ற அர்த்தங்களில் இந்த PICK-ME-UP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
I was feeling so tired and so I had a chocolate for a pick-me-up.
நான் மிகவும் சோர்வாக உணர்ந்தேன் அதனால் நான் ஊக்கமளிக்கும் உணவாக ஒரு சாக்லேட் சாப்பிட்டேன்.

I had a stressful day today and so I want to go for a walk as a pick-me-up.
எனக்கு இன்று மன அழுத்தம் நிறைந்த நாளாக இருந்தது அதனால் நான் உற்சாகமளிக்கும் செயல்பாடாக நடக்க விரும்புகிறேன்.

Practice it
எனவே நண்பர்களே! PICK-ME-UP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...