Know the word SINECURE...

Word of the day is SINECURE...
Pronunciation
/ˈsɪnɪkjʊər/

Function
The word SINECURE is a noun.

Meaning
It means a paid position that involves little or no work என்று சொல்லலாம் அதாவது கொஞ்சம் கூட வேலையே இல்லாத ஒரு வேலைக்கு ஊதியம் வழங்குவது என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! எந்தவித உடல் உழைப்பு இல்லாமலும் எந்த வித அறிவு பகிர்வு இல்லாமலும் ஒருவர் மிக குறைந்த வேலையை செய்து மிக அதிக ஊதியம் பெறும்பொழுது அந்த இடத்திலே SINECURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக அரசாங்கத்தில் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் அல்லது பெரிய பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பொறுப்பை வகிப்பவர்கள் பெயரளவிலேயே வேலை செய்பவர்களாக இருப்பார்கள். அவர்களின் வேலை முக்கியமான நிகழ்வுகளில் பங்கெடுக்க வேண்டியது இருக்கும் மேலும் முக்கியமான கோப்புகளில் கையெழுத்து போட வேண்டி இருக்கும் இதை தவிர பெரிய அளவில் உடல் உழைப்போ அல்லது அறிவு பகிர்வோ செய்ய வேண்டியது இருக்காது ஆனால் அவர்கள் பெறும் ஊதியமோ மற்ற எல்லாரையும் விட மிக அதிகமாக இருக்கும் இப்படிப்பட்ட இடங்களில் தான் SINECURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும்.

மேலும் SINECURE என்ற இந்த வார்த்தையானது NEGATIVE ஆன  அர்த்தம் கொண்ட ஒரு வார்த்தையாகவே பயன்படுத்த படுகிறது.

தமிழில் வேலையில்லாத வேலை அல்லது வேலையின்றி சம்பளம் பெறும் வேலை போன்ற அர்த்தத்தங்களில் இந்த SINECURE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
His job as a director of the board is seen as a sinecure.
நிறுவனத்தின் இயக்குநராக அவர் பணிபுரிவது ஒரு வேலையில்லாத வேலையாக பார்க்கப்படுகிறது.

He resigned his job because he found it as a sinecure.
அவனது வேலை ஒரு வேலையில்லாத வேலையாக அவனுக்கு தெரிந்ததால் அவன் வேலையை விட்டு விலகினான்.

Practice it
எனவே நண்பர்களே! SINECURE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...