Know the word STATUS QUO...

Word of the day is STATUS QUO...
Pronunciation
/ˌsteɪ.t̬əs ˈkwoʊ/

Function
The word is a noun.

Meaning
It refers to the present situation or condition என்று சொல்லலாம் அதாவது தற்போதைய சூழ்நிலை அல்லது நிலை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த STATUS QUO என்ற இந்த வார்த்தையானது ஒரு 
NEGATIVE ஆன அர்த்தத்தை கொண்ட ஒரு வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது.

அதாவது ஒரு நிறுவனமோ அல்லது ஒரு தொழிலோ அல்லது ஒரு முடிவோ எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதே நிலையில் பல நாட்களாக, பல வருடங்களாக நீடித்துக் கொண்டே இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த STATUS QUO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பவர்கள் எந்தவித முன்னேற்றத்தையோ அல்லது மாற்றத்தையோ விரும்பாத பொழுது அவர்கள் தற்போது இருக்கும் நிலையையே அதாவது STATUS QUO வையே தொடர்ந்து நீடித்திருக்க விரும்புவார்கள். அதே நேரத்தில்  புதிய சிந்தனைகளை கொண்ட துடிதுடிப்பான ஒருவர் பொறுப்பில் வரும் பொழுது புது முயற்சிகளை செய்ய ஆர்வத்துடன் இருப்பார். இப்படிப்பட்டவர்கள் தற்போது இருக்கும் நிலையை மாற்ற முயற்சி செய்வர் அதாவது STATUS QUO வை மாற்ற முயற்சி செய்வர்.

எனவே தமிழில் தற்போதைய நிலை அல்லது இதுவரை உள்ள நிலை  என்ற அர்த்தத்தில் இந்த STATUS QUO என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The owner of the company is not happy with the status quo.
இந்நிறுவனத்தின் உரிமையாளருக்கு தற்போதைய நிலை சந்தோஷம் தருவதாக இல்லை.

It seems that the manager wants to maintain the status quo. He is not interested in any changes.
மேலாளர் தற்போதைய நிலையைத் தொடர விரும்புவதாகத் தெரிகிறது.  அவருக்கு எந்த மாற்றத்திலும் ஆர்வம் இல்லை.

Practice it
எனவே நண்பர்களே! STATUS QUO என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...