Know the word STEWARDSHIP...

Word of the day is STEWARDSHIP...
Pronunciation
/ˈstu·ərdˌʃɪp/

Function
The word STEWARDSHIP is a noun.

Meaning
It refers to care or management என்று சொல்லலாம் அதாவது பராமரிப்பு அல்லது மேலாண்மை என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! STEWARDSHIP என்ற இந்த வார்த்தையானது ஒரு நபர், தன்னிடம் பொறுப்பாக வழங்கப்பட்ட வளங்களை பராமரித்தல் அல்லது பாதுகாத்தல் அல்லது மேலாண்மை செய்தல் என்னும் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

வளங்கள் என்று சொல்லும் பொழுது அது இயற்கை வளங்களான நீர், நிலம், காற்று போன்றவற்றை குறிக்கலாம் மேலும் பொருளாதார வளங்களான ஒருவருடைய சொத்துக்கள், முதலீடுகள் மற்றும் பணம் போன்றவற்றை குறிக்கும்.

இவ்வாறாக ஒருவருக்கு பொறுப்பு வழங்கப்படும் பொழுது, அந்த நபர் பொறுப்பாக வழங்கப்பட்ட அந்த வளங்களை பராமரித்தல், பாதுகாத்தல் மேலும் அவற்றை பெருக்கி வளர செய்தல் போன்றவற்றில் முடிவுகள் எடுக்கவும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது.

மொத்தத்தில் STEWARDSHIP என்பது தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட வளங்களை பாதுகாப்பதிலும் பராமரிப்பதிலும் நம்பிக்கைகுரியவராக இருப்பது என்று சொல்லலாம்.

தமிழில் பாதுகாக்கும் பொறுப்பு அல்லது பராமரிக்கும் பொறுப்பு அல்லது நிர்வகிக்கும் பொறுப்பு போன்ற அர்த்தங்களில் இந்த STEWARDSHIP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
He was given the stewardship of our family's assets.
எங்கள் குடும்பத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

We need a trustworthy person to entrust the stewardship of the profits.
இலாபத்தை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க நம்பகமான நபர் தேவை.

Practice it
எனவே நண்பர்களே! STEWARDSHIP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...