Know the word UNSCRUPULOUS...
Word of the day is UNSCRUPULOUS...
/ʌnˈskruː.pjə.ləs/
Function
The word UNSCRUPULOUS is an adjective.
Meaning
It describes someone or something that behaves in a dishonest, unfair or unethical way என்று சொல்லலாம் அதாவது நேர்மையற்ற, நியாயமற்ற அல்லது நெறிமுறையற்ற முறையில் நடந்து கொள்ளும் ஒருவர் அல்லது ஏதாவதொன்று என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு நபர் தன்னுடைய எண்ணம் அல்லது குறிக்கோள் நிறைவேற வேண்டும் என்பதற்காக நேர்மையற்ற முறையில் அல்லது நியாயமற்ற முறையில் நடந்து கொள்ளும் பொழுது அந்த நபரை UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை கொண்டு விவரிக்கலாம்.
மேலும் இவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் பிறருக்கு ஏற்படும் தீங்கினை குறித்து சிறிதும் கலக்கம் அடையாதவர்களாகவே, மனசாட்சி குத்தாதவர்களாகவே இருப்பார்கள்.
உதாரணமாக, ஒரு BUSINESSMAN தனது வாடிக்கையாளர்களை ஏமாற்றி, தன்னிடம் பணிபுரியும் தொழிலாளர்களைச் சுரண்டி தனது லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்யும் பொழுது அந்த நபரை விவரிக்க UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
அதேபோலவே ஒரு அரசியல்வாதி தனது அதிகாரம் மற்றும் அரசியல் செல்வாக்கைப் அதிகரிப்பதற்காக ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் பொழுது அந்த நபரை விவரிக்க UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எனவே தமிழில் நேர்மையற்ற அல்லது நியாயமற்ற அல்லது மனசாட்சியற்ற போன்ற அர்த்தங்களில் UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
The unscrupulous customer tried to return a used item by claiming it was new.
நேர்மையற்ற வாடிக்கையாளர் பயன்படுத்திய ஒரு பொருளை புதியது எனக் கூறி திருப்பித் தர முயன்றார்.
The unscrupulous student cheated on the exam by looking at someone else's answers.
நேர்மையற்ற மாணவன் மற்றொருவரின் விடைகளைப் பார்த்து தேர்வெழுதி ஏமாற்றினான்.
Practice it
எனவே நண்பர்களே! UNSCRUPULOUS என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக