Introduction to PREPOSITIONS in Tamil...

PREPOSTIONS in Tamil...
நண்பர்களே! இந்த பதிவானது "PREPOSTION"க்கு ஒரு INTRODUCTION. அதாவது PREPOSTION என்றால் என்ன என்பது பற்றிய ஒரு சிறு பதிவு. இதற்கு பிறகு PREPOSTIONS ஒவ்வொன்றையும் தனியாகவும் விரிவாகவும் படிப்போம்.

முதலில் Prepositions are functions. 
They can not be translated like nouns and verbs என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

அதாவது Prepositions are functions என்று சொல்லும்பொழுது என்ன அர்த்தமென்றால் PREPOSITIONS என்பது ஒரு சார்புகள் என்று அர்த்தம் அதாவது சார்ந்து இருத்தல் என்று அர்த்தம் அதாவது PREPOSITIONS ஆனது NOUNS மாதிரியோ அல்லது VERBS மாதிரியோ ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மிகச்சரியாக மாற்றி அதற்கான அர்த்தத்தை புரிந்து கொள்ள முடியாது மாறாக இவை சார்புகள் என்பதால் இவை இன்னொரு வார்த்தையை சார்ந்துதான் இருக்கும். 

அதனால் இவற்றின் அர்த்தத்தை மிகச்சரியாக ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்ற முடியாது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

இதற்கான எடுத்துக்காட்டுகளை பார்க்கும்பொழுது இதனை இன்னும் தெளிவாக உங்களால் புரிந்து கொள்ளமுடியும்.

எடுத்துக்காட்டு : 1

My mom is at home.
எனது அம்மா வீட்டில் இருக்கிறார்.

இங்கே இந்த AT என்ற PREPOSITION ஆனது இந்த HOME என்ற வார்த்தையை சார்ந்துள்ளது என்பதுதான் உண்மை. இந்த AT என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் தனியாக பார்க்கிறோம். ஆனால், தமிழில் பார்க்கும்போது நன்றாக புரியும். அதாவது இந்த "வீட்டில்" என்ற வார்த்தைக்கு உள்ளுக்குள்ளே இந்த "இல்" என்ற வார்த்தை வந்துள்ளது.

எடுத்துக்காட்டு : 2

My mom is in the house. 
எனது அம்மா வீட்டில் இருக்கிறார்.

இங்கே "வீட்டில்" என்ற வார்த்தைக்குள்ளே "இல்" என்ற
வார்த்தை மறைந்து வந்துள்ளது. அதாவது "இல்" என்ற வார்த்தை வீடு என்ற வார்த்தையை சார்ந்து (வீட்டில்) வந்துள்ளது.  ஏனெனில "இல்" என்ற PREPOSITION தனியாக நின்று பொருள் தர முடியாது அதனால்தான்  PREPOSITION ஐ FUNCTIONS என்று சொல்கிறோம்.

எடுத்துக்காட்டு : 3

My mom is on the bus. 
எனது அம்மா பேருந்தில் இருக்கிறார்.

இங்கே ON என்ற PREPOSITION, THE BUS என்ற  வார்த்தையை சார்ந்துள்ளது. தமிழில் "இல்" என்ற வார்த்தை "பேருந்து" என்ற வார்த்தையை சார்ந்து "பேருந்தில்" என்று வந்திருக்கிறது.

ஆங்கிலத்தில் ஒவ்வொரு வார்த்தையும் தனித்தனியாக இருக்கும். அதனால்தான் மேலே உள்ள எடுத்துக்காட்டுகளில் PREPOSITIONS எல்லாமே தனியாக வருவதை பார்க்க முடியும் ஆனால் தமிழில் அப்படி கிடையாது இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் போது அவை சேர்ந்து ஒரு புதிய வார்த்தையாக மாறிவிடும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான மற்றொன்று என்னவென்றால், மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் AT, IN ON ஆகிய மூன்று வெவ்வேறு PREPOSITIONS ஐ பயன்படுத்தியுள்ளோம்.

ஆங்கிலத்தில் இவை மூன்றும் வெவ்வேறு வார்த்தைகளாக இருந்த போதிலும் நாம் தமிழில் "இல்" என்ற ஒரே ஒரு வார்த்தையைத்தான் பயன்படுத்தியுள்ளோம். அதற்காக அவைகளின் exact (துல்லியமான) பொருள் "இல்"  என்று நாம் கூற முடியாது காரணம், அவை FUNCTIONS அவை ஒன்றை சார்ந்து வரும் போது அவற்றின் பொருளும் மாறுபடும்.

இரண்டாவதாக நாம் ஆங்கிலத்தில் உள்ள ஒரு முக்கியமான  விதி பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது எப்பொழுதுமே, "Home" என்ற வார்த்தைக்கு முன் "at" என்ற PREPOSITION ஐத்தான் (at home) பயன்படுத்த வேண்டும்.

அதைப்போலவே "the house" என்ற வார்த்தைக்கு முன் "in" என்ற PREPOSITION ஐத்தான் (in the house) பயன்படுத்த வேண்டும்.

அதைப்போலவே "the bus" என்ற வார்த்தைக்கு முன் "on" என்ற PREPOSITION ஐத்தான் (on the bus) பயன்படுத்த வேண்டும்.

இவை அனைத்தும் விதி. இவை மாறாது.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 4

She will come at 9 pm. 
இரவு 9:00 மணிக்கு அவள் வருவாள்.

இங்கு "at" என்ற வார்த்தைக்கு தமிழில் "க்கு" என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 5

The mobile is in the box. 
மொபைல் பெட்டியினுள் உள்ளது.

இங்கு "in" என்ற வார்த்தைக்கு "உள்" என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 6

The book is on the table. 
புத்தகம் மேசையின் மீது உள்ளது .(அல்லது )
நூல் மேசையின் மேல் உள்ளது.

இங்கு "on" என்ற வார்த்தைக்கு "மேல்" என்று அர்த்தமும் உள்ளது "மீது" என்ற  அர்த்தமும் உள்ளது.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் at - க்கு, on - மீது & மேல், in - உள் போன்ற அர்த்தங்களில் நாம் பயன்படுத்தியுள்ளோம்.

இன்னும் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 7

I am suffering from fever.
நான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறேன்.

இங்கு "from" என்ற வார்த்தைக்கு "ஆல்" என்ற தமிழ் வார்த்தை வருகிறது ஆனால் FROM என்ற வார்த்தையை "இருந்து" என்ற அர்த்தத்தில் மட்டுமே நாம் பொதுவாக பயன்படுத்துவோம் "ஆல்" என்ற அர்த்தமும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு : 8

We do things in accordance with his idea 
அவருடைய யோசனைக்கு ஏற்ப நாங்கள் காரியங்களைச் செய்கிறோம்.

இங்கு "with" என்ற  வார்த்தையை "க்கு" என்று அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளோம் ஆனால் பொதுவாக with என்ற வார்த்தையை "உடன்" என்ற அர்த்தத்தில் மட்டுமே நாம் பயன்படுத்துவோம்  "with"  என்ற வார்த்தைக்கு "க்கு" என்ற அர்த்தத்தமும் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு : 9

I give this mobile to him. 
இந்த மொபைலை நான் அவருக்கு தருகிறேன்.

இங்கு "to" என்ற வார்த்தையை "க்கு" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளோம். பொதுவாக, நாம் இவ்வாறு தான் பயன்படுத்துவோம்.

தொடர்ந்து சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்...

எடுத்துக்காட்டு : 10

I come from India. 
நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்.
 
இங்கு "from" என்ற வார்த்தையை "இருந்து" என்ற அர்த்தத்தில் நாம் பயன்படுத்தியுள்ளோம். பொதுவாக, நாம் இவ்வாறுதான் பயன்படுத்துவோம்.

எடுத்துக்காட்டு : 11

I have come with my mom 
நான் எனது அம்மாவுடன் வந்திருக்கிறேன்.

இங்கு "with "என்ற வார்த்தையை "உடன்" என்று அர்த்தத்தில் நாம் பயன்படுத்தியுள்ளோம். பொதுவாக, நாம் இவ்வாறு தான் பயன்படுத்துவோம்.

இறுதியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது.

at, on, in - இல்
at - க்கு 
in - உள் 
on - மீது &மேல் 
From - ஆல்
With - க்கு 
From - இருந்து 
With - உடன் 

மேற்கண்ட PREPOSITIONS களிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது  PREPOSITIONS  என்பது சார்புகள் அவை ஒரு வார்த்தையை சார்ந்து வரும். சில வார்த்தைகள் வரும்போது சில PREPOSITIONS ஐ மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

 எடுத்துக்காட்டு : "at home"
"home" என்று வந்தால் "at" பயன்படுத்த வேண்டும். 
இது போன்ற விதிகளை அப்படியே படித்துக் கொள்ள வேண்டும்.

எனவே ஒரு 90 சதவீதம் மொழியை ஒப்பிட்டு நம்மால் புரிந்து கொள்ள முடியும் ஆனால் மீதியுள்ள 10  சதவீதம் விதியை பயன்படுத்தி மட்டுமே நாம் PREPOSTIONS களை படிக்க வேண்டும்.

இது PREPOSITIONS பற்றிய ஒரு INTRODUCTIONதான். இதனை தொடர்ந்து அடுத்த பதிவிலிருந்து ஒவ்வொரு PREPOSITIONS களையும் தனித்தனியாகவும் விரிவாகவும் படிப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...