Know the word FOR in detail...

Know the preposition FOR...
நண்பர்களே! இந்த பதிவிலே
preposition FOR ஐ பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம். 
   
மூன்று முக்கியமான இடங்களில் ஆங்கிலத்தில் FOR என்ற Preposition ஆனது பயன்படுத்தப்படுகிறது.

1. BECAUSE OF என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

2. ஒரு பொருள் அல்லது ஒரு இடம் ஒரு காரணத்திற்காக அல்லது ஒரு நபருக்காக திட்டமிடப்பட்டிருக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

3. கால அளவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறியவற்றை எடுத்துக்காட்டுடன் பார்க்கும் பொழுது உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முதலாவதாக BECAUSE OF என்ற வார்த்தைக்கு பதிலாக பயன்படுத்தபடுகிறது.

Note
BECAUSE OF என்ற வார்த்தைக்கு பதிலாக FOR பயன்படுத்தப்படும் பொழுது தமிழிலே "நிமித்தமாக, காரணமாக, பொறுத்து, குறித்து" போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவோம்.

எடுத்துக்காட்டு : 1

He is so happy for you அதாவது அவர் உன்னை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லலாம் அல்லது அவர் உன்னை பொறுத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லலாம் அல்லது அவர் உன் காரணமாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லலாம் அல்லது அவர் உன் நிமித்தமாக மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டு : 2

All of us feel sorry for your loss அதாவது உங்கள் இழப்பின் காரணமாக நாங்கள் அனைவரும் வருந்துகிறோம். 

Note
எடுத்துக்காட்டு 1 மற்றும் 2 களில் "FOR" என்ற Preposition க்கு நிமித்தமாக, காரணமாக, பொறுத்து, குறித்து ஆகிய நான்கு வார்த்தைகளையும் பயன்படுத்த முடியும்.

எனவே மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து தமிழில் "நிமித்தமாக, காரணமாக, பொறுத்து, குறித்து ஆகிய அர்த்தங்கள் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்."

இரண்டாவதாக ஒரு பொருளோ அல்லது ஒரு இடமோ ஒரு காரணத்திற்காக அல்லது ஒரு நபருக்காக திட்டமிடப்பட்டிருக்கும் பொழுது அங்கே FOR என்ற PREPOSITION பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

This place is arranged for the meeting அதாவது ‌இந்த இடமானது கூட்டத்திற்காக தயார் செய்யப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் ஒரு இடமானது MEETING என்ற ஒரு காரணத்திற்காக திட்டமிடப்பட்டிருக்கும் பொழுது FOR என்ற PREPOSITION பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம்.

எடுத்துக்காட்டு : 2

This bike is for my friend அதாவது இந்த பைக்கானது எனது நண்பனுக்காக இருக்கிறது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் BIKE என்ற ஒரு பொருளானது ஒரு நபருக்காக திட்டமிடப்பட்டிருக்கும் பொழுது FOR என்ற PREPOSITION பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியலாம்.

மூன்றாவதாக கால அளவை குறிக்க FOR என்ற PREPOSITION பயன்படுத்தப்படுகிறது.

கால அளவை குறிக்க FOR என்ற PREPOSITION பயன்படுத்தப்படும் பொழுது தமிழிலே "ஆக" என்ற வார்த்தையை பயன்படுத்துவோம்.

எடுத்துக்காட்டு : 1

He played for 5 hours அதாவது அவர் 5 மணி நேரமாக விளையாடினார் என்று அர்த்தம்.
 
எடுத்துக்காட்டு : 2

I worked there for many years அதாவது நான் அங்கு பல ஆண்டுகளாக வேலை செய்தேன் என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டுகளிலிருந்து தமிழில் "ஆக" என்ற வார்த்தையானது FOR என்ற PREPOSITION க்கு பதிலாக வந்திருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

எனவே தமிழில் "ஆக" என்ற அர்த்தமானது FOR என்ற PREPOSITION க்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாக "FOR" என்ற PREPOSITION பயன்படுத்தப்படும் மூன்று இடங்களை தெளிவாக கற்றோம்.

கற்ற விஷயங்களை நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது பயன்படுத்துங்கள்.

தொடரந்து படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...