Know the word OF in detail...
Know the preposition OF...
நண்பர்களே! இந்த பதிவிலே
PREPOSITION OF பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்.
ஆங்கிலத்தில் PREPOSITION OF ஆனது ஐந்து காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.
1. இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவை குறிப்பதற்கு
பயன்படுத்தப்படுகிறது.
2. ஒரு நபர் அல்லது ஒரு குழுவின் உடைமையை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
3. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக செயல்படுகின்ற நிறுவனத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
4. ஒரு நபர் அல்லது ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது வருடத்தை சார்ந்தது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
5. அளவைகளில் பயன்படுத்தப்படுகிறது.
(நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, கொள்ளளவை)
மேற்கூறியவற்றை ஒவ்வொன்றாக சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கும்போது இன்னும் விளக்கமாகவும் தெளிவாகவும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவை குறிப்பதற்கு
பயன்படுத்தப்படுகிறது.
இரண்டு நபர்களுக்கு இடையேயான உறவை குறிக்க பயன்படுத்தும் பொழுது தமிழில் "உடைய" என்ற வார்த்தை உள்ளுக்குள் ஒளிந்திருக்கும்.
எடுத்துக்காட்டு : 1
He is Raja's son அல்லது He is son of Raja என்று சொல்லலாம் அதாவது அவன் ராஜாவினுடைய மகன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
He is rich man's son அல்லது He is a son of a rich man என்று சொல்லலாம் அதாவது அவன் ஒரு பணக்காரனுடைய மகன் என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக தமிழில் "உடைய" என்ற வார்த்தை வரும் பொழுது அங்கு OF என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
எனவே OF என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "உடைய" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
இரண்டாவதாக ஒரு நபரின் அல்லது ஒரு குழுவின் உடைமையை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.
இங்கும் OF என்ற இந்த PREPOSITION ஐ குறிக்க "உடைய" என்ற வார்த்தையை தமிழில் பயன்படுத்துகிறோம் ஆனால் ஒருவரின் உடைமையை குறிக்க பயன்படுத்துகிறோம்.
உடைமை என்பது பெயராகவும் இருக்கலாம் அல்லது பொருளாகவும் இருக்கலாம்.
எடுத்துக்காட்டு : 1
My father's name is Raja அல்லது The name of my father is Raja என்று சொல்லலாம் அதாவது எனது அப்பாவினுடைய பெயர் ராஜா என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
This is the car of my friend அல்லது This is my friend's car என்று சொல்லலாம் அதாவது இது எனது நண்பனுடைய கார் என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக தமிழில் "உடைய" என்ற வார்த்தை வரும் பொழுது அங்கு OF என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வருவதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
எனவே OF என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "உடைய" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
மூன்றாவதாக ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக செயல்படுகின்ற நிறுவனத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
This is an Engineering college அல்லது This is a college of Engineering என்று சொல்லலாம் அதாவது இது ஒரு பொறியியல் கல்லூரி அல்லது இது ஒரு பொறியியலுக்கான கல்லூரி என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
This is an Arts college அல்லது This is a college of Arts என்று சொல்லலாம் அதாவது இது ஒரு கலைக்கல்லூரி அல்லது இது ஒரு கலைக்கான கல்லூரி என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
This is a college of Education அல்லது This is an Education college என்று சொல்லலாம் அதாவது இது ஒரு கல்வியியல் கல்லூரி அல்லது இது ஒரு கல்வியியலுக்கான கல்லூரி என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக "கான" என்ற வார்த்தையானது OF என்ற வார்த்தைக்கு பதிலாக இடம் பெறுவதை அறியலாம்.
எனவே OF என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "கான" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
நான்காவதாக ஒரு நபர் அல்லது ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட இடத்தை அல்லது ஒரு குறிப்பிட்ட வருடத்தை சார்ந்தது என்பதை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
He is Rajesh and he is from India என்ற வாக்கியத்தை He is Rajesh of India என்று சொல்லலாம் அதாவது அவன்தான் இந்தியாவைச் சார்ந்த ராஜேஷ்.
எடுத்துக்காட்டு : 2
This car belongs to the year 2006 என்ற வாக்கியத்தை This is the car of 2006 என்று சொல்லலாம் அதாவது இந்த கார் 2006 ஆம் ஆண்டைச் சேர்ந்தது அல்லது இதுதான் 2006 ஆம் ஆண்டைச் சேர்ந்த கார் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டு : 3
This iron is brought from India என்ற வாக்கியத்தை This is iron of India என்று சொல்லலாம் அதாவது இது இந்தியாவின் இரும்பு அல்லது இந்தியாவை சார்ந்த இரும்பு என்று சொல்லலாம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக "சார்ந்த அல்லது சேர்ந்த" என்ற வார்த்தையானது OF என்ற வார்த்தைக்கு பதிலாக இடம் பெறுவதை நாம் அறியலாம்.
எனவே OF என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "சார்ந்த அல்லது சேர்ந்த" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
5. நீட்டல் அளவை, நிறுத்தல் அளவை, கொள்ளளவை போன்ற அளவைகளில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I drink one litre of water in the morning.
நான் காலையில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கிறேன் அல்லது நான் காலையில் ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்கிறேன் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டு : 2
Please give me 1 kg of sugar.
எனக்கு ஒரு கிலோ சர்க்கரை கொடுங்கள் அல்லது எனக்கு ஒரு கிலோ அளவு சர்க்கரை கொடுங்கள் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டு : 3
This is a cloth of five meter.
இது ஐந்து மீட்டர் துணி அல்லது இது 5 மீட்டர் அளவு துணி என்று சொல்லலாம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக "அளவு" என்ற வார்த்தையானது OF என்ற வார்த்தைக்கு பதிலாக இடம் பெறுவதை நாம் அறியலாம்.
எனவே OF என்ற இந்த PREPOSITION ஆனது தமிழில் "அளவு" என்ற அர்த்தத்தை பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலமாக PREPOSITION OF பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம். தொடர்ந்து ஒவ்வொரு PREPOSITIONS களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக