Know the word ABOUT...
Know the preposition ABOUT in detail...
முதலாவதாக "பற்றி" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக "சுமார், ஏறத்தாழ, கிட்டத்தட்ட" போன்ற தமிழ் அர்த்தத்தங்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாவதாக "அருகில்" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
நான்காவதாக "சிதறி போகுதல் அல்லது சிதறி கிடத்தல்" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ஐந்தாவதாக ஒருவரின் கருத்தைக் (opinion) கேட்கும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய ஒவ்வொன்றையும் நாம் எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கும் பொழுது அவற்றை தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ளலாம்.
முதலாவதாக "பற்றி" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு: 01
I know everything about him அதாவது எனக்கு அவனைப் பற்றி எல்லாம் தெரியும் என்று அர்த்தம்.
He told me about his ideas அதாவது அவர் தனது யோசனைகளை பற்றி என்னிடம் கூறினார் என்று அர்த்தம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் ABOUT என்ற PREPOSITION ஆனது "பற்றி" என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பதை காண முடியும்.
இரண்டாவதாக "சுமார், ஏறத்தாழ, கிட்டத்தட்ட" போன்ற தமிழ் அர்த்தங்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
NOTE
இந்த மூன்று வார்த்தைகளுக்குமே தமிழில் ஒரே அர்த்த்தை தான் கொண்டுள்ளது. இதனை எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கும் பொழுது நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
எடுத்துக்காட்டு : 1
The lady is about 50 years old அதாவது அந்தப் பெண்மணிக்கு சுமார் 50 வயது இருக்கும் என்று அர்த்தம்.
இங்கே "ABOUT" என்பதை "சுமார்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளோம்.
எடுத்துக்காட்டு : 2
The incident took place about 9 in the morning அதாவது இந்த சம்பவம் ஏறத்தாழ காலை 9 மணி அளவில் நடந்தது என்று அர்த்தம்.
இங்கே "ABOUT" என்பதை "ஏறத்தாழ" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளோம்.
எடுத்துக்காட்டு : 3
There were about 25 people in the room அதாவது அறையில் கிட்டத்தட்ட 25 பேர் இருந்தனர் என்று அர்த்தம்.
இங்கே "ABOUT" என்பதை "கிட்டத்தட்ட" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளோம்.
மேற்கூறிய மூன்று வார்த்தைகளையும் (கிட்டத்தட்ட, சுமார், ஏறத்தாழ) கிட்டத்தட்ட மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். ஆனால் மேற்கூறிய வாக்கியங்களின் அர்த்தங்கள் மாறாது ஏனெனில் "ABOUT" என்ற ஒரு வார்த்தை இந்த மூன்று அர்த்தங்களையும் கொண்டுள்ளது.
மூன்றாவதாக "அருகில்" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
There was no one about to speak with me என்று சொன்னால் அதற்கு என்னுடன் பேசுவதற்கு அருகில் யாரும் இல்லை என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Is there anyone about? என்று ஒருவர் கேட்கும் பொழுது யாராவது அருகில் இருக்கிறார்களா? என்று கேட்கிறார்
என்று அர்த்தம்.
எனவே "அருகில்" என்ற அர்த்தத்திலும் PREPOSITION "ABOUT" ஐபயன்படுத்தலாம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக ABOUT என்ற வார்த்தையானது PREPOSITION ஆக செயல்படும் பொழுது தமிழில் பற்றி, சுமார், ஏறத்தாழ, கிட்டத்தட்ட மற்றும் அருகில் போன்ற அர்த்தங்களை கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
அடுத்ததாக ABOUT என்ற இந்த வார்த்தைக்குள் அடங்கி இருக்கும் சில அர்த்தங்களை பற்றி பார்ப்போம் மேலும் அதற்கு சில எடுத்துக்காட்டுகளும் பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 1
The people were running about என்று சொல்லும் பொழுது மக்கள் சிதறி ஓடிக் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தமாகிறது.
மேற்கூறிய வாக்கியத்திற்கு நிகராக இன்னொரு வாக்கியம் எழுதினால் அது
The people were running in various directions என்று இருக்கும்.
இதன் மூலமாக "ABOUT" என்ற வார்த்தைக்கு "VARIOUS DIRECTIONS அதாவது பல்வேறு திசைகளில்" என்ற அர்த்தம் இருப்பதை நம்மால் உணர முடியும்.
எனவே ABOUT என்ற வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இதே அர்த்தத்தில் இன்னொரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
All things were lying about the room என்று சொல்லலாம் அதாவது எல்லா பொருட்களும் அறை முழுவதும் சிதறி கிடந்தன என்று அர்த்தம்.
இவ்வாறாக ABOUT என்ற வார்த்தைக்கு "சிதறி கிடத்தல் அல்லது சிதறி போகுதல்" என்ற அர்த்தமும் உள்ளது என்பதை உங்களால் அறிய முடியும் என்று நம்புகிறேன்.
அடுத்ததாக நீங்கள் யாரிடமாவது கருத்து கேட்கும் பொழுது How about & What about
என்று ABOUT ஐ பயன்படுத்தலாம்.
இதனை சில எடுத்துக்காட்டு வாக்கியங்கள் மூலமாக புரிந்து கொள்வோம்.
எடுத்துக்காட்டு : 1
What about playing for a long time? என்று கேட்கும்பொழுது What is your opinion about playing for a long time? என்று கேட்கிறார் என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டு மூலமாக "ABOUT" என்ற வார்த்தைக்குள் "IS YOUR OPINION" என்ற அர்த்தம் அடங்கி இருப்பதை உங்களால் உணர முடியும்.
மேலும் how about that? என்று ஆங்கிலத்தில் பயன்படுத்துவதுண்டு அதாவது ஒரு விஷயத்தை குறித்து இரண்டு மூன்று கருத்துக்கள் இருக்கும் பொழுது அந்த கருத்துக்களில், அந்தக் கருத்தை பற்றி உன் கருத்து என்ன? அல்லது இந்த கருத்தை பற்றி உன் கருத்து என்ன என்று கேட்கும் பொழுது ஆங்கிலத்தில் how about that? Or how about this? கேட்கலாம் அதாவது what is your opinion about that? or what is your opinion about this? என்ற விரிவான வாக்கியத்தின் சுருங்கிய வடிவம் ஆகும்.
அவ்வளவு தான் நண்பர்களே! இந்த ABOUT என்ற வார்த்தையைப் பற்றிய ரொம்ப அருமையான விஷயங்களை கற்றுக் கொண்டீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக