Know the word BY in detail...
Know the preposition BY in detail...
Preposition BY ஆனது நிறைய அர்த்தங்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது அதனால், பொறுமையாகவும் கவனமாகவும் படிக்கவும்.
1. இடத்தைக் குறிக்கும் பொழுது "அருகில்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2. காலத்தை குறிக்கும் பொழுது "உள்ளாக" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
3. Passive voice - இல் "ஆல்" என்ற அர்த்தத்தில் "செயலை செய்தவரை" குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
4. "மூலமாக" என்ற அர்த்தத்தில் "குறிப்பிட்ட முடிவை" பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
5. "மூலமாக" என்ற அர்த்தத்தில் "குறிப்பிட்ட செயலை" செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
6. "ஆகவே" என்ற அர்த்தத்தில் "REFLEXIVE PRONOUN" உடன் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய அனைத்தையும் எடுத்துக்காட்டுடன் பார்க்கும் பொழுது உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக இடத்தைக் குறிக்கும் பொழுது "அருகில்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
They live by a Railway Station என்று சொல்லும் பொழுது அவர்கள் ஒரு ரயில் நிலையத்திற்கு அருகில் வாழ்கின்றனர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
He stands by that bus stand என்று ஒருவர் சொன்னால் அவர் அந்த பஸ் நிலையத்திற்கு அருகில் நிற்கிறார் என்று சொல்கிறார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
That school is by a mountain என்று சொன்னால் அந்தப் பள்ளியானது ஒரு மலைக்கு அருகில் உள்ளது என்று அர்த்தம்.
இரண்டாவதாக காலத்தை குறிக்கும் பொழுது "உள்ளாக" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I will do my job by tomorrow என்று சொன்னால் நான் நாளைக்கு உள்ளாக எனது வேலையை செய்வேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Rani will be here by 4 o'clock என்று சொன்னால் ராணி 4:00 மணிக்கு உள்ளாக இங்கே இருப்பாள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
Everything will be over by next month என்று சொல்லும் பொழுது அடுத்த மாதத்திற்குள்ளாக அனைத்தும் முடிந்திருக்கும் என்று அர்த்தம்.
மூன்றாவதாக PASSIVE VOICE - இல் "ஆல்" என்ற அர்த்தத்தில் "செயலை செய்தவரை குறிக்க" பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
A letter is written by Rani என்றால் ஒரு கடிதம் ராணியால் எழுதப்பட்டது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Rani is being met by Raja என்றால் ராணி ராஜாவால் சந்திக்கப்பட்டு கொண்டிருப்பாள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
A mango has been eaten by him என்றால் ஒரு மாம்பழம் அவனால் சாப்பிடப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.
நான்காவதாக "மூலமாக" என்ற அர்த்தத்தில் "குறிப்பிட்ட முடிவை" பெறுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
NOTE
இங்கே (By+Ving) என்ற அமைப்பில் ஒரு வாக்கியத்தில் பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு : 1
I stay fit by playing everyday என்று சொல்லலாம் அதாவது நான் தினமும் விளையாடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று அர்த்தம்.
மேற்கூறிய வாக்கியத்தில் விளையாடுவதன் மூலமாக ஆரோக்கியமாக இருத்தல் என்ற முடிவை அடைவதாக குறிப்பிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 2
He stays calm by meditating everyday என்று சொல்லும் பொழுது அவர் தினமும் தியானிப்பதன் மூலமாக அமைதியாக இருக்கிறார் என்று அர்த்தமாகிறது.
மேற்கூறிய வாக்கியத்தில் தியானிப்பதன் மூலமாக அமைதியாக இருத்தல் என்ற முடிவை அடைவதாக குறிப்பிடப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 3
He speaks well by practicing everyday என்று சொல்லும் பொழுது அவர் தினமும் பயிற்சி செய்வதன் மூலமாக நன்றாக பேசுகிறார் என்று அர்த்தமாகிறது.
மேற்கூறிய வாக்கியத்தில் பயிற்சி செய்வதன் மூலமாக நன்றாக பேசுதல் என்ற முடிவை அடைவதாக குறிப்பிடப்படுகிறது.
ஐந்தாவதாக "மூலமாக" என்ற அர்த்தத்தில் "குறிப்பிட்ட செயலை" செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I traveled by bus என்றால் நான் பேருந்து மூலமாக பயணம் செய்தேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
I traveled by train என்றால் நான் ரயில் மூலமாக பயணம் செய்தேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
He will travel by plane என்றால் அவன் விமானம் மூலமாக பயணம் செய்வான் என்று அர்த்தம்.
இவ்வாறாக "பேருந்து, ரயில், விமானம்" போன்றவற்றின் "மூலமாக" பயணம் செய்யும்பொழுது அங்கே BY பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு : 4
I paid the money by cheque.
நான் பணத்தை காசோலை மூலமாக செலுத்தினேன்.
எடுத்துக்காட்டு : 5
I paid the money by credit card.
நான் பணத்தை credit card ( பற்றட்டை அல்லது கடன் அட்டை) மூலமாக செலுத்தினேன்.
எடுத்துக்காட்டு : 6
I paid the money in cash.
நான் பணத்தை பணமாகவே செலுத்தினேன்.
NOTE
இவ்வாறாக காசோலை மூலமாக, கிரெடிட் கார்டு மூலமாக பணத்தை செலுத்தும் பொழுது அங்கே BY பயன்படுத்த வேண்டும் ஆனால் அதே நேரத்தில் பணமாகவே செலுத்தும் பொழுது IN CASH என்று பயன்படுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டு : 7
I spoke with him by phone.
நான் அவருடன் தொலைபேசி மூலமாக பேசினேன்.
எடுத்துக்காட்டு : 8
You can send the details by email.
நீ விவரங்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்பலாம்.
இவ்வாறாக தொலைபேசி மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளும் பொழுது அங்கே BY பயன்படுத்த வேண்டும்.
ஆறாவதாக "ஆகவே" என்ற அர்த்தத்தில் REFLEXIVE PRONOUN உடன் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I visited Japan by myself அதாவது நான் நானாகவே ஜப்பானை பார்வையிட்டேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
She will do her job by herself அதாவது அவள் அவளாகவே அவளது வேலையை செய்வாள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
They can go by themselves அதாவது அவர்கள் அவர்களாகவே செல்ல முடியும் என்று அர்த்தம்.
மேற்கூறிய எடுத்துக்காட்டுகள் மற்றும் விளக்கங்கள் மூலமாக BY என்ற PREPOSITION ஐ தெளிவாக கற்றோம் தொடர்ந்து அடுத்த PREPOSITION ஐ கற்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக