Know the word SINCE...

Know the proposition SINCE in detail...
நண்பர்களே! இந்த பதிவில் PREPOSITION "SINCE" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் படிப்போம்.
SINCE என்ற PREPOSITION ஆனது ஆங்கிலத்தில் மூன்று செயல்களை செய்கிறது.

முதலாவதாக காலத்தை குறிக்கும் பொழுது "PREPOSITION" ஆக செயல்படுகிறது.

இரண்டாவதாக காரணத்தை குறிக்கும் பொழுது "CONJUNCTION" ஆக செயல்படுகிறது.

மூன்றாவதாக எவ்வளவு காலம் ஒரு செயல் நடந்தது அல்லது நடக்கிறது என்பதை குறிக்க "ADVERB OF TIME"ஆகவும் செயல்படுகிறது.

மேற்கூறியவற்றை எடுத்துக்காட்டுடன் பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

முதலாவதாக காலத்தை குறிக்கும் பொழுது "PREPOSITION" ஆக செயல்படுகிறது. 
 
NOTE
ஒரு வாக்கியத்தில் SINCE பயன்படுத்தபட்டு அதனைத் தொடர்ந்து காலம் சார்ந்த ஒரு வார்த்தை வந்தால் அங்கே SINCE ஆனது "PREPOSITION" ஆக செயல்படுகிறது என்று அர்த்தம்.
 
எடுத்துக்காட்டு : 1 

I have been working here since 2015 அதாவது நான் 2015 முதல் இங்கு பணிபுரிந்து கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம் அல்லது 2015 இல் "இருந்து" இங்கு பணிபுரிந்து கொண்டே இருக்கிறேன் என்றும் சொல்லலாம்.
 
இங்கே SINCE ஆனது இந்த நேரத்திலிருந்து அல்லது இந்த காலத்திலிருந்து என்ற அர்த்தத்தில் செயல்படுகிறது. 

எடுத்துக்காட்டு : 2 

She has stopped working since the age of 55 அதாவது அவர் 55 வயதிலிருந்தே வேலை செய்வதை நிறுத்தி விட்டார் என்று அர்த்தம்.
 
இங்கு "the age of 55" என்ற PHRASE ஆனது காலத்தை குறிக்கிறது மேலும் அது SINCE ஐ தொடர்ந்து வந்துள்ளது. 

எடுத்துக்காட்டு : 3 

It has been a long time since I saw them அதாவது நான் அவர்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்று சொல்லலாம் அல்லது நான் அவர்களைப் பார்த்ததிலிருந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன என்றும் சொல்லலாம்.

இவ்வாறாக காலத்தைக் குறிக்கும் பொழுது "SINCE" என்ற வார்த்தையானது "இருந்து" என்ற தமிழ் அர்த்தத்தில் "PREPOSITION" ஆக செயல்படுகிறது.

இரண்டாவதாக காரணத்தை குறிக்கும் பொழுது "CONJUNCTION" ஆக செயல்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1
 
Since I am sick, I did not go to office அதாவது நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் நான் அலுவலகத்திற்கு செல்லவில்லை என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் உடல்நிலை சரியில்லை என்ற "காரணத்தால்" "நான் அலுவலகம் செல்லவில்லை" என்ற "செயல்" நடந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எடுத்துக்காட்டு :2

Since he played well, he got the first prize அதாவது அவர் நன்றாக விளையாடியதால் அவருக்கு முதல் பரிசு கிடைத்தது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் "நன்றாக விளையாடியது" என்பது ஒரு காரணம் அதன் விளைவாக அவருக்கு முதல் பரிசு கிடைத்தது என்பது ஒரு நிகழ்ச்சி.

இவ்வாறாக ஒரு காரணத்தின் விளைவாக ஒரு செயல் நடைபெறும் பொழுது "SINCE" என்ற வார்த்தையை வாக்கியத்தின் முதலில் பயன்படுத்த வேண்டும்.
 
எடுத்துக்காட்டு :3

Since he won the first prize, he is happy now அதாவது அவர் முதல் பரிசை வென்றதால் அவர் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார் என்று அர்த்தம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் "அவர் முதல் பரிசை வென்றதன் காரணமாக" என்று "காரணத்தை" குறிக்க "SINCE" பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை காண முடியும்.

இவ்வாறாக காரணத்தை குறிக்கும் பொழுது "CONJUNCTION" ஆக "SINCE" செயல்படுகிறது.

மூன்றாவதாக SINCE ஆனது "ADVERB OF TIME" ஆக செயல்படுகிறது. இங்கும் SINCE ஆனது காலத்தையே குறிக்கிறது ஆனால் "எவ்வளவு காலம் ஒரு செயல் நடக்கிறது" என்பதை சொல்கிறது.

மேற்கூறியவற்றிற்கு சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 1

Raja and Rani had an argument and they have not spoken since அதாவது ராஜாவுக்கும் ராணிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது அதற்கு பின்னர் அவர்கள் பேசவில்லை என்று அர்த்தம்.

அவர்கள் பேசவில்லை என்பதான் செயல். எப்பொழுதிலிருந்து அவர்கள் பேசவில்லை என்ற காலத்தை குறிக்கும் ADVERB OF TIME ஆக இங்கு SINCE செயல்படுகிறது.

எடுத்துக்காட்டு : 2

My close friend cheated me once, I hated him since then அதாவது எனது நெருங்கிய நண்பன் ஒருமுறை என்னை ஏமாற்றினான் அப்போதிருந்தே நான் அவனை வெறுத்து விட்டேன் என்று அர்த்தம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் வெறுத்து விட்டேன் என்ற நிகழ்ச்சியானது எப்போதிலிருந்து நடக்கிறது என்று காலத்தை குறிப்பதற்காக SINCE பயன்படுத்த பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டு : 3 

Raja went to Chennai in 2015 and has lived there ever since அதாவது ராஜா 2015 இல் சென்னைக்கு சென்றார் அப்பொழுதிலிருந்தே அவர் அங்கேயே வசித்து வருகிறார்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் வாழ்தல் என்ற நிகழ்ச்சியானது எப்போதிலிருந்து நடக்கிறது என்று காலத்தை குறிப்பதற்காக SINCE பயன்படுத்த பட்டிருக்கிறது. அதனால்தான் SINCE என்ற வார்த்தையானது ADVERB OF TIME ஆக செயல்படுகிறது என்று சொல்கிறோம்.

மேலும் நண்பர்களே! "SINCE" என்ற வார்த்தையும் "SINCE THEN" என்ற வார்த்தையும் மற்றும் "EVER SINCE" என்ற வார்த்தையும் ஒரே அர்த்தத்தை கொண்டதாக ஆனால் அதே நேரத்தில் அவை கொடுக்கும் தாக்கத்தின் அளவு (DEGREE) மாறுபடுகிறது.

அதாவது SINCE இன் DEGREE கொஞ்சம் குறைய என்று சொல்லலாம்.

SINCE THEN இன் DEGREE நடுத்தரம் என்று சொல்லலாம்.

EVER SINCE ஆனது 100% தாக்கத்தை கொடுக்க கூடியது என்று சொல்லலாம்.
 
மேற்கண்ட விளக்கங்கள் மற்றும் எடுத்துக்காட்டுகள் மூலமாக "SINCE" என்ற வார்த்தை செயல்படும் மூன்றுவிதத்தை தெளிவாக கற்றோம். தொடர்ந்து அடுத்த PREPOSITION ஐ கற்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...