Know the word FROM in detail...

Know the preposition FROM in detail...
நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "FROM" ஐ தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.

"FROM" என்ற PREPOSITION ஆனது ஆங்கிலத்திலே ஏழு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

1. இடத்தை குறிக்கும் பொழுது "இருந்து"அல்லது"சார்ந்து"என்ற
அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

2. காலத்தை குறிக்கும் பொழுது  "இருந்து"அல்லது "முதல்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

3. தூரத்தை குறிக்கும் பொழுது "இருந்து"  என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

4. "இருந்து" என்ற அர்த்தத்தில் ஒருவரிடமிருந்து ஒரு பொருளை பெறும் பொழுது அல்லது எடுத்துக் கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

5. "ஆல்" அல்லது "காரணமாக"என்ற அர்த்தத்தில் காரணத்தை குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

6. ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருள் தயாரிக்கும் பொழுது MADE FROM என்ற PHRASE பயன்படுத்தப்படுகிறது.

7. சில வார்த்தைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. 

மேற்கூறிய அனைத்தையும்  எடுத்துக்காட்டுடன் பார்க்கும் பொழுது உங்களால் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.

முதலாவதாக இடத்தை குறிப்பிடும் பொழுது "இருந்து" அல்லது "சார்ந்து" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

I am coming from India அதாவது நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்று அர்த்தம்.

இங்கு "COMING" என்று வரும் பொழுது "இருந்து" என்ற அர்த்தத்தில் FROM என்ற PREPOSITION செயல்படுகிறது.

அதே நேரத்தில் I am from India அதாவது நான் இந்தியாவைச் சார்ந்தவன் என்று சொல்லும் பொழுது FROM என்ற PREPOSITION ஆனது "சார்ந்து" என்ற அர்த்தத்தை பெறுகிறது.

எனவே I am from Thoothukudi‌ என்று சொல்லும் பொழுது நான் தூத்துக்குடியைச் சார்ந்தவன் என்று ஆகிறது.

எனவே மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் மூலமாக FROM என்ற PREPOSITION ஆனது "இருந்து" மற்றும் "சார்ந்து" ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

இரண்டாவதாக காலத்தை குறிக்கும் பொழுது "இருந்து" அல்லது "முதல்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு 1

I lived in Japan from 2009 to 2013 அதாவது நான் 2009 முதல் 2013 வரை ஜப்பானில் வாழ்ந்தேன் என்று சொல்லலாம் அல்லது நான் 2009 திலிருந்து 2013 வரை ஜப்பானில் வாழ்ந்தேன் என்றும் சொல்லலாம்.

எடுத்துக்காட்டு 2

We have meeting from 9 to 12.30 அதாவது எங்களுக்கு 9 மணியிலிருந்து 12.30 மணி வரை கூட்டம் இருக்கிறது என்று சொல்லலாம் அல்லது எங்களுக்கு 9 மணியிலிருந்து 12.30 மணி வரை கூட்டம் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

எடுத்துக்காட்டு 3

I work from Monday to Friday அதாவது நான் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்கிறேன் என்று சொல்லலாம் அல்லது நான் திங்கள்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை வேலை செய்கிறேன் என்றும் சொல்லலாம்.

எனவே மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் மூலமாக FROM என்ற PREPOSITION ஆனது காலத்தை குறிக்கும் பொழுது "முதல்" மற்றும் "இருந்து" ஆகிய அர்த்தங்களை கொண்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

மூன்றாவதாக தூரத்தை குறிக்கும் பொழுது "இருந்து" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

He lives 5 km away from his office அதாவது அவர் தனது அலுவலகத்தில் இருந்து 5 km தூரத்தில் வசிக்கிறார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I was standing 10 meters away from the shop அதாவது நான் கடையிலிருந்து 10  மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தேன் என்று அர்த்தம்.

NOTE: 
தூரத்தை குறிக்கும் பொழுது "இருந்து" என்ற வார்த்தையை  தமிழில் நாம் பயன்படுத்துகிறோம் ஆனால், ஆங்கிலத்தில் "from" பயன்படுத்தும் பொழுது away என்ற வார்த்தையையும் சேர்த்து (away from) என்று தான் பயன்படுத்த வேண்டும்.


நான்காவதாக "இருந்து" என்ற அர்த்தத்தில் ஒருவரிடமிருந்து ஒரு பொருளை பெறும் பொழுது அல்லது எடுத்துக் கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

I got this bike from my friend அதாவது இந்த பைக்கை எனது நண்பரிடம் இருந்து பெற்றேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2
 
My friend took this bike from me அதாவது எனது நண்பன் இந்த பைக்கை என்னிடம் இருந்து எடுத்தான் என்று அர்த்தம்.

இவ்வாறாக "இருந்து" என்ற அர்த்தத்தில் ஒருவரிடமிருந்து ஒரு பொருளை பெறும் பொழுது அல்லது எடுத்துக் கொள்ளும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாவதாக "ஆல்" அல்லது "காரணமாக" என்ற அர்த்தத்தில் காரணத்தை குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Raja was suffering from fever அதாவது ராஜா காய்ச்சலால் துன்புற்றுக் கொண்டிருக்கிறான்.

எடுத்துக்காட்டு : 2

Rani died from dehydration அதாவது ராணி நீரிழப்பு காரணமாக இறந்தாள் அல்லது 
ராணி நீரிழப்பால் இறந்தாள் என்று சொல்லலாம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டுகளின் வாயிலாக "நீரிழப்பு மற்றும் காய்ச்சல்" போன்ற காரணங்களை குறிப்பிடுவதற்கு "ஆல்" அல்லது "காரணமாக" என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தியுள்ளோம். 
அது ஆங்கிலத்தில் "from" என்ற preposition -ஐ குறிக்கிறது.

ஆறாவதாக ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருள் தயாரிக்கும் பொழுது  (made from) என்ற PHRASE பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Siddha medicines are made from plant extract அதாவது சித்தா மருந்துகள் தாவரங்களின் சாற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Wine is made from grapes அதாவது திராட்சையிலிருந்து திராட்சை ரசம் தயாரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

இவ்வாறாக ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருள் தயாரிக்கப்படும் பொழுது (made from) என்ற PHRASE பயன்படுத்தப்படுகிறது.

ஏழாவதாக சில வார்த்தைகளுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Playing football ball is different from basketball அதாவது கால்பந்து பந்து விளையாடுவது கூடைப்பந்தாட்டத்திலிருந்து வேறுபட்டது.

எடுத்துக்காட்டு : 2

Pray to God to protect us from all the evil அதாவது எல்லா விதமான தீமைகளிலிருந்தும் நம்மை பாதுகாக்க ஆண்டவரிடம் ஜெபிப்போம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Eating healthy food prevents us from falling sick அதாவது சத்தான உணவுகளை சாப்பிடுவது நம்மை நோய்வாய்ப்படுவதில் இருந்து தடுக்கிறது.

எடுத்துக்காட்டு : 4

My mom discouraged me from sleeping late at night அதாவது இரவில் தாமதமாக தூங்குவதை எனது அம்மா அலட்சியப்படுத்தினார் என்று அர்த்தம்.

இவ்வாறாக different, protect, prevent discourage போன்ற வார்த்தைகள் வரும் பொழுது அங்கே FROM என்ற PREPOSITION கூடவே அல்லது அந்த வாக்கியத்தில் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் "FROM" என்ற PREPOSITION ஐ பயன்படும் விதத்தை தெளிவாக கற்றோம். கற்ற விஷயங்களை நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது பயன்படுத்துங்கள். தொடர்ந்து மேலும் படிப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...