Prepositions IN, ON & AT in Tamil...

Know the prepostions IN, ON & AT...
நண்பர்களே! நாம் இந்த பதிவில் 
IN, ON & AT ஆகிய PREPOSITIONS களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவாக பார்ப்போம்.

இந்த மூன்று PREPOSITIONS களும் (in, on, at) இரண்டிடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

 1. காலத்தைக் குறிக்கும் பொழுது
 2. இடத்தைக் குறிக்கும் பொழுது

இந்த மூன்று PREPOSITIONS களையும் காலத்தை குறிக்கும் பொழுது  99.9% நம்மால் கணிக்க முடிகிறது ஆனால் இடத்தை குறிப்பிடும் பொழுது 0.1% மட்டுமே நம்மால் கணிக்க முடிகிறது. ஆகையால் இதனை எப்படி படிப்பது என்பது பற்றி தெளிவாக பார்ப்போம்.

1. காலத்தைக் குறிக்கும் பொழுது இந்த மூன்று PREPOSITIONS களும் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தப்படுகிறது.

           *  சரியான நேரத்தை குறிக்கும் பொழுது அங்கு AT பயன்படுத்தப்படுகிறது.
              
            * சரியான நாள், தேதி மற்றும் தேதியோடு கூடிய மாதத்தை குறிப்பிடும் பொழுது அங்கு ON பயன்படுத்தப்படுகிறது. 

            *  சரியான மாதம், வருடம் மற்றும் காலங்களை (குளிர்காலம் ,
மழைக்காலம் ,வெயில் காலம்) குறிப்பிடும் பொழுது அங்கு IN பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறியவற்றை சற்று விரிவாக எடுத்துக்காட்டுடன் தெளிவாக பார்ப்போம் வாங்க.

முதலில் சரியான நேரத்தை குறிக்கும் பொழுது அங்கு AT பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1 

We start our work at 9 am. 
நாங்கள் காலை 9:00 மணிக்கு எங்கள் வேலையை தொடங்குகிறோம்.

எடுத்துக்காட்டு : 2

We finish our work  at 4.40 pm. 
நாங்கள் மாலை 4.40 மணிக்கு எங்கள் வேலையை முடிக்கிறோம் .

மேற்கூறிய இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் சரியான நேரம் குறிப்பிடப்படுவதால் PREPOSITION ஆக AT பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக சரியான நாள், தேதி மற்றும் தேதியோடு கூடிய மாதத்தை குறிப்பிடும் பொழுது அங்கு ON பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1 

He will come on Monday. 
அவர் திங்கட்கிழமையன்று வருவார்.

மேற்கூறியவாறு திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, மற்றும் ஞாயிறு போன்ற கிழமைகளை குறிப்பிடும் பொழுது அங்கு PREPOSITION ஆக ON பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 2

We all go there on pongal day. 
நாங்கள் அனைவரும் பொங்கல் நாளில் அங்கு செல்கிறோம்.

மேற்கூறியவாறு சிறப்பான நாட்கள், முக்கியமானநாட்கள், பண்டிகை நாட்களை குறிப்பிடும் பொழுது அங்கு PREPOSITION ஆக ON பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 3

We have exam on 14th August. 
ஆகஸ்ட் 14ஆம் தேதியில் எங்களுக்கு தேர்வு உள்ளது.

மேற்கூறியவாறு தேதியுடன் கூடிய மாதத்தை குறிப்பிடும் பொழுது (14th August) அங்கு PREPOSITION ஆக ON பயன்படுத்த வேண்டும் மேலும் தேதி மட்டும் வந்தாலும் (We have exam on 14.) அங்கும் ON தான் பயன்படுத்த வேண்டும்.

அடுத்ததாக சரியான மாதம், வருடம் மற்றும் காலங்களை (குளிர்காலம்,
மழைக்காலம், வெயில் காலம்) குறிப்பிடும் பொழுது அங்கு IN பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1 

The work starts in February. 
பிப்ரவரி மாதத்தில் வேலை
தொடங்குகிறது.

எடுத்துக்காட்டு : 2 

I started my career in 2006.
நான் எனது தொழில் வாழ்க்கையை 2006 இல் தொடங்கினேன்.

எடுத்துக்காட்டு : 3  

I enjoy my stay here in winter season. 
குளிர்காலத்தில் நான் இங்கு தங்கி இருப்பதை ரசிக்கிறேன்.

மேற்கூறியவாறு சரியான மாதம், வருடம் மற்றும் காலங்களை குறிப்பிடும் பொழுது அங்கு IN பயன்படுத்த வேண்டும்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலமாக காலத்தை குறிப்பிடும் பொழுது எவ்வாறாக PREPOSITIONS IN, ON & AT பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்த்தோம். இப்பொழுது இடத்தைக் குறிக்கும் பொழுது எவ்வாறாக இந்த மூன்று PREPOSITIONS களும் பயன்படுத்தப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

காலத்தை குறிக்கும் பொழுது இந்த மூன்று PREPOSITIONS களும் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை 100% முழுமையாக நம்மால் புரிந்து கற்றுக்கொள்ள முடியும் ஆனால் அதே நேரத்தில் இடத்தை குறிக்கும் பொழுது ஒரு 99 சதவீதம் மட்டுமே இதனை நாம் புரிந்து கற்றுக் கொள்ள முடியும் மீதி இருக்கின்ற ஒரு சதவீதம் இதனை நாம் ஆங்கிலத்தின் விதியின்படி அப்படியே கற்றுக் கொள்வது தான் சிறப்பாக அமையும் இதனை நாம் சில எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கும் பொழுது உங்களுக்கு புரியும்.

இடத்தை குறிப்பிடும் பொழுது IN ஐ உள் என்ற அர்த்தத்திலும் ON ஐ மீது & மேல் என்ற அர்த்தத்திலும் AT ஐ ஆல் என்ற அர்த்தத்திலும் எடுத்துக் கொள்ளலாம் ஆனால் எல்லா  நேரங்களிலும்  இதுவே சரியாக (exact) இருக்கும் என்று கூற முடியாது. காரணம், ஆங்கிலத்தை பொருத்தவரைக்கும் இந்த வார்த்தைகள் எங்கு பயன்படுத்தப்படுகிறது அவை எந்த வார்த்தைக்கு முன் வருகிறது என்பதை பார்த்து அவற்றை அப்படியே கற்றுக் கொள்வதுதான் மிகுந்த பலனளிக்கும் இதற்கான எடுத்துக்காட்டுகள் பார்ப்போம். 

எடுத்துக்காட்டு : 1 

The mobile is in the box. 
மொபைல் பெட்டியினுள் உள்ளது .

எடுத்துக்காட்டு : 2

The mobile is on n the table. 
மொபைல் மேஜையின் மேல் உள்ளது.

எடுத்துக்காட்டு : 3

He is standing at the bus stop. 
அவர் பஸ் நிறுத்தத்தில் நின்று
கொண்டிருக்கிறார்.

எடுத்துக்காட்டு : 4

He is standing at the Traffic lights. 
அவர் போக்குவரத்து விளக்குகளில் நின்று கொண்டிருக்கிறார் .

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

He is in the car.  - அவர் காரில் இருக்கிறார்

He is in the  taxi.  - அவர் காரில் இருக்கிறார்

He is in the cab.  - அவர் காரில் இருக்கிறார்

He is in the  boat. -அவர் படகில் இருக்கிறார்

(taxi,  car, cab, boat) வந்தால் "IN" என்ற preposition தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி. 

He is on the train.
அவர் ரயிலில் இருக்கிறார்.

He is on the Plane.
அவர் விமானத்தில் இருக்கிறார்.

He is on the Ship.
அவர் கப்பலில் இருக்கிறார்.

They are on the motorbike.
அவர்கள் மோட்டார் சைக்கிளில் உள்ளனர்.

They are on the bicycle.
அவர்களின் மிதிவண்டியில் உள்ளனர்.

train,  plane,  ship, motorbike,  bicycle போன்ற வார்த்தைகள் வந்தால் "ON" என்ற preposition தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

I am at home.
நான் வீட்டில் இருக்கிறேன்.

I am at school.
நான் பள்ளியில் இருக்கிறேன்.

I am at college.
 நான் கல்லூரியில் இருக்கிறேன்.

I am at university.
நான் பல்கலைக்கழகத்தில் இருக்கிறேன்.

I am at work.
நான் வேலையில் இருக்கிறேன்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின்படி இந்த மாதிரி இடத்தில "AT" தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

My school is in Thoothukudi.
எனது பள்ளி தூத்துக்குடியில் உள்ளது.

My college is in Madurai.
எனது கல்லூரி மதுரையில் உள்ளது.

My  university is in Chennai.
 எனது பல்கலைக்கழகம் சென்னையில் உள்ளது.

I am in the office.
நான் அலுவலகத்தில் இருக்கிறேன்.

I am studying at Lasalle college in Manila.
நான் மணிலாவில் உள்ள லசால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன்.
 
விளக்கம் :

மேற்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒரு பெரிய இடத்தை குறிப்பிடும் பொழுது  IN
பயன்படுத்த வேண்டும் (in Manila). அந்த பெரிய இடத்திற்கு கீழ் உள்ள சிறிய இடத்தை குறிப்பிடும் பொழுது  AT பயன்படுத்த வேண்டும் (at Lasalle college).

மேலும் சில எடுத்துக்காட்டுகள் :

They are standing at the entrance of my house.
அவர்கள் என் வீட்டின் நுழைவாயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

They are at home.
அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள் .

"home "என்று வந்தால் அங்கு "at"தான் பயன்படுத்த வேண்டும் என்பது விதி.

They are at Raja's house.
அவர்கள் ராஜாவின் வீட்டில் இருக்கிறார்கள்.

 விளக்கம்  :

யாராவது ஒருவரின் "house" என்று குறிப்பிடும் பொழுது அங்கு "at" தான் பயன்படுத்த வேண்டும் எடுத்துக்காட்டாக at Raja's house, at Rani's house etc.

They are in the house.
அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.

விளக்கம் :

"house" என்று வரும்பொழுது அங்கு "in"
தான் பயன்படுத்த வேண்டும் (in the house) 
அதேபோல், வீட்டின் ஒவ்வொரு அறையையும் (room) குறிப்பிடும் பொழுதும் அங்கு "in" தான் பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டுகள் :

They are in my room.
அவர்கள் எனது அறையில் இருக்கிறார்கள். 

They are in my bed.
அவர்கள் எனது படுக்கையில் இருக்கிறார்கள்.

They are in the kitchen.
அவர்கள் சமையலறையில் இருக்கிறார்கள்.

The fan is on the ceiling.
மின்விசிறி சீலிங்கில் உள்ளது.


The clock is on the wall.
கடிகாரம் சுவரில் உள்ளது.


Keep the things on the corner.
பொருட்களை மூலையில் வைக்கவும்.

விளக்கம் :

"Corner" என்று வரும்பொழுது அங்கு "on" தான் பயன்படுத்த வேண்டும்.

My friends are on the third floor.
எனது நண்பர்கள் மூன்றாவது மாடியில் இருக்கிறார்கள்.

விளக்கம் :

இரண்டாவது மாடி,  மூன்றாவது மாடி என்று குறிப்பிடும் பொழுது அங்கு"on" தான் பயன்படுத்த வேண்டும்.

Please wait for me at the exit.
வெளியேறும் இடத்தில் எனக்காக காத்திருங்கள்.

விளக்கம் :

(exit) என்று வரும் பொழுது அங்கு"at" தான் பயன்படுத்த வேண்டும் (at exit).

Everything is finished in the end.
முடிவில் எல்லாம் முடிந்தது.

விளக்கம் :

"end" என்று வரும்பொழுது அங்கு "in" என்ற வார்த்தைதான் பயன்படுத்த வேண்டும் 
(in the end).

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது (in, on, at) போன்ற prepositions இடத்தை குறிப்பிடும் பொழுது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதை நாம் அப்படியே படித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அவை எந்த வார்த்தையுடன் வருகிறது என்பதை நாம் படித்துவிட்டால் 100 சதவீதம் இந்த prepositions களை முழுமையாக எந்த தவறும் இல்லாமல் பயன்படுத்த முடியும்.

மேலும் தொடர்ந்து நாம் ஒவ்வொரு prepositions களையும் தனித்தனியாகவும்  விரிவாகவும் பார்ப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...