Know the preposition ARROUND in detail...
Know the word AROUND...
Preposition "AROUND" ஆனது ஆங்கிலத்தில் மூன்று இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொன்றையும் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
முதலாவதாக "சுற்றி" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக "முழுவதும்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதே இடத்தில் இதே அர்த்தத்தில் ACROSS என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம்.
மூன்றாவதாக "கிட்டத்தட்ட" அல்லது "அருகில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கூறிய எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
முதலாவதாக "சுற்றி" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
He tied the rope around the tree என்று சொல்லலாம் அதாவது அவர் கயிற்றை மரத்தை "சுற்றி" கட்டினார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
They all sat around the table for the meeting என்று சொல்லலாம் அதாவது அவர்கள் அனைவரும் கூட்டத்திற்காக மேஜையை "சுற்றி" அமர்ந்தனர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
He walks around the building for exercise என்று சொல்லலாம் அதாவது அவர் உடற்பயிற்சிக்காக கட்டிடத்தை "சுற்றி" நடக்கிறார் என்று அர்த்தம்.
இரண்டாவதாக "முழுவதும்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதே இடத்தில் "ACROSS" என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு : 1
Mobile is used by all the people around the world என்று சொல்லலாம் அல்லது Mobile is used by all the people across the world என்றும் சொல்லலாம் இரண்டிற்கும் ஒரே அர்த்தம் தான் அதாவது மொபைலானது உலகம் முழுவதும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
The company has lot of shops around /across the world என்று சொல்லலாம் அதாவது இந்நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் நிறைய கடைகள் உள்ளன என்று அர்த்தம்.
Note
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில் AROUND என்பதற்கு பதிலாக நாம் "ACROSS" என்ற Preposition ஐ பயன்படுத்தலாம்.
இரண்டிற்குமே ஒரே அர்த்தம் தான்.
மூன்றாவதாக "கிட்டத்தட்ட" அல்லது "அருகில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
They came home around 5 in the morning என்று சொல்லலாம் அதாவது அதிகாலை 5 மணி அளவில் அவர் வீட்டிற்கு வந்தார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Raja lives somewhere around here என்று சொல்லலாம் அதாவது ராஜா இங்கே தான் எங்கேயோ வசிக்கிறார் என்று அர்த்தம்.
மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் Preposition "AROUND" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.
தொடர்ந்து அடுத்த Preposition ஐ பற்றி படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக