Know the preposition BEFORE in detail...
Know the word AMONG...
நண்பர்களே! இந்த பதிவில் preposition "AMONG" மற்றும் "BETWEEN" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் படிப்போம்.
முதலில் "AMONG" என்ற preposition பற்றி பார்ப்போம்.
மூன்று முக்கியமான இடங்களில் நாம் எவ்வாறு "AMONG" என்ற Preposition -ஐ பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
1. "நடுவில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2. "இடையே" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
3. "களில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட அனைத்து முக்கியமான விஷயங்களையும் (important points) எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்ப்போம்.
முதலாவதாக "நடுவில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
The house is built among the trees என்று சொல்லலாம் அதாவது வீடானது மரங்களுக்கு நடுவில் கட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Raja is among his friends என்று சொல்லலாம் அதாவது ராஜா அவரது நண்பர்களுக்கு நடுவில் இருக்கிறார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
I saw a neem tree among mango trees என்று சொல்லலாம் அதாவது மாமரங்களுக்கு நடுவில் ஒரு வேப்ப மரத்தை நான் கண்டேன் என்று அர்த்தம்.
இரண்டாவதாக "இடையே" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
We should discuss it among ourselves first என்று சொல்லலாம் அதாவது முதலில் அதை நம்மிடையே விவாதிக்க வேண்டும் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
You should practice among yourselves first என்று சொல்லலாம் அதாவது நீங்கள் முதலில் உங்களிடையே பயிற்சி செய்ய வேண்டும் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
Father divided the property among his sons என்று சொல்லலாம் அதாவது தந்தை சொத்தை தனது மகன்களுக்கிடையே பிரித்தார் என்று அர்த்தம்.
மூன்றாவதாக "களில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
A foreign lady was among the protesters என்று சொல்லலாம் அதாவது போராட்டக்காரர்களில் ஒரு வெளிநாட்டு பெண்மணியும் இருந்தார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Raja was one among the last to leave என்று சொல்லலாம் அதாவது கடைசியாக வெளியேறியவர்களில் ராஜாவும் ஒருவராக இருந்தார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
Rani was one among the best students in the class என்று சொல்லலாம் அதாவது வகுப்பில் உள்ள சிறந்த மாணவர்களில் ராணியும் ஒருவராக இருந்தார் என்று அர்த்தம்.
இரண்டாவதாக preposition "BETWEEN" பற்றி எடுத்துக்காட்டுகளுடன் தெளிவாகவும் விளக்கமாகவும் படிப்போம்.
1. "இடையே" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
(குறிப்பாக இரு நபர்களுக்கு இடையே அல்லது இரு பொருள்களுக்கு இடையே என்று வரும் பொழுது மட்டுமே நாம் "BETWEEN" என்ற preposition - ஐ பயன்படுத்த வேண்டும்.)
எடுத்துக்காட்டு : 1
My house is built between a neem tree and a mango tree என்று சொல்லலாம் அதாவது எனது வீடானது ஒரு வேப்ப மரத்திற்கும் ஒரு மா மரத்திற்கும் இடையில்கட்டப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Solve the problem between you two first என்று சொல்லலாம் அதாவது முதலில் உங்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனையை தீர்க்கவும் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
Father divided the property between two of his sons என்று சொல்லலாம் அதாவது தந்தை தனது இரண்டு மகன்களுக்கிடையே சொத்தை பிரித்தார் என்று அர்த்தம்.
மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "AMONG" மற்றும் "BETWEEN" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.
தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக