Know the preposition BEHIND in detail...

Know the word BEHIND...
நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "BEHIND" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம்.

BEHIND என்ற Preposition ஆனது பின்னால், பின்னாடி, பின் போன்ற தமிழ் அர்த்தங்களில் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

1. இடத்திற்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.
 
2. பொருளுக்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.

3. ஆட்களுக்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.

4. நேரத்திற்கு பின்னால் மற்றும் நிகழ்ச்சிக்கு பின்னால் என்று வரும்பொழுது அங்கு நாம் BEHIND என்ற Preposition -ஐ பயன்படுத்தக்கூடாது. மாறாக "AFTER" என்ற Preposition - ஐ பயன்படுத்த வேண்டும்.

மேற்கூறிய எல்லாவற்றையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன் விரிவாக பார்ப்போம்.

முதலாவதாக இடத்திற்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

I am standing behind the school building என்று சொல்லலாம் அதாவது நான் பள்ளி கட்டிடத்திற்கு பின்னால் நின்று கொண்டிருக்கிறேன் என்று அர்த்தம்.

இரண்டாவதாக பொருளுக்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The chair is behind the desk என்று சொல்லலாம் அதாவது நாற்காலியானது மேசைக்கு பின்னால் உள்ளது என்று அர்த்தம்.

மூன்றாவதாக ஆட்களுக்கு பின்னால் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Rani hid herself behind Raja என்று சொல்லலாம் அதாவது ராணி ராஜாவின் பின்னால் ஒளிந்தாள் என்று அர்த்தம்.

நான்காவதாக நேரத்திற்கு பின்னால் என்று வரும்பொழுது அங்கே சிறிது கவனமாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 1

Raja will come before 9 'o' clock என்று சொல்லலாம் அதாவது ராஜா 9:00 மணிக்கு முன்னால் வருவான் என்று அர்த்தம் ஆனால் Raja will come "behind" 9 'o' clock என்பது தவறானது.
மாறாக Raja will come after 9 'o' clock என்று சொல்லலாம் அதாவது ராஜா 9:00 மணிக்கு பிறகு வருவான்
என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Raja is 5 minutes behind என்று சொல்லலாம் அதாவது ராஜா 5 நிமிடம் பின்னால் (தாமதமாக)
உள்ளார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We are behind the given schedule என்று சொல்லலாம் அதாவது கொடுக்கப்பட்ட அட்டவணையின் படி நாங்கள் பின்னால் (தாமதமாக) உள்ளோம் என்று அர்த்தம்.

அதனைப் போலவே நிகழ்ச்சிக்கு பின்னால் என்று வரும்பொழுது அங்கே சிறிது கவனமாக பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 1

I met her before lunch என்று சொல்லலாம் அதாவது நான் அவளை மதிய உணவிற்கு முன் சந்தித்தேன் என்று அர்த்தம் ஆனால் அதே நேரத்தில் I met her behind lunch என்பது தவறானது மாறாக I met her after lunch என்று சொல்லலாம் அதாவது நான் அவளை மதிய உணவிற்கு பின் சந்தித்தேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The accident took place just behind me என்று சொல்லலாம் அதாவது அந்த விபத்தானது அப்படியே எனக்கு பின்னாடி நடந்தது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Your name is before my name என்று சொல்லலாம் அதாவது உன்னுடைய பெயர் என்னுடைய பெயருக்கு முன்னால் இருக்கிறது என்று அர்த்தம் ஆனால் அதே நேரத்தில் Your name is behind my name என்பது தவறானது ஏனெனில் இதனுடைய அர்த்தமானது உன்னுடைய பெயர் என்னுடைய பெயருக்கு பின்னால் இருப்பதால் என்னுடைய பெயர் தெரியவில்லை மறைக்கிறது என்று அர்த்தம். எனவே Your name comes after my name என்றுதான் சொல்ல வேண்டும் அதாவது உன்னுடைய பெயர் என்னுடைய பெயருக்கு பின்னால் வருகிறது என்று அர்த்தம்.

ஐந்தாவதாக SPECIAL PLACES இல் BEHIND பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Her family is behind in all her efforts என்று சொல்லலாம் அதாவது அவளுடைய எல்லா முயற்சிகளிலும் அவளுடைய குடும்பம் பின்னால் இருக்கிறது என்று அர்த்தம்.
 
மேற்கூறிய எடுத்துக்காட்டில் பின்னால் என்பதற்கு பொருள் (support) ஆதரவு தெரிவித்தல் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

What is behind your happy smile என்று சொல்லலாம் அதாவது உங்கள் மகிழ்ச்சியான புன்னகையின் பின்னால் என்ன இருக்கிறது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் பின்னால் என்பதன் பொருள் "காரணம்" ஆகும்.

எடுத்துக்காட்டு : 3

She has 10 years of experience behind her என்று சொல்லலாம் அதாவது அவளுக்கு பின்னால் பத்து வருட அனுபவம் உள்ளது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டில் பின்னால் என்பதன் பொருள் அனுபவத்தை உயர்த்தி காட்டுவது ஆகும்.

அவ்வளவுதான் நண்பர்களே! மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "BEHIND" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.

நாம் தொடர்ந்து அடுத்த Preposition ஐ படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...