Know the preposition NEAR in detail in Tamil...
Know the word NEAR
அருகில் அல்லது பக்கத்தில் என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் preposition NEAR பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக ஒரு ஆளுக்கு அருகில், ஒரு பொருளுக்கு அருகில், ஒரு சூழ்நிலைக்கு அருகில், ஒரு இடத்திற்கு அருகில், ஒரு மணிக்கு அருகில் என்று பல்வேறு இடங்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட அனைத்தையும் பற்றி விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.
முதலாவதாக ஆளுக்கு அருகில் என்ற அர்த்தத்தில் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 1
I stand near my friend என்று சொல்லலாம் அதாவது நான் என் நண்பரின் அருகில் நிற்கிறேன் என்று அர்த்தம்.
இரண்டாவதாக இடத்திற்கு அருகில் என்ற அர்த்தத்தில் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 2
He was standing near the school என்று சொல்லலாம் அதாவது அவர் பள்ளிக்கு அருகில் நின்று கொண்டிருந்தார் என்று அர்த்தம்.
மூன்றாவதாக ஒரு சூழ்நிலைக்கு அருகில் என்ற அர்த்தத்தில் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 3
His friend was near death but escaped by God's grace என்று சொல்லலாம் அதாவது அவரது நண்பர் மரணத்திற்கு அருகில் இருந்தார் ஆனால் கடவுளின் கிருபையால்
தப்பினார் என்று அர்த்தம்.
நான்காவதாக ஒரு மணிக்கு அருகில் என்ற அர்த்தத்தில் ஒரு எடுத்துக்காட்டு பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 4
Raja had reached home near 3 o'clock in the morning என்று அர்த்தம் அதாவது ராஜா அதிகாலை 3 மணிக்கு அருகே வீட்டிற்கு வந்திருந்தார் என்று அர்த்தம்.
இன்னும் சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.
எடுத்துக்காட்டு : 5
He always says everything near the truth and that is not exactly the truth என்று சொல்லும் பொழுது அவர் எப்போதும் எல்லாவற்றையும் உண்மைக்கு அருகில் கூறுவார் என்று அர்த்தம் அதாவது அவர் சொல்வது உண்மையாக இருக்காது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 6
He got near 100 marks என்று சொல்வார்கள் அதாவது அவர் 100 க்கு அருகில் மதிப்பெண் வாங்கினார் என்று அர்த்தம்.
அவ்வளவுதான் நண்பர்களே!
மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "NEAR" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.
தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக