Know the preposition OFF in detail...

Know the word OFF...
நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "OFF" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம்.

மூன்று இடங்களில் preposition OFF பயன்படுத்தப்படுகிறது ஆனால் தனியாக இல்லை Verb உடன் சேர்த்து அதாவது VERB + OFF என்று பயன்படுத்தப்படுகிறது.

அவை ஒவ்வொன்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியான Verb பயன்படுத்தப்படுகிறது அதை பற்றியும் பார்ப்போம்.

முதலாவதாக ஒரு இடத்தை விட்டு செல்லும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக ஒரு இடத்திலிருந்த ஒரு பொருள் அல்லது ஒரு நபர் அந்த இடத்திலிருந்து கீழே விழும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக BUS, CAR, PLANE போன்றவற்றிலிருந்து இறங்கும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறிய அனைத்தையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன் பார்ப்போம். உங்களுக்கு தெளிவாக புரிந்து விடும்.

முதலாவதாக ஒரு இடத்தை விட்டு செல்லும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறாக நாம் பயன்படுத்தும் பொழுது SET, GO & BE போன்ற Verb களை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 1

He went off for the office என்று சொல்லலாம் அதாவது அவர் அலுவலகத்திற்குச் சென்றார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

He set off for Madurai by a car என்று சொல்லலாம் அதாவது அவர் ஒரு காரில் மதுரைக்கு புறப்பட்டார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

I will be off to America next week என்று சொல்லலாம் அதாவது நான் அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு போய் விடுவேன் என்று அர்த்தம்.

இரண்டாவதாக BUS, CAR, PLANE போன்றவற்றிலிருந்து இறங்கும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பொழுது பயன்படுத்த வேண்டிய Verb : GET.

எடுத்துக்காட்டு : 1

We should get off the bus in the next stop என்று சொல்லலாம் அதாவது அடுத்த நிறுத்தத்தில் நாங்கள் பேருந்தில் இருந்து இறங்க வேண்டும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I met him when he got off the plane என்று சொல்லலாம் அதாவது அவர் விமானத்திலிருந்து இறங்கிய போது நான் அவரை சந்தித்தேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We shall get off the car now என்று சொல்லலாம் அதாவது நாம் இப்போது காரில் இருந்து இறங்கிடுவோம் என்று அர்த்தம்.

மூன்றாவதாக ஒரு இடத்திலிருந்த ஒரு பொருள் அல்லது ஒரு நபர் அந்த இடத்திலிருந்து கீழே விழும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The wind blew the cup off the table என்று சொல்லலாம் அதாவது காற்று மேசையிலிருந்து கோப்பையை கீழே வீசியது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Many of them slipped off the ground while running என்று சொல்லலாம் அதாவது அவர்களில் பலர் ஓடும்போது மைதானத்திலிருந்து வழுவி விழுந்தனர் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Raja fell off the chair என்று சொல்லலாம் அதாவது ராஜா நாற்காலியிலிருந்து விழுந்தார் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "OFF" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.

தொடர்ந்து அடுத்தடுத்த Preposition பற்றி படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...