Know the preposition WITH in detail...

Know the word WITH in detail...
நண்பர்களே! இந்த பதிவிலே நாம் Preposition "WITH" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம்.

மூன்று இடங்களில் preposition "WITH" ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.  ஒவ்வொன்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

முதலாவதாக "உடன்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக ஏதாவது ஒரு பொருளின் உதவியோடு ஒரு செயலை செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக ஒரு பொருளின் உதவியோடு ஒரு இடம் நிரப்பப்படும் பொழுது மற்றும் மூடப்படும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நான்காவதாக SOME SPECIAL PLACES இல் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறிய எல்லாவற்றையும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடன் பார்க்கும் பொழுது உங்களுக்கு தெளிவாக புரிந்து விடும்.

முதலாவதாக உடன் என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

My parents live with me என்று சொல்லலாம் அதாவது எனது பெற்றோர்கள் என்னுடன் வாழ்கிறார்கள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I have a bike with me என்று சொல்லலாம் அதாவது நான் என்னுடன் ஒரு பைக் வைத்திருக்கிறேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Did you see anybody with a mobile here? என்று கேள்வி கேட்கலாம் அதாவது நீங்க மொபைலுடன் யாரையாவது இங்கே பார்த்தீர்களா? என்று அர்த்தம்.

இரண்டாவதாக ஏதாவதொரு பொருளின் உதவியோடு ஒரு செயலை செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

You can cut the mango with a knife என்று சொல்லலாம் அதாவது நீங்கள் ஒரு கத்தியால் மாம்பழத்தை வெட்டலாம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

You can write the essay with the pencil என்று சொல்லலாம் அதாவது நீங்கள் பென்சிலின் உதவியோடு கட்டுரையை எழுதலாம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Clean the room with water என்று சொல்லலாம் அதாவது அறையை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யவும் என்று அர்த்தம்.

மூன்றாவதாக ஒரு பொருளின் உதவியோடு ஒரு இடம் நிரப்பப்படும் பொழுது மற்றும் மூடப்படும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The bucket is filled with water என்று சொல்லலாம் அதாவது வாளியானது நீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The room is filled with sweet fragrance என்று சொல்லலாம் அதாவது அறையானது இனிமையான நறுமணத்தால் நிறைந்து இருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

He covered the table with the plastic sheet என்று சொல்லலாம் அதாவது அவர் பிளாஸ்டிக் தாளால் மேசையை மூடினார் என்று அர்த்தம்.


நான்காவதாக SOME SPECIAL PLACES இல் பயன்படுத்தப்படுகிறது அதாவது ஒரு மனிதனின் குணநலத்தை (character) பற்றி சொல்லும் பொழுது அங்கு "WITH" பயன்படுத்தப்படுகிறது. எப்படி என்று எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 1

He sleeps inside the room with the door open என்று சொல்லலாம் அவன்  கதவை திறந்து வைத்துக்கொண்டே அறைக்குள் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

She has a habit of sleeping with the window open என்று சொல்லலாம் அதாவது ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு தூங்கும் பழக்கம் அவளுக்கு இருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

The meal comes with a fruit juice என்று சொல்லலாம் அதாவது உணவுடன் பழச்சாறும் கொடுக்கப்படுகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 4

He always speaks with the hands in the pocket என்று சொல்லலாம் அதாவது அவன் பாக்கெட்ல கையை விட்டுக் கொண்டே எப்பொழுதும் பேசுவான் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 5

The manager always treats everybody with dignity என்று சொல்லலாம் அதாவது மேலாளர் எப்பொழுதும் எல்லோரையும் கண்ணியத்துடன் நடத்துவார் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition  "WITH" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  கற்றோம்.

தொடர்ந்து அடுத்தடுத்த Preposition பற்றி படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...