Know the preposition WITHIN in detail...

Know the word WITHIN...
நண்பர்களே! இந்த பதிவிலே preposition WITHIN பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.

நண்பர்களே! preposition WITHIN ஆனது ஆங்கிலத்தில் "உள், உள்ளே அல்லது உள்ளாக" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக நேரத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Please complete the report within the next hour என்று சொல்லலாம் அதாவது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட்டை முடிக்கவும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Within five minutes, we'll be at the airport என்று சொல்லலாம் அதாவது ஐந்து நிமிடத்திற்குள், நாம் விமான நிலையத்தில் இருப்போம் என்று அர்த்தம்.

இரண்டாவதாக இடத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The hotel is located within walking distance of the beach என்று சொல்லலாம் அதாவது ஹோட்டலானது கடற்கரையிலிருந்து நடந்து செல்லும் தூரத்திற்குள் அமைந்துள்ளது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

His house is located within a 10-minute drive from the airport என்று சொல்லலாம் அதாவது விமான நிலையத்திலிருந்து 10 நிமிட பயணத்திற்குள் அவனது வீடு அமைந்துள்ளது என்று அர்த்தம்.

மூன்றாவதாக நிபந்தனையை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது.

அதாவது ஒரு குறிப்பிட்ட நிபந்தனை அல்லது வரம்பைக் குறிப்பிடும் பொழுது WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1 

The medicine must be stored within a temperature range of 5 to 25 degrees Celsius என்று சொல்லலாம் அதாவது மருந்தானது 5 முதல் 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரம்பிற்குள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The payment must be made within 30 days of the invoice date என்று சொல்லலாம் அதாவது விலைப்பட்டியல் வழங்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று அர்த்தம்.

நான்காவதாக எல்லா பக்கங்களாலும் மூடப்பட்டிருக்கும் ஒரு இடத்திற்குள் அல்லது ஒரு பொருளுக்குள் இருக்கும் மற்றொரு பொருளை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The toy was found within the box என்று சொல்லலாம் அதாவது பொம்மையானது பெட்டிக்குள்  கண்டெடுக்கப்பட்டது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The diamond was found within the folds of the velvet cloth என்று சொல்லலாம் அதாவது வெல்வெட் துணியின் மடிப்புக்குள் வைரம் கண்டெடுக்கப்பட்டது என்று அர்த்தம்.

ஐந்தாவதாக கொள்ளளவு திறனை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The new car can comfortably seat six passengers within its spacious interior என்று சொல்லலாம் அதாவது புதிய காரானது அதன் உட்புறத்திற்குள் ஆறு பயணிகளை வசதியாக அமர வைக்க முடியும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The meeting room can hold up to 20 people within its walls என்று சொல்லலாம் அதாவது கூட்ட அறைக்குள் 20 பேர் வரை தங்கலாம் என்று அர்த்தம்.

அவ்வளவுதான் நண்பர்களே! கண்டிப்பாக இந்த WITHIN என்ற preposition உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இதனை வைத்து வாக்கியங்களை எழுதி பாருங்கள்.

எழுதிய வாக்கியங்களை கமெண்டில் பதிவிடுங்கள்...

தொடர்ந்து அடுத்த Preposition ஐ பற்றி படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...