Know the preposition WITHOUT in detail...

Know the word WITHOUT...
நண்பர்களே! இந்த பதிவிலே preposition WITHOUT பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.

நண்பர்களே! preposition WITHOUT ஆனது "இல்லாமல்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் நான்கு இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக ஏதாவதொன்று இல்லாததைக் குறிக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

I can't drive vehicle without my glasses என்று சொல்லலாம் அதாவது என்னால் கண்ணாடி இல்லாமல் வாகனம் ஓட்ட முடியாது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

She felt lost without her mobile என்று சொல்லலாம் அதாவது அவளுடைய மொபைல் இல்லாமல் அவள் தொலைந்து போனதாக உணர்ந்தாள் என்று அர்த்தம்.

இரண்டாவதாக கட்டளையிடும்பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The meeting is tomorrow without exception என்று சொல்லலாம் அதாவது விதிவிலக்கு இல்லாமல் கூட்டம் நாளை நடைபெறும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The sale ends tonight without any extension என்று சொல்லலாம் அதாவது விற்பனை எந்த நீட்டிப்பும் இல்லாமல் இன்று இரவு முடிவடைகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Please sign the document without alterations என்று சொல்லலாம் அதாவது  தயவுசெய்து ஆவணத்தில் மாற்றங்கள் இல்லாமல் கையொப்பமிடவும் என்று அர்த்தம்.

மூன்றாவதாக அனுமதி அல்லது அங்கீகாரம் இல்லாததை வெளிப்படுத்தும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

You cannot enter the building without a valid ID என்று சொல்லலாம் அதாவது சரியான ஐடி இல்லாமல் நீங்கள் கட்டிடத்திற்குள் நுழைய முடியாது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

You can't leave the room without permission என்று சொல்லலாம் அதாவது அனுமதி இல்லாமல் நீ அறையை விட்டு வெளியேற முடியாது என்று அர்த்தம்.

அவ்வளவுதான் நண்பர்களே! கண்டிப்பாக இந்த WITHOUT என்ற preposition உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இதனை வைத்து வாக்கியங்களை எழுதி பாருங்கள்.

எழுதிய வாக்கியங்களை கமெண்டில் பதிவிடுங்கள்...

தொடர்ந்து நாம் அடுத்த Preposition ஐ படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...