Know the prepositions BELOW, OVER, UNDER & DOWN in detail...

Know the words BELOW, OVER,  UNDER &  DOWN...
நண்பர்களே! இந்த பதிவிலே prepositions "BELOW, OVER,  UNDER, மற்றும் DOWN" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் படிப்போம்.

மேற்கூறிய ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு படிக்கும் பொழுது தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ளலாம்.

"DOWN" என்ற preposition மற்ற மூன்று preposition - களிலிருந்தும் (BELOW, OVER,  UNDER ) முற்றிலும் மாறுபட்டது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

Above × Below 
                 
இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முழுமையான எதிர்ப்பதம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

Above என்றால் மேலே மற்றும் Below என்றால் கீழே என்று அர்த்தம்.

அடுத்ததாக Under × over இந்த இரண்டும் ஒன்றுக்கொன்று முழுமையான எதிர்ப்பதம். 

Over என்றால் "மேலாக (மீது)" மற்றும் 
Below என்றால் "கீழ் (அடியில்)" என்று அர்த்தம்.

இரண்டு பொருள்களுக்கு அல்லது இரண்டு ஆட்களுக்கு அல்லது  பொருள்களுக்கும் ஆட்களுக்கும் இடையே உள்ள தொடர்பு நிலையை பொறுத்து இந்த வார்த்தைகளை "மேலாக , கீழாக" என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் நாம் பயன்படுத்துகிறோம்.

ஆனால் அதே நேரத்தில் DOWN என்ற Preposition மேலிருந்து கீழ் நோக்கி என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கூறிய அனைத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக பார்ப்போம்.

முதலாவதாக BELOW என்ற prepostion ஆனது இரண்டு பொருள்களுக்கு அல்லது இரண்டு ஆட்களுக்கு அல்லது பொருள்களுக்கும் ஆட்களுக்கும்  இடையே "தொடர்பே இல்லாத" பொழுது "கீழே" என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

There is a beautiful painting below the clock என்று சொல்லலாம் அதாவது கடிகாரத்திற்கு கீழே ஒரு அழகான ஓவியம் உள்ளது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

My friend lives in an apartment below mine என்று சொல்லலாம் அதாவது என் நண்பர் என்னுடைய குடியிருப்புக்கு கீழே வசிக்கிறார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We live up in a hill. There are towns below our town என்று சொல்லலாம் அதாவது 
நாங்கள் ஒரு மலையில் வாழ்கிறோம். எங்கள் ஊருக்கு கீழே நகரங்கள் உள்ளன என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 4

Raja's IQ is below the level of other students என்று சொல்லலாம் அதாவது ராஜாவின் IQ மற்ற மாணவர்களின் மட்டத்திற்கு கீழே உள்ளது என்று அர்த்தம்.

இரண்டாவதாக OVER என்ற prepostion ஆனது இரண்டு பொருள்களுக்கு அல்லது இரண்டு ஆட்களுக்கு அல்லது பொருள்களுக்கும் ஆட்களுக்கும்  இடையே "தொடர்பு இருப்பது போல் தோன்றும்" பொழுது "மேலாக" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The plane flew over the roof of the building என்று சொல்லலாம் அதாவது விமானம் கட்டிடத்தின் கூரைக்கு மேலாக பறந்தது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

She covered herself with the blanket over her என்று சொல்லலாம் அதாவது அவள் தன் மேலாக போர்வையால் தன்னை மூடிக்கொண்டாள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

The flowers are spread over the road என்று சொல்லலாம் அதாவது மலர்கள் சாலையில் மேலாக பரப்பபட்டுள்ளன என்று அர்த்தம்.

மூன்றாவதாக UNDER என்ற prepostion ஆனது இரண்டு பொருள்களுக்கு அல்லது இரண்டு ஆட்களுக்கு அல்லது பொருள்களுக்கும் ஆட்களுக்கும்  இடையே "தொடர்பு இருப்பது போல் தோன்றும்" பொழுது "கீழாக அல்லது அடியில்" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The cat likes to stay under the bed என்று சொல்லலாம் அதாவது பூனை படுக்கைக்கு அடியில் இருக்க விரும்புகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Some books are under the table என்று சொல்லலாம் அதாவது சில புத்தகங்கள் மேசைக்கு அடியில் உள்ளன என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Somebody is under the car என்று சொல்லலாம் அதாவது யாரோ காருக்கு அடியில் இருக்கிறார் என்று அர்த்தம்.

நான்காவதாக DOWN என்ற prepostion ஆனது "மேலிருந்து கீழ் நோக்கி" என்ற தமிழ் அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Rani fell down the stairs என்று சொல்லலாம் அதாவது ராணி படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்தாள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

Raja rolled down the hill என்று சொல்லலாம் அதாவது ராஜா மலையி லிருந்து கீழே உருண்டார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Tears ran down on Rani's face என்று சொல்லலாம் அதாவது ராணியின் முகத்தில் கண்ணீர் வழிந்தது என்று அர்த்தம்.

மேற்கூறிய எடுத்துக்காட்டுகளில் DOWN என்ற PREPOSTION ஐ தொடர்ந்து அந்த வாக்கியத்தில் "இருந்து" என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் பொழுது FROM என்ற வார்த்தை பயன்படுத்த கூடாது ஏனெனில் DOWN என்ற வார்த்தைக்குள் இருந்து என்ற அர்த்தமும் உள்ளது என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

LET'S COMPARE AND STUDY :

1) The plane flew above the cloud. 
விமானம் மேகத்திற்கு மேலே பறந்தது.

அதாவது விமானம் மேகத்திற்கு மேலே பறந்தது ஆனால் விமானத்திற்கும் மேகத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அர்த்தம்.

2) The plane flew over  the cloud என்று சொல்லும் பொழுது விமானம் மேகத்தின் மீது பறந்தது என்று அர்த்தம்.

அதாவது விமானம் மேகத்தின் மீது பறந்தது கிட்டத்தட்ட மேகத்தை தொடுவது போல  பறந்தது என்று அர்த்தம்.

3) The plane flew under the cloud என்று சொல்லலாம் அதாவது விமானம் மேகத்தின் கீழ் பறந்தது என்று அர்த்தம்.

அதாவது விமானம் மேகத்தின் கீழ் பறந்தது, கிட்டத்தட்ட மேகத்தை தொட்டுக் கொண்டு போவது போல் தெரிகிறது என்று அர்த்தம்.

The plane flew below the cloud என்று சொல்லலாம் அதாவது விமானம் மேகத்திற்கு கீழே பறந்து என்று அர்த்தம்.

அதாவது விமானம்  மேகத்திற்கு கீழே பறந்தது அப்படியானால், விமானத்திற்கும் மேகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று அர்த்தம் ஆனால் விமானம் மேகத்திற்கு கீழே பறக்கிறது என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "BELOW, OVER,  UNDER, மற்றும் DOWN" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்   கற்றோம்.

தொடர்ந்து ஒவ்வொரு     
 Preposition பற்றியும் படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...