Know the prepositions INTO & INSIDE...
Know the words INTO & INSIDE...
நண்பர்களே! இந்த பதிவிலே prepositions INTO மற்றும் INSIDE பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் படிப்போம்...
நான்கு முக்கியமான இடங்களில் நாம் எவ்வாறு "INTO" என்ற Preposition -ஐ பயன்படுத்த வேண்டும் என்றும் Preposition INSIDE - க்கானா வரையறை மற்றும் எடுத்துக்காட்டுடன் பார்ப்போம்.
முதலாவதாக INTO பற்றி பார்ப்போம்...
1. ஒரு இடத்திற்கு வெளியிலிருந்து அந்த இடத்திற்கு உள்ளே செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
2. நாம் விருப்பமாக செய்யும் ஒரு செயலை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
3. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஒரு பொருள் மாறும்பொழுது பயன்படுத்தப்படுகிறது.
4. ஒரு இடத்தை (அல்லது) ஒரு பொருளை நோக்கி சென்று மோதும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் INSIDE ஆனது ஒரு பொருள் அல்லது ஒரு நபர் ஏற்கனவே ஒரு இடத்திற்குள் இருக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கண்ட கருத்துக்களை எடுத்துக்காட்டுகளுடன் விரிவாகவும் தெளிவாகவும் பார்ப்போம்...
முதலாவதாக INTO பற்றி பார்ப்போம்...
1. ஒரு இடத்திற்கு வெளியிலிருந்து அந்த இடத்திற்கு உள்ளே செல்லும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
Rani walked into the house என்று சொல்லலாம் அதாவது ராணி வீட்டிற்குள் சென்றாள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
Raja dived into the water என்று சொல்லலாம் அதாவது ராஜா தண்ணீருக்குள் குதித்தார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
We all walked into the classroom என்று சொல்லலாம் அதாவது நாங்கள் அனைவரும் வகுப்பறைக்குள் சென்றோம் என்று அர்த்தம்.
2.நாம் "விருப்பமாக" செய்யும் ஒரு செயலை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I am into playing football என்று சொல்லலாம் அதாவது நான் கால்பந்து விளையாடுவதில் மூழ்கி விடுவேன் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு நபர் ஒரு செயலை செய்யும் பொழுது அதனை விருப்பமாக செய்யும் பொழுது நாம் தமிழில் "மூழ்கிடுவான்" என்று பயன்படுத்துவோம் அந்த இடத்தில் இந்த preposition ஐ பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு : 2
She is into playing guitar என்று சொல்லலாம் அதாவது அவள் கிட்டார்(guitar) வாசிப்பதில் மூழ்கி விடுவாள் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
He is into studying Mathematics என்று சொல்லலாம் அதாவது அவன் கணிதம் படிப்பதில் மூழ்கிடுவான் என்று அர்த்தம்.
3. ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு ஒரு பொருள் "மாறும்பொழுது" பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
The wood is turned into paper என்று சொல்லலாம் அதாவது மரம் காகிதமாக மாற்றப்படுகிறது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
The fruit is made into fruit juice என்று சொல்லலாம் அதாவது பழமானது பழச் சாறாக தயாரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
The story is translated into many languages என்று சொல்லலாம் அதாவது இந்த கதையானது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 4
The jealous turns into hatred என்று சொல்லலாம் அதாவது பொறாமையானது வெறுப்பாக மாறுகிறது என்று அர்த்தம்.
4. ஒரு இடத்தை அல்லது ஒரு பொருளை நோக்கி சென்று "மோதும் பொழுது" பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
He has driven the car into the pole என்று சொல்லலாம் அதாவது அவன் காரை கம்பத்திற்குள் விட்டு விட்டான் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
He crashed the car into a tree என்று சொல்லலாம் அதாவது அவன் காரை மரத்திற்குள் விட்டு விட்டான் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
He ran into the wall என்று சொல்லலாம் அதாவது அவன் ஓடிச்சென்று சுவரில் மோதினான் என்று அர்த்தம்.
அதே நேரத்தில் INSIDE ஆனது ஒரு பொருள் அல்லது ஒரு நபர் "ஏற்கனவே ஒரு இடத்திற்குள் இருக்கும் பொழுது" பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I am inside the house என்று அர்த்தம் அதாவது நான் வீட்டிற்குள் இருக்கிறேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
The ball is inside the box என்று சொல்லலாம் அதாவது பந்து பெட்டியின் உள்ளே உள்ளது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
The animals live inside the cave என்று சொல்லலாம் அதாவது குகைக்குள் விலங்குகள் வாழ்கின்றன என்று அர்த்தம்.
மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் preposition "INTO மற்றும் INSIDE" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.
தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக