Know the prepostion ONTO in detail...
Know the word ONTO...
முதலாவதாக ஒரு செயலானது அல்லது ஒரு இயக்கமானது ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பை நோக்கி நகரும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
இரண்டாவதாக ஏதாவதொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாவதாக ஒருவர் மீது ஒரு பொறுப்பையோ அல்லது பழியையோ சுமத்தும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
நான்காவதாக ஒருவர் மற்றொருவரின் எண்ணங்களையோ அல்லது செயலையோ புரிந்து கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எனவே நண்பர்களே! இவை எல்லாவற்றையும் எடுத்துக்காட்டுகளுடன் விரிவாக படிப்போம் வாருங்கள்...
முதலாவதாக ஒரு செயலானது அல்லது ஒரு இயக்கமானது ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பை நோக்கி நகரும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
He climbed onto the roof of the building என்று சொல்லலாம் அதாவது அவர் கட்டிடத்தின் கூரையை நோக்கி ஏறினார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
She jumped onto the bed என்று சொல்லலாம் அதாவது அவள் படுக்கையை நோக்கி தாவினாள் என்று அர்த்தம்.
இரண்டாவதாக ஏதாவதொன்று ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
Raja worked hard to improve his grades and eventually transformed onto a top-performing student என்று சொல்லலாம் அதாவது ராஜா தனது தரங்களை மேம்படுத்த கடுமையாக உழைத்து இறுதியில் சிறந்த செயல்திறன் கொண்ட மாணவராக மாற்றப்பட்டார் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
The company is moving onto a new business model என்று சொல்லலாம் அதாவது நிறுவனமானது ஒரு புதிய வணிக மாதிரியை நோக்கி நகர்கிறது என்று அர்த்தம்.
மூன்றாவதாக ஒருவர் மீது மற்றொருவர் ஒரு பொறுப்பையோ அல்லது பழியையோ சுமத்தும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
The boss put the blame onto the employee for the failed project என்று சொல்லலாம் அதாவது ப்ராஜெக்ட் தோல்வியடைந்ததற்கான பழியை முதலாளி ஊழியர் மீது சுமத்தினார் என்று அர்த்தம்.
The parents put the responsibility onto their child to clean their room என்று சொல்லலாம் அதாவது பெற்றோர்கள் தங்களது அறையை சுத்தம் செய்யும் பொறுப்பை தங்களது குழந்தையின் மீது சுமத்துகிறார்கள் என்று அர்த்தம்.
நான்காவதாக ஒருவர் மற்றொருவரின் எண்ணங்களையோ அல்லது செயலையோ புரிந்து கொள்ளும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 1
I am finally onto your scheme என்று சொல்லலாம் அதாவது நான் இறுதியாக உனது திட்டத்தை புரிந்து கொண்டேன் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
I am onto your game, so don't try to deceive me என்று சொல்லலாம் அதாவது
நான் உனது திட்டத்தை புரிந்து கொண்டேன், எனவே என்னை ஏமாற்ற முயற்சிக்காதே என்று அர்த்தம்.
அவ்வளவுதான் நண்பர்களே! கண்டிப்பாக இந்த ONTO என்ற preposition உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இதனை வைத்து வாக்கியங்களை எழுதி பாருங்கள்.
எழுதிய வாக்கியங்களை கமெண்டில் பதிவிடுங்கள்...
தொடர்ந்து நாம் அடுத்த Preposition ஐ பற்றி படிப்போம்...
கருத்துகள்
கருத்துரையிடுக