Know the proposition IN FRONT OF in detail...

Know the phrase IN FRONT OF...
நண்பர்களே! நாம் இந்த பதிவிலே Preposition IN FRONT OF பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.

Preposition "IN FRONT OF" பற்றி தெரிந்து கொள்ளும்போது Preposition BEFORE பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முந்தைய பதிவுகளில் Preposition  BEFORE பற்றி தெளிவாகவும் விரிவாகவும் கற்றோம் அதனை மீள்பார்வை செய்வது இதனை ஒப்பிட்டு படிக்க உதவி செய்யும்.

 இந்த பதிவில் Preposition IN FRONT OF  -  க்கும்  Preposition "BEFORE"  க்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன என்பதை நாம் தெளிவாகவும் விரிவாகவும் சில  எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 1

He is standing in front of me என்று சொன்னால் அவன் எனக்கு முன்பாக நிற்கிறான் என்று அர்த்தம்.

அதாவது in front of என்று சொல்லும் பொழுது எனக்கு முன்பாக கண்ணெதிரே நிற்கிறான் என்று அர்த்தம் ஆனால் என்னை பார்த்துக் கொண்டு இல்லை என்று அர்த்தம்.


எடுத்துக்காட்டு : 2

He is standing before me என்று சொன்னால் அவன் எனக்கு முன்பாக நிற்கிறான் என்று அர்த்தம் ஆனால் அதே நேரத்தில் அவனும் நானும் நேருக்கு நேராக பார்த்துக் கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

There is a big tree in front of the building என்று சொல்லும் பொழுது கட்டிடத்திற்கு முன்பாக ஒரு மரம் இருக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 4

We took a picture in front of Taj Mahal என்று சொல்லும் பொழுது தாஜ்மஹாலுக்கு முன்பாக நின்று ஒரு புகைப்படம் எடுத்தோம் என்று அர்த்தம்.
அதாவது தாஜ்மஹாலை நேருக்கு நேராக பார்த்துக் கொண்டு புகைப்படம் எடுக்கவில்லை மாறாக தாஜ்மஹாளுக்கு முன்பாக நின்று புகைப்படம் எடுத்தோம் என்று அர்த்தம்.

இந்த பதிவில் நாம் இறுதியாக புரிந்து கொள்ள வேண்டியது Preposition IN FRONT OF என்று வரும் பொழுது ஒரு பொருள் அல்லது ஒரு நபர் நமக்கு முன்பாக இருக்கிறது என்று அர்த்தம்.

அதேபோல் Preposition  BEFORE என்று வரும் பொழுது அந்த பொருளோ அல்லது அந்த நபரோ நமக்கு கண்ணெதிரே அல்லது நேருக்கு நேராக இருக்கிறார் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் "preposition
 IN FRONT OF" மற்றும் "BEFORE" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  கற்றோம்.
 
தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் பார்ப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...