Know the proposition UPON in detail...

Know the word UPON...
நண்பர்களே! இந்த பதிவிலே Preposition "UPON" பற்றி தெளிவாகவும் விரிவாகவும் கற்றுக் கொள்வோம்.

ஐந்து இடங்களில் Preposition "UPON" ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொன்றையும் விரிவாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

1. மீது அல்லது மேலே என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. 

(ஆனால் இதே அர்த்தத்தில் ON என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம். UPON மற்றும் ON இவை இரண்டையும் ஒப்பிட்டு எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்). 

2. ஒரு விஷயத்தின் காரணமாக அல்லது பொறுத்து அல்லது சார்ந்து என்று பேசும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

3. ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அல்லது ஒரு செயல் நடந்து முடிந்ததும் அதனை தொடர்ந்து இன்னொரு செயல் வரும்பொழுது அங்கு பயன்படுத்தப்படுகிறது.

4. "காலத்தை" குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.

5. இரண்டு ஒரே NOUN  - களுக்கு இடையே UPON வரும் பொழுது அங்கே LOT OF  என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இவை அனைத்தையும் எடுத்துக்காட்டுகளுடன் பார்ப்போம்.

முதலாவதாக மீது அல்லது மேலே என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. இங்கே இதே அர்த்தத்தில் ON என்ற Preposition ஐயும் பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டு : 1

The sun light falls upon / on the table என்று சொல்லலாம் அதாவது சூரிய ஒளி மேசையின் மீது விழுகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The sun shines upon / on the hill என்று சொல்லலாம் அதாவது மலையின் மீது சூரியன் பிரகாசிக்கிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

The tree fell upon / on me என்று சொல்லலாம் அதாவது மரம் என் மீது விழுந்தது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 4

The water spilled upon / on the floor என்று சொல்லலாம் அதாவது தரை மேல் தண்ணீர் சிந்தியது என்று அர்த்தம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் வாயிலாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் UPON  மற்றும் ON இரண்டுமே சரிதான் என்பதுதான்.

ஆனால்,  UPON என்பது Standard, old and formal English வார்த்தை ஆனால் ON  இப்பொழுது நடைமுறையில் உள்ள Present generation வார்த்தை என்று சொல்லலாம்.

இரண்டாவதாக ஒரு விஷயத்தின் காரணமாக அல்லது பொறுத்து அல்லது சார்ந்து என்று பேசும் பொழுது பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Everybody came home upon the arrival of my dad என்று சொல்லலாம் அதாவது என் அப்பா வந்ததன் காரணமாக, அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The rat ran upon the sight of a cat என்று சொல்லலாம் அதாவது எலி பூனையை பார்த்ததன் காரணமாக ஓடியது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

My job depends upon his decision என்று சொல்லலாம் அதாவது எனது வேலை அவரது முடிவை பொறுத்து இருக்கிறது என்று அர்த்தம்.


மூன்றாவதாக ஒரு நிகழ்ச்சி நடந்து முடிந்ததும் அல்லது ஒரு செயல் நடந்து முடிந்ததும் அதனை தொடர்ந்து இன்னொரு செயல் வரும்பொழுது அங்கு பயன்படுத்தப்படுகிறது.


எடுத்துக்காட்டு : 1

Raja joined the Army upon leaving the school என்று சொல்லலாம் அதாவது ராஜா பள்ளியை விட்டு வெளியேறியதும் ராணுவத்தில் சேர்ந்தார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

He went to school upon finishing the homework என்று சொல்லலாம் அதாவது அவன் வீட்டுப் பாடத்தை முடித்ததும் பள்ளிக்கு சென்றான் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

Upon finishing the duty, he went back home என்று சொல்லலாம் அதாவது கடமையை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிச் சென்றார் என்று அர்த்தம்.


நான்காவதாக காலத்தை குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.


எடுத்துக்காட்டு : 1

The exam is almost upon us again என்று சொல்லலாம் அதாவது அதற்குள் பரிச்சை மறுபடியும் வந்துவிட்டது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The vacation is almost upon us again என்று சொல்லலாம் அதாவது அதற்குள் விடுமுறை கிட்டத்தட்ட மறுபடியும் வந்துவிட்டது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

The New Year is almost upon us again என்று சொல்லலாம் அதாவது அதற்குள் புது வருடம் மறுபடியும் வந்துவிட்டது என்று அர்த்தம்.


ஐந்தாவதாக இரண்டு ஒரே NOUN - களுக்கு இடையே UPON வரும் பொழுது அங்கே LOT OF  என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.


எடுத்துக்காட்டு : 1

I wrote letters upon letters to you but I received no response என்று சொல்லலாம் அதாவது நான் உங்களுக்கு பல கடிதம் எழுதினேன், ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அர்த்தம். நாம் தமிழில் கூட சொல்லுவோம் நான் உங்களுக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதினேன் என்று சொல்லுவோம் அந்த இடத்தில் தான் இந்த வாக்கியத்தை பயன்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டு : 2

I have been waiting year upon year but no news என்று சொல்லலாம் அதாவது நான் பல வருடங்களாக காத்திருக்கிறேன் ஆனால் எந்த செய்தியும் வரவில்லை என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

We have walked across mile upon mile to meet you என்று சொல்லலாம் அதாவது நாங்கள் பல மைல்கள் கடந்து உன்னை சந்திக்க வந்திருக்கிறோம் என்று அர்த்தம்.

அவ்வளவுதான் நண்பர்களே மேற்கூறிய விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் Preposition "UPON" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் கற்றோம்.

தொடர்ந்து அடுத்த ஒரு Preposition பற்றி படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...