Know the prepostion ABOVE in detail...
The word "ABOVE" functions as preposition and adverb.
நான்கு முக்கியமான இடங்களில் "ABOVE" என்ற இந்த Preposition ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
1. மேலே என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
2 . "விட அதிகமாக" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
3. மிகவும் நேர்மையானவர்கள் அல்லது மிகச் சிறந்தவர்களை குறிக்க "ABOVE" பயன்படுத்தப்படுகிறது.
4 . "ADVERB" ஆக செயல்படுகிறது.
மேற்கண்ட அனைத்திற்கும் எடுத்துக்காட்டுகள் பார்க்கும் பொழுது உங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக "மேலே" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
(எதையாவது அல்லது யாரையாவது விட உயர்ந்த இடம் அல்லது நிலைமையை குறிக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது)
எடுத்துக்காட்டு : 1
My friend lives in the apartment above mine அதாவது என்னுடைய நண்பன் எனது குடியிருப்புக்கு மேலே வசிக்கிறான் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 2
The plane is flying above the clouds அதாவது விமானம் மேகங்களுக்கு மேலே பறக்கிறது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 3
The Inspector ranks above the sub inspector அதாவது இன்ஸ்பெக்டர் பதவி சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு மேலே இருக்கிறது என்று அர்த்தம்.
அடுத்ததாக "விட அதிகமாக" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.
(மற்றவர்களை விட ஒரு சிறந்த நிலையை குறிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது.)
எடுத்துக்காட்டு : 4
The teacher rates her above most other students of her age அதாவது ஆசிரியர் அவளை அவளது வயதின் பிற மாணவர்களை விட மேலாக மதிப்பிடுகிறார்.
எடுத்துக்காட்டு : 5
The manager believes him above most other workers அதாவது மேலாளர் அவரை மற்ற தொழிலாளர்களை விட அதிகமாக நம்புகிறார்.
அடுத்ததாக "மிகவும் நேர்மையானவர்களை" அல்லது "மிகச் சிறந்தவர்களை" குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
எடுத்துக்காட்டு : 6
Raja is not above lying when it suits him அதாவது ராஜா தனக்கு பொருத்தமாக இருக்கும் போதும் பொய் சொல்லவில்லை என்று அர்த்தம்
அதாவது ராஜா சொன்னால் அது பொய்யாக இருக்காது உண்மையாக இருக்கும் என்று நம்பும் இடத்தில் பொய் பேசாமல் உண்மையை பேசுவது என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 7
Rani is above suspicious என்று சொன்னால் Rani is completely trusted என்று அர்த்தம் அதாவது ராணி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள் என்று அர்த்தம்.
இறுதியாக "ADVERB" ஆக செயல்படுகிறது.
எடுத்துக்காட்டு : 8
There are many people in the room above அதாவது மேலே உள்ள அறையில் பலர் உள்ளனர் என்று அர்த்தம்.
எடுத்துக்காட்டு : 9
He looked at the stars above அதாவது மேலே உள்ள நட்சத்திரங்களை அவர் பார்த்தார் என்று அர்த்தம்.
மேற்கண்ட எடுத்துக்காட்டுகளின் மூலமாக ABOVE என்ற வார்த்தையை பற்றி விரிவாக தெரிந்து கொண்டோம். தொடர்ந்து ஒவ்வொரு PREPOSITIONS களையும் தெளிவாகவும் விளக்கமாகவும் பார்ப்போம்.
0 கருத்துகள்