Know the word AFTER in detail...

Know the word AFTER...
நண்பர்களே! இந்த பதிவிலே preposition "AFTER" பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம்.
 
ஆறு முக்கியமான இடங்களில் "AFTER" என்ற Preposition ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

முதலாவதாக "பிறகு" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவதாக "அப்புறம்" என்கிற  தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

மூன்றாவதாக "பின்னால்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நான்காவதாக ஒருவரின் நினைவாக பெயரிடப்படும் பொழுது அங்கே "AFTER" பயன்படுத்தப்படுகிறது.

ஐந்தாவதாக சில சிறப்பான "பேச்சு வழக்குகளில்" பயன்படுத்தப்படுகிறது.

ஆறாவதாக "ADVERB" மற்றும் "CONJUNCTION" ஆக AFTER செயல்படுகிறது.

மேற்கண்ட அனைத்திற்கும் எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் வாருங்கள்...

முதலாவதாக "பிறகு" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

we go to school after breakfast என்று சொல்லலாம் அதாவது நாங்கள் காலை உணவுக்கு பிறகு பள்ளிக்குச் செல்கிறோம் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

They came home after 4 o' clock என்று சொல்லலாம் அதாவது அவர்கள் 4 மணிக்கு பிறகு வீட்டிற்கு வந்தார்கள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

After writing the exam she became happy என்று சொல்லலாம் அதாவது தேர்வு எழுதிய பிறகு அவள் மகிழ்ச்சியாகி விட்டாள் என்று அர்த்தம்.

இரண்டாவதாக "அப்புறம்" என்கிற  தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

I am eating chicken after a long time என்று சொல்லலாம் அதாவது ரொம்ப நாளைக்கு அப்புறம் நான் சிக்கன் சாப்பிடுகிறேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I feel relaxed now after the hectic day என்று சொல்லலாம் அதாவது இந்த பரபரப்பான நாளுக்கப்புறம் இப்பதான் நான் நிம்மதியாக உணர்கிறேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

I feel happy after scoring a goal என்று சொல்லலாம் அதாவது ஒரு கோல் அடித்ததற்கு அப்புறம் தான் நான் சந்தோஷமாக உணர்கிறேன் என்று அர்த்தம்.

மூன்றாவதாக "பின்னால்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

The police is searching the person who is after this murder என்று சொல்லலாம் அதாவது இந்த கொலைக்கு பின்னால் இருக்கும் நபரை போலீஸ்சார் தேடி வருகின்றனர் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

The police is after the thief என்று சொல்லலாம் அதாவது காவல்துறையினர் திருடனுக்கு பின்னால் உள்ளனர் என்று அர்த்தம் அதாவது திருடனை விடாமல் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

People are running after money என்று சொல்லலாம் அதாவது மக்கள் பணத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 4

Rani is after Raja always என்று சொல்லலாம் அதாவது ராணி ராஜாவிற்கு பின்னாடியே போகிறாள் என்று அர்த்தம். 

எடுத்துக்காட்டு : 5

Raja is mad after Rani என்று சொல்லலாம் அதாவது ராஜா ராணியின் பின்னால் பைத்தியமாக இருக்கிறான் என்று அர்த்தம். 

நான்காவதாக ஒருவரின் நினைவாக பெயரிடப்படும் பொழுது அங்கே "AFTER" பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

she is named after her grand mother என்று சொல்லலாம் அதாவது அவளுக்கு அவளது பாட்டியின் நினைவாக  பெயரிடப்படுகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

This place is named after a generous man who lived here என்று சொல்லலாம் அதாவது இந்த இடமானது இங்கு வாழ்ந்த தாராள மனிதர் ஒருவரின் நினைவாக பெயரிடப்படுகிறது என்று அர்த்தம்.

ஐந்தாவதாக சில சிறப்பான "பேச்சு வழக்குகளில்" AFTER பயன்படுத்தப்படுகிறது.

(நேரத்தைக் குறிக்கும் பொழுது பயன்படுத்தப்படுகிறது)

எடுத்துக்காட்டு : 1

The time is 10 "after" 9 (American English)

The time is 10 "past" 9 (British English)

அதாவது மணியானது ஒன்பதாகி பத்து நிமிடம் ஆகிறது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

He asked after you என்றால் 
அவர் உன்னை கேட்டார் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

I go after you = you go first. 
உனக்கு பிறகு வருகிறேன்
(அல்லது)
உனக்கு அடுத்ததாக வருகிறேன்.

ஆறாவதாக After என்ற  preposition "ADVERB" மற்றும் "CONJUNCTION" ஆக செயல்படுகிறது. 

(முதலாவதாக AFTER ஐ "ADVERB" ஆக பார்ப்போம்)

எடுத்துக்காட்டு : 1

He wrote the exam and left the place one day after என்று சொல்லலாம் அதாவது அவர் பரிச்சை எழுதி ஒருநாள் கழித்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்று அர்த்தம்.

NOTE
After என்ற  preposition "ADVERB"  ஆக செயல்படும்பொழுது வாக்கியத்தின்  (sentence) இறுதியில் வரும்.

(இரண்டாவதாக AFTER ஐ "CONJUNCTION" ஆக பார்ப்போம்)

எடுத்துக்காட்டு : 1

After I wrote the exam you came in there என்று சொல்லலாம் அதாவது நான் தேர்வு எழுதிய பிறகு தான் நீங்கள் அங்கு வந்தீர்கள் என்று அர்த்தம்.

மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் Preposition      
"AFTER " ஐ பற்றி தெளிவாக கற்றோம்.

கற்ற விஷயங்களை நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது பயன்படுத்துங்கள்.

தொடர்ந்து ஒவ்வொரு     
 Preposition பற்றியும் பார்ப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...