Know the words & phrase BESIDE, BESIDES & BESIDE THE POINT...

BESIDE, BESIDES & BESIDE THE POINT...
நண்பர்களே! இந்த பதிவிலே Prepositions "BESIDE" மற்றும் "BESIDES"  மேலும் அதனுடன் சேர்த்து "BESIDE THE POINT" என்ற ஒரு IDIOM பற்றியும் தெளிவாக கற்றுக் கொள்வோம்.


முதலாவதாக BESIDE பற்றி பார்ப்போம்.

Prepostion BESIDE ஆனது "அடுத்ததாக" அல்லது "அருகில்" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

BESIDE என்ற இந்த preposition ற்கு NEXT TO என்ற phrase ஐ  நிகராக சொல்லலாம்.
   
இதற்கு சில எடுத்துக்காட்டுகள் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு : 1

Raja always likes to sit beside me அல்லது Raja always likes to sit next to me என்று சொல்லலாம் அதாவது ராஜா எப்பொழுதும் எனக்கு அடுத்ததாக அமர விரும்புவான் என்று அர்த்தம்.

மேற்கண்ட எடுத்துக்காட்டில் Preposition   "beside"  என்றும் பயன்படுத்தலாம் அதற்கு நிகராக PHRASE  : "Next to" என்றும் பயன்படுத்தலாம் இரண்டிற்குமே ஒரே அர்த்தம் தான்.

எடுத்துக்காட்டு : 2

I usually keep my books beside my bed என்று சொல்லலாம் அதாவது நான் வழக்கமாக எனது புத்தகங்களை எனது படுக்கைக்கு அருகில் வைப்பேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

I saw your bag beside mine என்று சொல்லலாம் அதாவது உனது பையை எனது பைக்கு அருகில் பார்த்தேன் என்று அர்த்தம்.


இரண்டாவதாக BESIDES பற்றி பார்ப்போம்.

Prepostion BESIDES ஆனது "கூடவே" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

Besides eating an apple, I ate  an orange என்று சொல்லலாம் அதாவது நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன், கூடவே ஒரு ஆரஞ்சும் சாப்பிட்டேன் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

I don't like watching TV besides I don't have a TV என்று சொல்லலாம் அதாவது எனக்கு டிவி பார்க்க பிடிக்காது, கூடவே என்னிடத்தில் டிவியும் கிடையாது என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

She has a mobile besides a tablet என்று சொல்லலாம் அதாவது அவளிடத்தில் ஒரு மொபைல் உள்ளது, கூடவே ஒரு டேப்லெட்டும் உள்ளது என்று அர்த்தம்.


மூன்றாவதாக BESIDE THE POINT பற்றி பார்ப்போம். 
 
இந்த BESIDE THE POINT என்ற IDIOM ஆனது ஒன்றை முக்கியமற்றதாக கருதும் பொழுது அந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு : 1

He always talks beside the point என்று சொல்லலாம் அதாவது அவன் எப்பொழுதுமே கூட்டத்தில் முக்கியமற்றதையே பேசுவான் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 2

He is a thief but that is beside the point. I like him என்று சொல்லலாம் அதாவது அவன் ஒரு திருடன் ஆனால் அது எனக்கு முக்கியமில்லை. எனக்கு அவனை பிடிக்கும் என்று அர்த்தம்.

எடுத்துக்காட்டு : 3

There is a snake but that is beside the point. I must save my child என்று சொல்லலாம் அதாவது அங்கே ஒரு பாம்பு உள்ளது ஆனால் அது எனக்கு முக்கியமில்லை. என்னுடைய குழந்தையை நான் காப்பாற்ற வேண்டும் என்று அர்த்தம்.


மேற்கண்ட விளக்கம் மற்றும் எடுத்துக்காட்டுளின் மூலம் Preposition "BESIDE" மற்றும்  "BESIDES"  அதனுடன் சேர்த்து idiom - "BESIDE THE POINT" பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும்  கற்றோம்.

இதனை தொடர்ந்து ஒவ்வொரு Preposition பற்றியும் படிப்போம்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...