Know the word VIE...
Word of the day is VIE.
/vaɪ/
Function
The word VIE is a verb.
Meaning
It means to compete with other people to achieve or get something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை சாதிக்க அல்லது பெற மற்றவர்களுடன் போட்டியிடுதல் என்று அர்த்தம்.
நண்பர்களே! VIE என்ற இந்த வார்த்தையானது பிரெஞ்சு மொழியில் உள்ள ENVIER என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்த ஒரு வார்த்தையாகும். ENVIER என்ற பிரெஞ்சு வார்த்தைக்கு ஆங்கிலத்தில் TO DESIRE or TO COVERT என்று சொல்லலாம் அதாவது தமிழில் ஆசை கொள்ளுதல் அல்லது பேராசை கொள்ளுதல் என்று அர்த்தம் ஆனால் ஆங்கிலத்தில் இந்த வார்த்தையானது ஒரு விஷயத்திற்காக ஆசைப்படுதல் என்ற நிலையிலிருந்து ஒரு விஷயத்திற்காக போட்டியிடுதல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒரு வேலைக்காக போட்டியிடும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம் அதைப்போலவே ஒரு விளையாட்டு போட்டியில் பல பேர் ஒரு வெற்றிக்காக போட்டியிடும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம் அதைப்போலவே அரசியலில் பல பேர் ஒரு வெற்றிக்காக போட்டியிடும் பொழுது அந்த இடத்திலேயும் பயன்படுத்தலாம்.
மொத்தத்தில் தமிழில் போட்டியிடுதல் என்ற அர்த்தத்தில் VIE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
He vies for the top position in the company.
அவர் நிறுவனத்தின் உயர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
The two companies are vying for the same contract.
இரண்டு நிறுவனங்களுமே ஒரே ஒப்பந்தத்திற்காக போட்டியிடுகின்றன.
They vied for the attention of the handsome young man.
அழகான இளைஞனின் கவனத்திற்காக அவர்கள் போட்டியிட்டார்கள்.
VIE என்ற இந்த வார்த்தையை NOUN ஆக பயன்படுத்தும் பொழுது VIER என்று பயன்படுத்த வேண்டும்.
எனது தமிழில் போட்டியிடுபவர் அல்லது வீரர் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம்
He is a determined vier, always striving to be the best.
அவர் ஒரு உறுதியான வீரராக இருக்கிறார், எப்போதும் சிறந்தவராக இருக்க முயற்சிக்கிறார்.
More sentences
The two teams will vie for the championship title next week.
Many candidates are expected to vie for the open position at the company.
The siblings constantly vie for their parents' attention.
The company's different products often vie against each other in the market.
The two chefs will vie to win the cooking competition.The politicians will vie for the support of the undecided voters.
The two countries have long vied for control of the disputed territory.
The children will vie for the last slice of cake.
The rivals will vie in the final round of the tournament.
The artists will vie for the opportunity to showcase their work in the upcoming exhibition.
Practice it
எனவே நண்பர்களே! VIE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக