Know the word CHORE...

Word of the day is CHORE...
Pronunciation
/tʃɔːr/

Function
The word CHORE is a noun.

Meaning 
It refers to a routine task or job that is often unpleasant but needs to be done regularly என்று சொல்லலாம் அதாவது தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வழக்கமாக செய்யப்பட வேண்டிய விரும்பத்தகாத பணி அல்லது வேலை என்று அர்த்தம்.

நண்பர்களே! CHORE என்ற இந்த வார்த்தையானது வேலை செய்யும் இடத்திலேயோ அல்லது வீட்டிலேயோ பராமரிப்பு பணியாக அல்லது கடமையாக, வேண்டா விருப்போடு, சந்தோஷமே இல்லாம ஒவ்வொரு நாளும் ஒருவர் செய்யக்கூடிய ஒரு வேலையை குறிக்கிறது.

எடுத்துக்காட்டாக துணி துவைத்தல், தண்ணீர் எடுத்தல், வீட்டை சுத்தம் செய்தல், சமையல் செய்தல், சமையல் செய்த பாத்தரங்களை கழுவுதல் போன்ற வேலைகளை சொல்லலாம். இந்த வேலைகள் ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி செய்யக்கூடியதாக மேலும் நேரத்தையெல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடியதாக இருக்கிறதால் இந்த வேலைகள் சலிப்பு தட்ட கூடியதாக இருக்கிறது.

இவ்வாறாக ஒரு வேலை ஒரே மாதிரியே ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப செய்யக் கூடியதாக, வேலை செய்பவருக்கு சந்தோஷம் தராததாக அனால் அது நேரத்தில் எரிச்சல் தரக்கூடியதாக இருக்கும் பொழுது அதனை CHORE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம்.

எனவே தமிழில் வேலை என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம் ஆனால் அதே நேரத்தில் அந்த வேலையானது எரிச்சல் தரக்கூடியதாக, சந்தோஷம் இல்லாததாக ஒவ்வொரு நாளும் திரும்பத் திரும்ப செய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

In a sentence
Doing the laundry is one of my least favorite chores because it takes so much time.
சலவை செய்வது என்பது எனக்கு மிகவும் பிடிக்காத வேலைகளில் ஒன்றாகும் ஏனென்றால் அது அதிக நேரம் எடுக்கிறது.

My mom always makes me do the dishes as my assigned chore in the house.
என் அம்மா எப்போதும் என்னை வீட்டில் எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையாக  சமையல் செய்ய வைப்பார்.

More sentences

I will not do this chore any more.

My roommate and I take turns doing the grocery shopping chore every week.

Cleaning the bathroom is a necessary chore that I try to do once a week.

Even though mowing the lawn is hard work, it can be a satisfying chore when the yard looks nice afterward.

The dance company hired a renowned choreographer to create a new piece for their upcoming performance.

The ballet students spent weeks practicing the choreography for their final recital.

The choreographic elements of the Broadway show were impressive, with intricate dance routines and colorful costumes.

The children were excited to learn a new dance choreography at their after-school program

Practice it
எனவே நண்பர்களே! CHORE என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...