Know the word PRECISELY...
Word of the day is PRECISELY...
Pronunciation
Function
The word PRECISELY is an adverb.
Note
PRECISELY என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம்.
Meaning
முதலாவதாக It means exactly என்று சொல்லலாம் அதாவது மிகச்சரியாக அல்லது துல்லியமாக என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! இடம், காலம், தூரம், அளவு போன்றவற்றை நாம் துல்லியமாக அல்லது மிகச்சரியாக சொல்லும் பொழுது அங்கு EXACTLY என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். அந்த இடத்திலே PRECISELY என்ற இந்த வார்த்தையையும் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒருவர் மணி கேட்கும் பொழுது அதற்கு பதிலாக மணி correcta 3 ஆகுது என்று சொல்லுவோம் அதனை ஆங்கிலத்தில் It is precisely 3 O'clock என்று சொல்லலாம் அதாவது சரியாக மணி 3 என்று அர்த்தம்.
More sentences
The length of the board is precisely 6 feet.
She gave precisely 10 dollars to the charity.
The restaurant is located precisely at the corner of Main Street and Maple Avenue.
His description of the suspect was precisely accurate.
Meaning
இரண்டாவதாக It is used to express complete agreement with someone என்று சொல்லலாம் அதாவது ஒருவருடன் முழுமையான உடன்பாட்டை வெளிப்படுத்த பயன்படுகிறது என்று அர்த்தம்.
அதாவது யாராவது ஒருவர் ஏதாவது ஒன்றை சொல்லும் பொழுது அவர் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு முழுமையாக ஆமோதித்து பதில் சொல்லும் பொழுது அந்த இடத்திலேயும் PRECISELY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக It is not a good time to go out என்று சொல்லும் பொழுது அதாவது வெளியே செல்வதற்கு இது உகந்த நேரம் இல்லை என்று சொல்லும் பொழுது அந்த கருத்தை ஆமோதித்து அதற்கு பதிலாக "மிகச் சரியாக சொன்னீர்கள்" என்று சொல்லும் பொழுது அதனை ஆங்கிலத்தில் "PRECISELY" என்று சொல்லலாம் அதாவது "கரெக்டா சொன்னீங்க" என்று அர்த்தம்.
More Sentences
The defendant's alibi is precisely what the witness reported.
The data shows precisely what we expected it to show.
Your analysis of the situation is precisely on point.
The map precisely depicts the topography of the region.
The answer to the math problem is precisely 42.
Meaning
மூன்றாவதாக It means carefully and accurately என்று சொல்லலாம் அதாவது கவனமாகவும் துல்லியமாகவும் என்று அர்த்தம்.
அதாவது ஒருவர் அவர் செய்யும் வேலையை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் செய்யும் பொழுது அந்த இடத்திலே PRECISELY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக
He takes time and works precisely என்று சொல்லலாம் அதாவது அவர் நேரமெடுத்து மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் வேலை செய்கிறார் என்று அர்த்தம்.
More sentences
He precisely arranged the flowers in the vase, paying close attention to their colors and heights.
The surgeon precisely cut around the tumor to avoid damaging any surrounding tissue.
She precisely measured out the ingredients for the cake, making sure to follow the recipe exactly.
The carpenter precisely crafted each joint of the chair, ensuring that they fit together perfectly.
He precisely outlined the steps of the experiment, carefully noting each detail in his notebook.
Practice it
எனவே நண்பர்களே! PRECISELY என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக