Know the word ABOUT...
Know the preposition ABOUT in detail... நண்பர்களே! இந்த பதிவிலே PREPOSITION "ABOUT" பற்றி தெளிவாக கற்றுக் கொள்வோம். முதலாவதாக "பற்றி" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக "சுமார், ஏறத்தாழ, கிட்டத்தட்ட" போன்ற தமிழ் அர்த்தத்தங்களில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக "அருகில்" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. நான்காவதாக "சிதறி போகுதல் அல்லது சிதறி கிடத்தல்" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஐந்தாவதாக ஒருவரின் கருத்தைக் (opinion) கேட்கும் பொழுது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேற்கூறிய ஒவ்வொன்றையும் நாம் எடுத்துக்காட்டுகளுடன் பார்க்கும் பொழுது அவற்றை தெளிவாகவும் எளிதாகவும் புரிந்து கொள்ளலாம். முதலாவதாக "பற்றி" என்ற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: 01 I know everything about him அதாவது எனக்கு அவனைப் பற்றி எல்லாம் தெரியும் என்று அர்த்தம். He told me about his ideas அதாவது அவர் தனது யோ...