Know the idiom TURN A DEAF EAR...
Word of the day is TURN A DEAF EAR... Function The idiom TURN A DEAF EAR is used in a sentence keeping TURN as a verb. Meaning It means to ignore someone when they complain or ask for something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவர் ஏதாவதொன்றை கேட்கும்போதோ அல்லது ஏதாவதொன்றை குறித்து புகார் செய்யும்போதோ அதனை புறக்கணிப்பது என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவருக்கு மற்றொருவரை பிடிக்காத காரணத்தினாலோ அல்லது ஒருவர் சொல்ல வருகின்ற கருத்து பிடிக்காத காரணத்தினாலோ அல்லது ஒருவருக்கு உதவி செய்ய மனமில்லாத காரணத்தினாலோ அல்லது ஏதாவதொரு காரணத்தினாலோ வேண்டுமென்றே ஒருவர் சொல்வதற்கோ அல்லது கேட்பதற்கோ மற்றொருவர் செவி கொடுக்காமல் இருக்கும் பொழுது அந்த இடத்திலே TURN A DEAF EAR என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். நாம கூட தமிழிலும் இந்த IDIOM ஐ பயன்படுதுவோம் அதாவது ஒருவரிடம் நாம் சொல்வதை அவர் பொருட்படுத்தாமல் இருக்கும் பொழுது "அவன் காது கேளாதது போல் இருக்கிறான்" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் தான் TURN A DEAF EAR என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் காது கேளாதது போல் இரு...