Know the preposition WITHIN in detail...
Know the word WITHIN... நண்பர்களே! இந்த பதிவிலே preposition WITHIN பற்றி தெளிவாகவும் விரிவாகவும் படிப்போம். நண்பர்களே! preposition WITHIN ஆனது ஆங்கிலத்தில் "உள், உள்ளே அல்லது உள்ளாக" என்கிற தமிழ் அர்த்தத்தில் ஆங்கிலத்தில் ஐந்து இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக நேரத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு : 1 Please complete the report within the next hour என்று சொல்லலாம் அதாவது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் ரிப்போர்ட்டை முடிக்கவும் என்று அர்த்தம். எடுத்துக்காட்டு : 2 Within five minutes, we'll be at the airport என்று சொல்லலாம் அதாவது ஐந்து நிமிடத்திற்குள், நாம் விமான நிலையத்தில் இருப்போம் என்று அர்த்தம். இரண்டாவதாக இடத்தை குறிக்கும் பொழுது WITHIN பயன்படுத்தப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உள்ளாக என்று பேசப்படும் பொழுது அந்த இடத்தில் WITHIN என்ற இந்த preposition பயன்படுத்தப்படுகிறது. எட...