இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Know the idiom AN ARM AND A LEG...

படம்
AN ARM AND A LEG Meaning It means be extremely expensive என்று சொல்லலாம் அதாவது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் காசு கொடுத்து வாங்குகின்ற ஒரு பொருள் நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப விலை உயர்ந்ததாக தெரியும் பொழுது அந்த இடத்திலே AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். நாம் தமிழில் கூட சில இடங்களில் ஒரு பொருள் நமக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப விலை உயர்ந்ததாக தெரியும் பொழுது சொல்லுவோம் அதாவது "என் தலையை அடகு வைத்து தான் வாங்க வேண்டும் அல்லது என் கால் கையை விற்றுதான் வாங்க வேண்டும்" என்று அந்த இடத்திலே AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். AN ARM AND A LEG என்ற இந்த IDIOM ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் போது அந்த வாக்கியத்தில் VERB ஆக COST அல்லது CHARGE போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி ஒரு வாக்கியத்தை அமைக்க வேண்டும் தமிழில் எக்கச்சக்கமான விலை அல்லது கொள்ளை விலை அல்லது கையை காலை விற்றுதான் வாங்க வேண்டும் போன்ற அர்த்தங்களில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். In a sentence This bridal gown cost her an arm and a leg. இந்த மணமகள...

Know the word DERACINATE...

படம்
Word of the day is DERACINATE... Pronunciation /dɪˈɹæsəneɪt/ Function The word DERACINATE is a verb. Meaning It means to pull up by the roots என்று சொல்லலாம் அதாவது வேரோடு பிடுங்கி விடுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த DERACINATE என்ற இந்த வார்த்தையை வேரோடு பிடுங்கி விடுதல் என்கிற அர்த்தத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தலாம். முதலாவதாக ஒரு மரத்தை அல்லது ஒரு செடியை அது இருக்கிற இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு வேரோடு பிடுங்கி நடுகிற இடத்தில் பயன்படுத்தலாம். இரண்டாவதாக உருவகமாக பயன்படுத்தலாம் அதாவது எவ்வாறு ஒரு செடியோ அல்லது மரமோ ஒரு இடத்திலிருந்து வேரோடு பிடுங்கி மற்றொரு இடத்தில் நடப்படுகிறதோ அதைப்போலவே ஒரு இடத்தில் வாழும் மக்களை ஏதாவதொரு காரணத்திற்காக அதாவது ஒரு போர் காரணமாகவோ அல்லது இயற்கை பேரிடர் காரணமாகவோ அல்லது அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்காகவோ பலவந்தமாக அவர்கள் வாழுமிடத்திலிருந்து வேறொரு இடத்தில் கட்டாயப்படுத்தி வாழ வைக்கிற இடத்தில் பயன்படுத்தலாம். எனவே தமிழில் வேரோடு பிடுங்கி விடுதல் அல்லது வலுக்கட்டாயமாக இடம் மாற்றுதல் போன்ற அர்த்தங்களில் DERACINA...

Know the word EPICURE...

படம்
Word of the day is EPICURE... Pronunciation /ˈep.ə.kjʊr/ Function The word is a noun. Meaning It refers to a person who enjoys high quality food and drink என்று சொல்லலாம் அதாவது உயர்தர உணவு மற்றும் பானங்களை உண்ணும் ஒரு நபர் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! உண்பதிலும் குடிப்பதிலும் கை தேர்ந்த ஒருவரை இந்த EPICURE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். அதாவது ஒருவர் தான் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் ஏனோதானோ என்று தேர்வு செய்யாமல், மனதுக்குப் பிடித்ததாக, சுவை மிகுந்ததாக உயர்ந்த தரம் கொண்டதாக மிகவும் கவனத்துடனும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும் தேர்வு செய்து உண்பவராகவும் குடிப்பவராகவும் இருக்கும் பொழுது அவரை இந்த EPICURE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். மேலும் நண்பர்களே! ஒருவரை EPICURE என்று சொல்லும் பொழுது அவரை POSITIVE ஆன அர்த்தத்திலேயே சொல்கிறோம் என்றே பொருளாகும். எனவே தமிழில் உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் கவனத்துடன் தேர்வு செய்பவர் அல்லது உண்ணும் உணவையும் குடிக்கும் பானத்தையும் உயர்ந்த தரம் கொண்டதாக தேர்வு செய்பவர் அல்லது உண்ணும் உணவையும் குடிக்க...

Know the word SQUANDER...

படம்
Word of the day is SQUANDER... Pronunciation /ˈskwɒn.dər/ Function The word SQUANDER is a verb. Meaning It means to waste something in a careless and foolish manner என்று சொல்லலாம் அதாவது பொறுப்பற்ற மற்றும் முட்டாள்தனமான முறையில் ஏதாவதொன்றை வீணாக்குதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! SQUANDER என்ற இந்த வார்த்தையானது பெருமளவு ஒருவர் தனது நேரத்தை அல்லது பணத்தை பொறுப்பற்ற முறையில் அல்லது முட்டாள்தனமான முறையில் வீணாக செலவு செய்யும் பொழுது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு மாணவன் தேர்வுக்கு தயார் செய்வதற்கு மிக குறைந்த காலமே இருக்கும் பொழுது அவனுக்கு கிடைத்த கொஞ்ச காலத்தையும் அவன் டிவி பார்த்து அல்லது மொபைல் பார்த்து அல்லது விளையாடிய அந்த கொஞ்ச நேரத்தையும் விரயம் செய்யமிடத்தில் பயன்படுத்தலாம். அதைப் போலவே ஒருவர் தன்னிடம் இருக்கும் பணத்தை சரியான முறையில் செலவு செய்யாமல் வீணாக செலவு செய்து தேவையில்லாத காரியங்களுக்கு செலவு செய்து அந்த பணத்தை விரயம் செய்யும் இடத்தில் பயன்படுத்தலாம். மேலும் நண்பர்களே! இந்த SQUANDER என்ற வார்த்தையை ஒருவர் தனக்கு கிடைத்த நல்லதொரு வாய்ப்பை பய...

Know the idiom ON ALL FOURS...

படம்
ON ALL FOURS Function The idiom ON ALL FOURS is used as an adverb in a sentence. Meaning It means on hands and knees on the ground என்று சொல்லலாம் அதாவது கைகள் மற்றும் முழங்கால்களால் தரையில் இருத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! பொதுவாக குழந்தைகள் நடைபழகுவதற்கு முந்திய நிலையில் கைகள் மற்றும் கால்களால் தவழ்ந்து பழகுவார்கள். அப்படித்தானே? அவ்வாறாக குழந்தைகள், கைகள் மற்றும் கால்களால் தவழ்ந்து செல்வதற்கு ஆங்கிலத்தில் CRAWL என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. இந்த CRAWL என்ற வார்த்தையினுடைய அர்த்தமான தவழ்ந்து செல்லுதல் என்கிற அதே அர்த்தத்தில் இந்த ON ALL FOURS என்ற IDIOM ஆனது ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த ON ALL FOURS என்ற இந்த IDIOM ஆனது பெரும்பாலும் குழந்தைகள் தவழ்ந்து செல்கிற இடத்தில் பயன்படுத்தப்படுவதில்லை மாறாக பெரியவர்கள் கீழே குனிந்து கைகள் மட்டும் கால்களால் தரையில் தவழ்ந்து வேலை செய்கிற இடத்தில் அல்லது கைகள் மற்றும் கால்களால் நின்று குழந்தைகளுடன் விளையாடுகிற இடத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த IDIOM ஆனது ஒரு வாக்கியத்தில் பயன்படு...

Know the word COMMEMORATE...

படம்
Word of the day is COMMEMORATE... Pronunciation /kəˈmem·əˌreɪt/ Function The word COMMEMORATE is a verb. Meaning It means to show honor to the memory of an important person or event in a special way என்று சொல்லலாம் அதாவது ஒரு முக்கியமான நபர் அல்லது ஒரு முக்கியமான நிகழ்விற்கு மரியாதை செலுத்தும் விதமாக சிறப்பாக நினைவு கூறுதல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! எல்லோரும் போற்றும் படி ஒரு சிறப்பான செயல் செய்த ஒரு மனிதரை நினைவு கூறுகிற  இடத்தில் இந்த COMMEMORATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அந்த மனிதர் தான் வாழ்ந்த ஒரு சமூகத்திற்காக அல்லது தனது நாட்டிற்காக அல்லது இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்காக ஏதாவது ஒரு சிறப்பான செயல் செய்திருக்க வேண்டும். அதைப்போலவே ஒரு நாட்டின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு இடத்தின் ஒரு முக்கியமான நிகழ்வை நினைவு கூறுகிற இடத்திலும் இந்த COMMEMORATE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அவ்வகையில் ஒன்றுதான் இன்றைய தினம் நாம் நினைவு கூறி கொண்டாடும் குடியரசு தினமாகும். *So Friends, I wish You all A Happy Republic Day* அதாவது 1950 ஜனவரி 26 ஆம...

Know the word GARRULOUS...

படம்
Word of the day is GARRULOUS... Pronunciation /ˈɡær.əl.əs/ Function The word GARRULOUS is an adjective. Meaning It means annoyingly talkative என்று சொல்லலாம் அதாவது எரிச்சலூட்டும் வகையில் பேசுகின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு நபர் சிறிது நேரம் கூட இடைவெளி விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த நபரை TALKATIVE என்று சொல்லலாம். இந்த TALKATIVE என்ற இந்த வார்த்தையை ஒரு POSITIVE ஆன வார்த்தை என்றும் சொல்ல முடியாது அல்லது ஒரு NEGATIVE ஆன வார்த்தை என்றும் சொல்ல முடியாது ஆனால் ஒரு NEUTRAL ஆன வார்த்தை என்று சொல்லலாம். அதே நேரத்தில் ஒருவர் எந்தவித பயனோ அல்லது முக்கியமோ இல்லாத, யாருக்கும் விருப்பம் இல்லாத மேலும் எரிச்சலை தரக்கூடிய காரியங்களை குறித்து தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அந்த இடத்தில் தான் இந்த GARRULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் எரிச்சலூட்டும் வகையில் பேசுகின்ற அல்லது சளசள வென்று பேசுகின்ற அல்லது சளசள வென்று பேசி எரிச்சலூட்டுகின்ற போன்ற அர்த்தங்களில் இந்த GARRULOUS என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். In a sentence...

Know the word MISANTHROPE...

படம்
Word of the day is MISANTHROPE... Pronunciation /ˈmɪs.ən.θroʊp/ Function The word MISANTHROPE is a noun. Meaning It refers to someone who dislikes and avoids other people என்று சொல்லலாம் அதாவது மற்றவர்களை விரும்பாத மற்றும் தவிர்க்கும் ஒருவர் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவனாக இருக்கும்பொழுது, சக மனிதர்களை வெறுக்க கூடியவனாக இருக்கும் பொழுது அந்த மனிதனை இந்த MISANTHROPE என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். இப்படிப்பட்ட மனிதர்கள் சக மனிதர்களை வெறுக்க கூடியவர்களாக இருக்கிற காரணத்தினால் பொது இடங்களுக்கு செல்வதை விரும்ப மாட்டார்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் மக்கள் கூட்டமாக கூடிவரும்  இடங்களுக்கு செல்லவதை தவிர்ப்பார்கள். இவர்கள் சக மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்களாக இருப்பதனால் இவர்கள் யாருடனும் முகம் கொடுத்து பேசக்கூட மாட்டார்கள். இவர்கள் தனிமையில் இருப்பதையே விரும்புவார்கள். இப்படியெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும் ஆனால் உண்மை என்னவென்றால் இப்படியும் குணம் படைத்த மனிதர்கள் இருக்கிறார்கள் என...

Know the word SLUGGISH...

படம்
Word of the day is SLUGGISH... Pronunciation /ˈslʌɡɪʃ/ Function The word SLUGGISH is an adjective. Meaning It means moving or operating more slowly than usual என்று சொல்லலாம் அதாவது வழக்கத்தை விட மெதுவாக நகருகின்ற அல்லது செயல்படுகின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! SLUGGISH என்ற இந்த வார்த்தையை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் உடல் சோர்வினாலோ அல்லது தூக்கமின்மையினாலோ அல்லது பசி மயக்கத்திலோ அல்லது உண்ட மயக்கத்திலோ வழக்கத்தை விட மெதுவாக இயங்கும்பொழுது அந்த இடத்திலே இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப் போலவே ஒரு வாகனமானது இயந்திர கோளாறு காரணமாக மெதுவாக இயங்கும் பொழுது அந்த இடத்திலே இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே விறுவிறுப்பாக நல்ல லாபத்துடன் வேகமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வணிகம் மந்த நிலையை அடையும் பொழுது அந்த இடத்திலும் இந்த SLUGGISH என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு மனிதனோ அல்லது ஒரு வாகனமோ அல்லது ஒரு இயந்திரமோ அல்லது ஒரு வணிகமோ வழக்கமாக இயங்குகின்ற வேகத்தில் இயங்காமல் வழக்கத...

Know the phrasal verb LAY OFF...

படம்
Word of the day is LAY OFF... Pronunciation /leɪ ɑːf/ Function The word LAY OFF is a phrasal verb and it is used as verb. Note LAY OFF என்ற இந்த phrase ஐ இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It means to stop employing someone என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு நிறுவனமானது பணியில் இருக்கும் பணியாட்களுக்கு போதுமான வேலை இல்லை என்ற காரணத்தினால் பணியில் இருக்கும் பணியாட்களின் எண்ணிக்கையை குறைப்பது வழக்கம் இவ்வாறாக பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்கின்ற இடத்தில் இந்த LAY OFF என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் பணி நீக்கம் செய்தல் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாம். In a sentence The company has a plan to lay off at least forty workers. குறைந்தபட்சம் நாற்பது தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை நிறுவனம் கொண்டுள்ளது. இரண்டாவதாக It means to stop doing something என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை செய்வதை நிறுத்துதல் என்று அர்த்தம். அதாவது நண...

Know the idiom LEAVE NO STONE UNTURNED...

படம்
Know the idiom LEAVE NO STONE UNTURNED... Function The idiom, LEAVE NO STONE UNTURNED is used in a sentence using LEAVE as a verb. Meaning It means to do everything in order to achieve a good result என்று சொல்லலாம் அதாவது ஒரு நல்ல முடிவை அடைய எல்லாவற்றையும் செய்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த LEAVE NO STONE UNTURNED என்ற இந்த IDIOM ஆனது ஒரு நபர் ஒரு இலக்கை அடைவதற்காக சாத்தியமான எல்லா முயற்சியையும் மிகவும் கவனமாக மேற்கொள்ளும் பொழுது பயன்படுத்த வேண்டிய ஒரு IDIOM ஆகும். மேலும் இந்த IDIOM ஆனது எல்லா முயற்சியையும் மேற்கொண்டு ஒரு இலக்கை அடைய முயற்சி செய்கின்ற ஒரு நபரை புகழ்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒரு நிறுவனத்தின் மேலாளர் அந்த நிறுவனத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதற்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு புத்தகத்தை எழுதுபவர் அந்த புத்தகத்தை எழுதுவதற்காக பல தரவுகளை தேடி; பல இடங்களுக்கு அலைந்து, பல புத்தகங்களை ஆராய்ந்து எழுதும் பொழுது அந்த இடத்திலே பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு இடத்தில் வசிக...

know the idiom LAY A FINGER ON SOMEONE...

படம்
LAY A FINGER ON SOMEONE meaning... Function The idiom, LAY A FINGER ON SOMEONE is used in a sentence using LAY as a verb. Meaning It means to harm someone even slightly என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவருக்கு மிகவும் கொஞ்சமாக தீங்கு செய்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! நாம் தமிழில் பிறரோடு சண்டையிடும் பொழுது அல்லது சவால்கள் செய்யும் பொழுது சொல்லுவோம், "அவன் மேல் உன்னுடைய நுனிவிரல் பட்டால் கூட நான் உன்னை சும்மா விட மாட்டேன்" என்று, அந்த இடத்தில் பயன்படுத்த வேண்டிய IDIOM தான் இந்த LAY A FINGER ON SOMEONE. மேலும் இந்த IDIOM ஐ ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த IDIOM இல் உள்ள SOMEONE என்ற வார்த்தைக்கு பதிலாக OBJECT PRONOUN ( ME, US, YOU, HIM, HER, IT and THEM ) ஐ பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் நுனி விரலால் தீங்கு செய்தல் அல்லது நுனிவிரல் பட்டால் கூட போன்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். In a sentence Do not try to lay a finger on her. You will feel sorry for it later. அவள் மீது நுனி விரலைக்கூட வைக்க முயற்சிக்காதே.  நீ அதற்காக பின்னர் வருத்தப...

Know the word EXCRUCIATING...

படம்
Word of the day is EXCRUCIATING... Pronunciation /ɪkˈskruː.ʃi.eɪ.t̬ɪŋ/ Function The word EXCRUCIATING is an adjective. Meaning It means extremely painful என்று சொல்லலாம் அதாவது அதிகப்படியான வேதனையான என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு மனிதன் உடல் அளவிலோ அல்லது மனதளவிலோ அதிகப்படியான வேதனையை அல்லது வலியை அனுபவிக்கும் பொழுது அந்த இடத்திலே EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மனிதனுக்கு உடலில் ஏற்பட்ட காயத்தினாலோ அல்லது எலும்பில் ஏற்பட்ட முறிவினாலோ அல்லது விபத்தில் ஏற்பட்ட அடியினாலோ அல்லது பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்கள் கடித்ததாலோ உடலில் அதிகப்படியான வேதனையை அல்லது வலியை அனுபவிக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த EXCRUCIATING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே எதிர்பாராத ஒரு முடிவு அல்லது மிகவும் நெருங்கியவரின் பிரிவு அல்லது மிகவும் நெருங்கிய ஒருவரின் இழப்பு அல்லது நீண்ட நேரமாக காத்திருத்தல் அல்லது சலிப்பான நேரம் அல்லது சலிப்பான வாழ்க்கை போன்றவை ஒரு மனிதனுக்கு மனதளவில் அதிகப்படியான வேதனையை அல்லது வலியை தரும் எனவே அந்த இடத்திலும் ...

Know the word ASCERTAIN...

படம்
Word of the day is ASCERTAIN... Pronunciation /ˌæs.ɚˈteɪn/ Function The word ASCERTAIN is a verb. Meaning It means to find out something with certainty என்று சொல்லலாம் அதாவது எதையாவதொன்றை உறுதியாகக் கண்டுபிடித்தல் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ASCERTAIN என்ற இந்த வார்த்தையானது ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா, சரியா அல்லது தவறா என்று அதனுடைய உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதிபடுத்துகிற இடத்தில் பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை ஆகும். எடுத்துக்காட்டாக ஒரு தகவல் சொல்லப்படும் பொழுது அந்த தகவலின் உண்மை தன்மையை ஆராய்ந்து உறுதிப்படுத்துகிற இடத்தில் பயன்படுத்தலாம். அதைப்போலவே காவல்துறையானது ஒரு கொலை அல்லது கொள்ளையில் ஈடுபட்டவர்களாக பலபேர் மீது சந்தேகம் இருக்கும் பொழுது அவர்களில் உண்மையான குற்றவாளியை ஆராய்ந்து உறுதிப்படுத்துகிற இடத்தில் பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு விஷயத்தை குறித்து எந்தவித சந்தேகத்திற்கும் இடம் இல்லாதவாறு அதனுடைய உண்மை நிலையை உறுதிப்படுத்துகிற இடத்தில் ASCERTAIN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் உறுதிப்படுத்துதல் அல்லது ஆராய்ந்தறிந்து கொள்ளுதல் அல்ல...

Know the word ABUNDANT...

படம்
Word of the day is ABUNDANT... Pronunciation /əˈbʌn.dənt/ Function The word ABUNDANT is an adjective. Meaning It means more than enough என்று சொல்லலாம் அதாவது அளவுக்கு மேலான என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயமானது ஏராளமாக இருக்கும் பொழுது அல்லது தேவையை விட அதிகமாக இருக்கும் பொழுது அல்லது அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.   எடுத்துக்காட்டாக ஒரு இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்பட தேவையான அரிசியின் அளவு ஒரு டன் என இருக்கும் பொழுது அந்த இடத்திலே இரண்டு டன் அரிசி இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். அதைப்போலவே ஒரு நாடானது எக்கச்சக்கமான இயற்கை வளங்களால் நிரம்பி இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இவ்வாறாக ஒரு விஷயமானது ஏராளமாக இருக்கும் பொழுது அல்லது தேவையை விட அதிகமாக இருக்கும் பொழுது அல்லது அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த ABUNDANT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எனவே தமிழில் ஏராளமான...

Know the word INDISPENSABLE...

படம்
Word of the day is INDISPENSABLE... Pronunciation /ˌɪn.dɪˈspen.sə.bəl/ Function The word INDISPENSABLE is an adjective. Meaning It means absolutely necessary என்று சொல்லலாம் அதாவது முற்றிலும் தேவையான என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு விஷயம் ரொம்ப ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று, தவிர்க்கவே முடியாது என்று வரும் பொழுது அந்த இடத்தில்தான் INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக நாம் தமிழில் ஒரு பழமொழி சொல்லுவோம் அதாவது "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்று, இதனுடைய அர்த்தம் என்னவென்றால் உணவு சுவையாக இருக்க உப்பு தவிர்க்க முடியாத ஒன்று அல்லது முற்றிலும் தேவையான ஒன்று என்பதுதான். அதைப்போலவே சில வேலைகளில் சில மனிதர்கள் இருப்பார்கள். அந்த வேலையில் அவர்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாததாக மிகவும் தேவையான ஒன்றாக இருக்கும். இவ்வாறாக ஒரு குறிப்பிட்ட பொருளோ அல்லது ஒரு குறிப்பிட்ட மனிதனோ ஒரு குறிப்பிட்ட செயலை செய்வதற்கு தவிர்க்க முடியாத அளவுக்கு தேவையான ஒன்று என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த INDISPENSABLE என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண...

Know the word RED-HANDED...

படம்
Word of the day is RED-HANDED... Pronunciation /ˌredˈhæn.dɪd/ Function The word RED-HANDED can be used as adjective and adverb. Meaning It means to find someone in the act of doing something illegal என்று சொல்லலாம் அதாவது சட்டத்திற்கு புறம்பான ஏதாவதொரு செயலை செய்கிற நிலையில் உள்ள ஒருவரை கண்டுபிடித்தல் என்று அர்த்தம். நண்பர்களே! இந்த RED-HANDED என்ற இந்த PHRASE ஐ இரண்டு விதமாக பயன்படுத்தலாம். முதலாவதாக ஒரு நபர் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான அல்லது ஏதாவதொரு தவறான செயலை செய்து கொண்டிருக்கின்ற அந்த நிலையிலேயே பிடிபடும் பொழுது பயன்படுத்தலாம். இரண்டாவதாக ஒரு நபர் கொலை, கொள்ளை போன்ற சட்டத்திற்கு புறம்பான அல்லது ஏதாவதொரு தவறான செயலை செய்த பிறகு அதனை நிரூபிக்கிற வகையில் சரியான ஆதாரங்களுடன் அவர் பிடிபடும் பொழுதும் பயன்படுத்தலாம். RED-HANDED என்ற இந்த PHRASE ஐ CATCH SOMEONE RED-HANDED என்று ஒரு IDIOM ஆகவும் பயன்படுத்தலாம். கொலை செய்த ஒருவர் கை முழுவதும் சிவப்பு நிற இரத்த கரையோடு பிடபட்டதிலிருந்து இந்த வார்த்தை தோன்றியதாக வரலாறு கூறுகிறது. தமிழில் கையும் களவுமாக என்று சொல்...

Know the word ASTOUND...

படம்
Word of the day is ASTOUND... Pronunciation /əˈstaʊnd/ Function The word ASTOUND is a verb. Meaning It means affect with wonder என்று சொல்லலாம் அதாவது ஆச்சரியத்தால் பாதிக்கபடுதல் என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தை பார்க்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ அந்த விஷயமானது ஆச்சரியத்துடன் கூடிய திகைப்பை தரும்பொழுது அந்த இடத்திலே ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு மாய வித்தைக்காரர் மாய வித்தை செய்யும் பொழுது நாம் இதற்கு முன் பார்த்திராத மேலும் நமது எதிர்பார்ப்பை மிஞ்சுகிற அளவிற்கு மாய வித்தைகளை செய்யும் பொழுது அந்த இடத்திலே நமக்கு ஆச்சரியமும் இருக்கும் திகைப்பும் இருக்கும். அப்படித்தானே? அந்த இடத்தில் தான் ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். இவ்வாறாக ஒரு விஷயமானது ஆச்சரியத்தையும் திகைப்பையும் சேர்த்து தரும் பொழுது அந்த இடத்திலே இந்த ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் வியப்பூட்டுதல் திகைப்பூட்டுதல் அதிர்ச்சி தருதல் போன்ற அர்த்தங்களில் இந்த ASTOUND என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம் ஆனால் அத...

Know the words SUPRISE, ASTONISH & AMAZE...

படம்
Know the words SURPRISE, ASTONISH & AMAZE Explanation பொதுவாக பிரிண்ட்ஸ்! நம்ம ஒரு விஷயத்தை குறித்து ஆச்சரியப்படும்போது அந்த இடத்தில் SURPRISE ங்கிற வார்த்தையை பயன்படுத்துவோம் அதாவது I AM SURPRISED என்று சொல்வோம். அப்படித்தானே? அதே நேரத்தில் ஒரு விஷயத்தை குறித்து  ரொம்ப ஆச்சரியப்படும்போது I AM VERY MUCH SURPRISED என்று சொல்லுவோம். அப்படித்தானே? SO அந்த இடத்துல ASTONISH என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் அதாவது I AM ASTONISHED என்று சொல்லலாம் அதாவது I AM VERY MUCH SURPRISED என்று அர்த்தம். அதே நேரத்தில் ஒரு விஷயத்தை குறித்து  ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியப்படும்போது அங்கே VERY VERY VERY MUCH SURPRISED என்று சொல்லக்கூடாது மாறாக I AM AMAZED என்று சொல்ல வேண்டும் அதாவது I AM VERY VERY VERY MUCH SURPRISED என்று அர்த்தம். Practice it எனவே நண்பர்களே! SURPRISE, ASTONISH & AMAZE என்கிற வார்த்தைகளை நீங்களும் பயன்படுத்துங்க. இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்....

Know the word TUMBLEDOWN...

படம்
Word of the day is TUMBLEDOWN... Pronunciation /ˈtʊm.bəl.daʊn/ Function The word TUMBLEDOWN is an adjective. Meaning It means in a very bad condition, especially in a state of decay என்று சொல்லலாம் அதாவது மிகவும் மோசமான குறிப்பாக மட்கிப்போன நிலையில் என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! இந்த TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை ஒரு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக பழையதாகி கட்டிடத்தில் உள்ள பொருட்கள் மட்கி பாழடைந்து இடிந்து போகின்ற நிலையில் இருக்கும் ஒரு கட்டிடத்தை குறிக்க பயன்படுத்த வேண்டிய ஒரு வார்த்தை ஆகும். மிகச் சுருங்க சொல்ல வேண்டுமென்றால் ஒரு கட்டிடத்தை பார்க்கும் பொழுது அந்த கட்டிடமானது இடிந்து விழுகின்ற நிலையில் இருப்பது போல் தெரியும் பொழுது அந்த இடத்திலே இந்த TUMBLEDOWN என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இந்த வார்த்தையை ஒரு வாக்கியத்தில் பயன்படுத்தும் பொழுது இந்த வார்த்தையை தனியாக பயன்படுத்தக் கூடாது இதனை தொடர்ந்து ஒரு NOUN வர வேண்டும். எடுத்துக்காட்டாக a tumbledown farmhouse, a tumbledown building, a tumbledown hut, a tumbledown cottage etc மாறாக The ...

Know the word PAINSTAKING...

படம்
Word of the day is PAINSTAKING... Pronunciation /ˈpeɪnzˌteɪ.kɪŋ/ Function The word PAINSTAKING is an adjective. Meaning It means extremely careful and correct, and involving a lot of effort என்று சொல்லலாம் அதாவது அதிகமான கவனத்தையும் மிகச் சரியானவற்றையும் நிறைய முயற்சிகளையும் உள்ளடக்கிய என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த PAINSTAKING என்ற இந்த வார்த்தையிலேயே இந்த வார்த்தையினுடைய அர்த்தம் அடங்கி இருப்பதை உங்களால் பார்க்க முடியும்.  அதாவது ஒரு நபர் ஒரு விஷயத்தை அல்லது ஒரு காரியத்தை அல்லது ஒரு வேலையை அல்லது ஒரு திட்டத்தை செய்து முடிப்பதற்காக பல வலிகளை தாங்கி, பல சிரமங்களை எடுத்து, பல மணி நேரமாக இரவு பகல் பாராமல் பல நாட்களாக  கடுமையாகவும் கவனமாகவும் உழைத்து அந்த வேலையை செய்யும் பொழுது அந்த இடத்திலே இந்த PAINSTAKING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு புத்தகத்தை எழுதும் பொழுது அல்லது ஒரு உண்மை வரலாற்றை எழுதும்பொழுது அல்லது அறிவியல் சார்ந்து மருத்துவம் சார்ந்து பொருளாதாரம் சார்ந்து ஒரு ஆய்வை மேற்கொள்ளும் பொழுது அல்லது கடினமான ஒரு ஓவியத்தை வர...

Know the word HOMAGE...

படம்
Word of the day is HOMAGE... Pronunciation /ˈhɑː.mɪdʒ/ Function The word HOMAGE is a noun. Meaning It refers to an expression of great respect and honor என்று சொல்லலாம் அதாவது மிகுந்த மரியாதை மற்றும் மரியாதையின் வெளிப்பாடு என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! இந்த HOMAGE என்ற இந்த வார்த்தையை வணக்கம் அல்லது மிகுந்த மரியாதை அல்லது புகழுடன் மரியாதை அல்லது அஞ்சலி போன்ற தமிழ் அர்த்தங்களில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக கடவுளுக்கு மிகுந்த மரியாதையாக வணக்கம் செலுத்தும் இடத்தில் பயன்படுத்தலாம். அடுத்ததாக ஒரு மனிதன் பிறக்கும் பொழுதே புகழோடு பிறக்கும் பொழுது அந்த மனிதனுக்கு மிகுந்த மரியாதை செலுத்தும் இடத்தில் பயன்படுத்தலாம் எடுத்துக்காட்டாக அரச குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகள். அடுத்ததாக ஒரு மனிதன் செய்த சாதனையின் மூலமாக இந்த உலக மக்கள் பயன் பெறும் பொழுது அந்த மனிதனை புகழும் வகையில் மரியாதை செலுத்தும் பொழுது அந்த இடத்தில் பயன்படுத்தலாம். அடுத்ததாக இறந்த ஒரு மனிதனுக்கு மரியாதை செலுத்தும் பொழுது அந்த இடத்திலே அஞ்சலி செலுத்துதல் என்னும் அர்த்தத்தில் HOMAGE என்ற இந்த வார்த்தையை ப...

Know the idiom HAVE SEEN BETTER DAYS...

படம்
The Idiom is HAVE SEEN BETTER DAYS. Function The idiom, HAVE SEEN BETTER DAYS should be used as a verb. Meaning It means to be old and in bad condition என்று சொல்லலாம் அதாவது பழைய மற்றும் மோசமான நிலையில் இருக்கின்ற என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு இடமோ அல்லது ஒரு வணிகமோ அதனது முந்தைய நன்னிலையை இழக்கும் பொழுது அந்த இடத்திலே HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக ஒரு கார் ஆனது பழையதாகி மோசமான நிலையில் இருக்கும் பொழுது அந்த காரை HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம். அதைப் போலவே ஒரு ஆடையானது பழையதாகி மோசமான நிலையில் இருக்கும் போது அந்த ஆடையை HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம். அதைப்போலவே நல்ல பணம் சம்பாதித்து தந்த ஒரு BUSINESS மோசமான நிலையில் இருக்கும் பொழுது அந்த இடத்திலே அந்த BUSINESS ஐ HAVE SEEN BETTER DAYS என்ற இந்த IDIOM ஐ கொண்டு விவரிக்கலாம். அதைப் போலவே ஒரு மனிதன் நல்லதொரு சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்து வயதான நிலையை அடையும் பொழுது அந்த மனிதனையும் கூட HA...

Know the word DILAPIDATED

படம்
Word of the day is DILAPIDATED... Pronunciation /dɪˈlæp.ə.deɪ.t̬ɪd/ Function The word DILAPIDATED is an adjective. Meaning It means old and in poor condition என்று சொல்லலாம் அதாவது பழைய மற்றும் மோசமான நிலையில் என்று அர்த்தம்.   அதாவது நண்பர்களே! ஒரு இடமோ அல்லது ஒரு பொருளோ ஒரு மனிதனின் அலட்சியத்தால் புறக்கணிக்கப்படும் பொழுது அந்த இடமோ அல்லது அந்த பொருளோ பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து மோசமான நிலையை அடைந்து விடும். இவ்வாறாக ஒரு இடமோ அல்லது ஒரு பொருளோ அல்லது ஒரு மனிதனின் ஆரோக்கியமோ அல்லது இரண்டு மனிதர்களுக்கிடையே உள்ள ஒரு நல் உறவோ ஒரு மனிதனின் அலட்சியத்தால் புறக்கணிக்கப்பட்டு மோசமான நிலையை அடையும் பொழுது அந்த இடத்திலே இந்த DILAPIDATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும். எனவே தமிழில் பாழடைந்த அல்லது பாழான அல்லது பழுதடைந்த அல்லது இடிந்த என்ற அர்த்தத்தில் இந்த DILAPIDATED என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.  In a sentence The bridge is dilapidated and so it is advised not to use it anymore. பாலம் பழுதடைந்துள்ளதால், அதை இனி பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ள...

Know the word FORTNIGHT...

படம்
Word of the day is FORTNIGHT... Pronunciation /ˈfɔːrt.naɪt/ Function The word FORTNIGHT is a noun. Meaning It refers to a period of two weeks என்று சொல்லலாம் அதாவது இரண்டு வார காலம் என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! இந்த FORTNIGHT என்ற இந்த வார்த்தையானது fourteen nights அதாவது 14 இரவுகள் என்ற வார்த்தையினுடைய சுருங்கிய வடிவமாகும். FORTNIGHT என்ற இந்த வார்த்தையை அமெரிக்கர்களை விட ஆங்கிலேயர்களே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் அதனால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த  இடங்களிலும் இந்த வார்த்தையானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது ஆதலால் இந்தியாவிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலேயர்கள் எழுதுகிற கதைகளிலும் கட்டுரைகளிலும் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். எனவே தமிழில் இரண்டு வாரம் அல்லது இரண்டு வார காலம் என்ற அர்த்தத்தில் இந்த FORTNIGHT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.  In a sentence The company has a plan to complete all the activities within a fortnight. இரண்டு வாரத்திற்குள் அனைத்து செயல்பாடுகளையும் முடிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. He is scared ...

Know the idiom CAN'T BOIL AN EGG...

படம்
Let's learn an idiom today... The Idiom is CAN'T BOIL AN EGG. Function The idiom, CAN'T BOIL AN EGG should be used as a verb. Meaning It means to unable to cook even the simplest meal என்று சொல்லலாம் அதாவது எளிமையான உணவைக் கூட சமைக்க முடியாத என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! ஒருவரிடம் சமைக்க தெரியுமா? என்று கேள்வி கேட்கும் பொழுது அதற்கு அவர் சாப்பிடத்தான் தெரியும் என்று நகைச்சுவையாக பதில் சொல்லும் பொழுது அந்த இடத்திலே CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். சமையலைப் பொருத்தவரையில் ஒருவர் ZERO வாக இருக்கும் பொழுது நாம் தமிழிலே "அவனுக்கு சுடு தண்ணி கூட வைக்க தெரியாது" என்று சொல்லுவோம் அந்த இடத்தில் தான் CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்த வேண்டும். மேலும் ஒருவருக்கு சுவையாக சமைக்க தெரியாத பொழுதும் அந்த இடத்திலும் கூட CAN'T BOIL AN EGG என்ற இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். எனவே தமிழில் சமைக்கவே தெரியாத என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம். In a sentence He can't boil an egg. அவனுக்கு சமைக்கவே தெரியாது. Last year...

Know the word INSPIRATION...

படம்
Word of the day is INSPIRATION... Pronunciation /ˌɪn.spəˈreɪ.ʃən/ Function The word INSPIRATION is a noun. Note INSPIRATION என்ற இந்த வார்த்தையை மூன்று அர்த்தங்களில் பயன்படுத்தலாம். Meaning முதலாவதாக It refers to someone or something that gives you ideas for doing something என்று சொல்லலாம் அதாவது யாராவதொருவரோ அல்லது ஏதாவதொன்றோ ஒன்று செய்வதற்கு தரும் யோசனை என்று அர்த்தம். அதாவது நண்பர்களே! சில நேரங்களில் நாம் ஒருவரோடு பேசும் பொழுதோ அல்லது ஒரு புத்தகத்தை வாசிக்கும் பொழுதோ அல்லது ஏதாவது ஒன்றை பார்க்கும் பொழுதோ அதிலிருந்து நமக்கு திடீரென்று ஏதாவதொரு யோசனை தோன்றும் பொழுது அல்லது ஒரு கருத்து தோன்றும் பொழுது அல்லது ஒரு திட்டம் தோன்றும் பொழுது அல்லது ஒரு எண்ணம் தோன்றும் பொழுது அந்த யோசனையை அல்லது அந்த கருத்தை அல்லது அந்தத் திட்டத்தை அல்லது அந்த எண்ணத்தை இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை கொண்டு அழைக்கலாம். எனவே இந்த அர்த்தத்தில் பயன்படுத்தும் பொழுது தமிழில் உத்வேகம் அல்லது அகத்தூண்டுதல் போன்ற அர்த்தங்களில் இந்த INSPIRATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். இரண்டாவதாக It refe...

Know the phrase NEW YEAR'S RESOLUTION...

படம்
Word of the day is NEW YEAR'S RESOLUTION... Pronunciation /ˌnuː ˌjɪrz ˌrez.əˈluː.ʃən/ Function The word NEW YEAR'S RESOLUTION is a noun. மேலும் இதனை New Year resolution என்றும் சொல்லலாம். Meaning It refers to a promise that one makes to oneself to start doing something good or stop doing something bad on the first day of the year என்று சொல்லலாம் அதாவது வருடத்தின் முதல் நாளில் நல்லதைச் செய்யத் தொடங்க அல்லது கெட்டதைச் செய்வதை நிறுத்த ஒருவர் செய்யும் வாக்குறுதி என்று அர்த்தம். நண்பர்களே! ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு புதிய தீர்மானம் எடுத்து அதனை சிறப்பாக செயல்படுத்துவது என்பது நமது வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த ஒரு நல்ல முயற்சியாக இருக்கும். இந்த புதிய தீர்மானமானது நல்ல விஷயம் ஒன்றை செய்ய தொடங்குவதாக இருக்க வேண்டும் அதே நேரத்தில் நம்மிடத்தில் காணப்படும் ஒரு குறையை  நிறுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல விஷயங்கள் என்று சொல்லும் பொழுது அதிகாலையில் எழுவது, குறைந்தது ஒரு 10 நிமிடமாவது தியானம் செய்வது, குறைந்தது ஒரு அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது, உணவில் காய்கறிகளை அதிகமாக சேர்த்...